2020-ம் ஆண்டிற்கான குடிநீர் வாரியத்தின் பத்து பெரிய வாக்குறுதிகள்

Read the Tamil translation of our article that lists the Metro Water Supply and Sewerage Board's ambitious goals on expansion of services and initiatives for 2020.

Translated by Sandhya Raju

2019-ம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான தண்ணீர் பிரச்சனையை தொடர்ந்து சென்னை பெருநகர  குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) சில இலக்குகளை வெளியிட்டுள்ளது. இது நிறைவேறினால் நம் நகரம் தண்ணீர் பாதுகாப்பு உறுதி பெறும். இது வரை முற்றிலும் தண்ணீர் வசதி பெறாத பகுதிகளுக்கும் , போதிய அளவு தண்ணீர் பெறாமல் இருந்த பகுதிகளுக்கும் இந்த ஆண்டு குடிநீர் வாரியம் தனது சேவையை அளிக்க உள்ளது. இதனுடன் கீழ்கண்ட முயற்சிகளையும் முன்னெடுக்க உள்ளது:

1. கழிவு நீர் மறுசுழற்சி

நகரத்தில் அதிகரித்து வரும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அதிகரிக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் சுழற்சி முறையில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் தற்போது உள்ளன. இவை தலா 45 mld அளவு நீரை தருகின்றன. அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இந்த நீர் பயன்படுத்தப்படுகின்றன. இதன் தொடர்சியாக பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில் மேலும் இரண்டு அல்ட்ரா வடிகட்டுதல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை வாரியம் அமைக்க உள்ளது. தற்போதுள்ள நீர்வளங்களின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த இரு நிலையங்களிலிருந்தும் தலா 10 mld நீர் பெறமுடியும்.

2. நீர் ஆதாரங்களின் பரவலாக்கம்

நீர் பற்றாக்குறை காலங்களில், சோழவரம், நெற்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய
முக்கிய ஏரிகளை நாம் அதிகம் நம்பியிருப்பது பலன் அளிக்கவில்லை. இதற்கு மாற்றாக
பெரும்பாக்கம், அயனம்பாக்கம், பெருங்குடி, ரெட்டேரி போன்ற சிறிய நீர்நிலைகளில்
மட்டுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க முடிவெடுத்துள்ளது குடிநீர் வாரியம். இதன்
மூலம் நீர் பரவலாக்கபடுவதுடன் இந்த நீர்நிலைகளின் மூலம் சுற்றியுள்ள பகுதிகளில்
நாளொன்றுக்கு 30 mld நீர் விநியோகம் செய்ய முடியும்.

3. கூடுதல் நீர் வழங்கல் திட்டங்கள்

கூடுதல் நீர் வழங்கல் திட்டம் மூலம் பிற பகுதிகளுக்கும் நீர் வழங்குவதை விரிவாக்க
குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி,
முகலிவாக்கம், எடையஞ்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், மணலி, சின்னசேக்காடு,
நெற்குன்றம், வளசரவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகள் பயன் பெறும்.

இது நாள் வரை தண்ணீர் லாரியை நம்பிக்கொண்டிருந்த சென்னை புறநகர் வாசிகளுக்கு
இந்த திட்டம் மகிழ்ச்சியை அளித்துள்ளது. “நான்கு வருடங்களாக இங்கு
வசிக்கிறேன். குடியிருப்பு வளாகத்தில் தண்ணீர் லாரி வழங்க அதிக தொகை செலவழிக்கிறோம்.
குடிநீர் வாரியத்தின் இந்த திட்டத்தால் பெருமளவு சுமை குறையும்.” என்கிறார் பெருங்குடியில்
வசிக்கும் எச். ஹரி.

4. கடைசி மைல் கழிவுநீர் இணைப்பு

“அழைத்தால் இணைப்பு”, “இல்லந்தோறும் இணைப்பு” ஆகிய இரண்டு திட்டத்தின்
கீழ் ஒரு லட்சம் இணைப்பினை குடிநீர் வாரியம் வழங்க உள்ளது. இதன் படி அம்பத்தூர், உள்ளகரம்,
புழுதிவாக்கம், மாதவரம், புத்தகரம், நொளம்பூர், ஷோலிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் பயன் பெறும்.
எந்த வித ஆவணம் இன்றி, இங்கு வசிக்கும் மக்கள் ஒரு ஃபோன் மூலம் கழிவு நீர் இணைப்பை
பெறலாம். புதிய இணைப்பு பெற்றவர்கள் ஐந்து தவணையில் இதற்கான கட்டணத்தை செலுத்தலாம்.

“இந்த திட்டம் குறித்து எங்களுக்கு தகவல் வந்தது. இது குறித்து குடியிருப்பு வாசிகளுடன் பேச்சு நடைபெறுகிறது.
இது வரை இணைப்பு வசதி இல்லாததால், இங்கு சிறிய கழிவு நீர் சுழற்சி அமைப்பு ஏற்படுத்தியுள்ளோம்.
இந்த புதிய திட்டம் மூலம் இணைப்பு பெறப்பட்டதும், இது தேவைப்படாது. அனைத்து குடியிருப்பு
வாசிகளும் ஒப்புதல் அளித்ததும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உள்ளோம்.” என்கிறார் ஷோலிங்கநல்லூரில்
உள்ள சஃபையர் குடியிருப்பு பகுதியின் சங்க தலைவர் கே. நாகமணி.

5. கூடுதல் கழிவு நீர் லாரிகள் சேவை

கூடுதலாக பெறப்பட்டுள்ள 50 லாரிகாள் மூலம், நிலத்தடி கழிவுநீர் நெட்வொர்க்குகள் இல்லாத
பகுதிகளில் இருந்து 6000 முதல் 9000 லிட்டர் கழிவை சேகரிக்க முடியும். இது வரை தனியார்
நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள்
இனி குடிநீர் வாரியத்தை தொடர்பு கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களால்
நீர்நிலைகளில் விடப்பட்ட கழிவுகள் இனி நகரத்தில் உள்ள நான்கு சுத்திகரிப்பு நிலயங்களில்
ஏதேனும் ஒன்றிற்கு கொண்டு செல்லப்படும்.”இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, ஏனெனில் இது வரை நொளம்பூர் வாசிகள் தனியார்
சேவையை நம்பியிருந்தனர். மதுரவாயில் சேவை சாலையில் உள்ள நீர்நிலையில் கழிவு நீர்
கொட்டப்பட்டு வந்தது. இந்த திட்டம் மூலம் இதற்கு விடிவு காணப்படும்”, என்கிறார் நொளம்பூரில்
வசிக்கும் பாகிரதன்.

6.நிலத்தடி நீர் கண்காணிப்பு

நிலத்தடி நீர் அதிகம் சுரண்டப்படாமல் இருக்க, தீவிர கண்காணிப்பு நடைமுறைபடுத்தப்படும்.
நகரத்தின் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய நீர்வாங்கிகளின் பயன்பாட்டை சமநிலைப்படுத்த
இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 200 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவல்கள் பொது மக்களுக்கும் தெரியப்படுத்தப்படும். தண்ணீர் பாதுகாப்பை உறுதி
செய்ய நிலத்தடி நீர் எடுத்தல் மற்றும் மழை நீர் சேகரிப்பு ஆகியவை தணிக்கை செய்யப்படும்.

“இது காலம் கடந்த செயல்திட்டம். அதிகாரிகள் இதை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்.
நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கு இது மிக அவசியம், அரசு இதில் தீவிர கவனம் செலுத்தல் வேண்டும்.
நிலத்தடி நீர் மதிப்புமிக்கது. இதை பாதுகாப்பது மூலம் கடல் நீர் மற்றும் சுழற்சி நீர் ஆகியவற்றை
நாம் சார்ந்து இருப்பதை நாம் தடுக்கலாம்” என்கிறார் இயற்கை நீர்வள இயக்கத்தின் தலைவர்
கே பி ராமலிங்கம்.

7. ஜி ஐ எஸ் மூலம் கண்காணிப்பு

நகரம் முழுவதும் உள்ள நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் பாதை வலையமைப்பை புவியியல் தகவல் அமைப்பு (GIS) மூலம் கண்காணிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வலையமைப்பில் உள்ள கோளாராறு நிவர்த்தி செய்வதோடு வாரியத்தின் பல்வேறு பயன்பாடுகளை கண்காணிக்கவும் உதவும்.  இந்த மேப்பிங் முடிந்தவுடன் மொத்தமுள்ள இணைப்புகள் கண்டறியப்பட்டு தகவல் புதுப்பிக்கப்படும். பத்து வருடம் முன்பு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இதற்கான செயலோட்டம் தொடங்கப்பட்டாலும், முழு அமைப்பின் மேப்பிங் செய்யப்படாததால் இந்த முயற்சி தோல்வியுற்றது.

8. சூரிய சக்தி பயன்பாடு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் வகுக்கப்பட்டு, படிப்படியாக சூரிய சக்தி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். முதல் கட்டமாக சென்னை குடிநீர் வாரியத்தின் அனைத்து இடங்களிலும் 25 மெகாவாட் திறன் கொண்ட நிறுவல்கள் பொருத்தப்படும். சென்னை மாநகராட்சி  திட்டத்தின் கீழ் அனைத்து அரசு நிறுவனங்களின் மேல் கட்டிடத்தில் சோலார் பேனல்கள் அமைப்பு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது அனைத்து ஸ்டேஷன்களிலும் சூரிய சக்தியை பயன்படுத்தும் திட்டம் போல் இதுவும் அமையும்.

The rehabilitation of manual scavengers on its payroll is one of the goals of Metro Water department in 2020. Pic: Wikimedia Commons (CC BY:SA 2.0

9. கழிவு துப்புறவு பணியார்களின் மறுவாழ்வு

கழிவுகளை கையால் அகற்றும் பணியார்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  இந்த ஆண்டு, இவர்களுக்கு டாங்கர் லாரி, கழிவு நீர் லாரி ஓட்டுனர் போன்ற மாற்று வேலை அமைத்துத்தர வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆனால் இந்த முயற்சி இவர்களின் வாழ்வாதாரத்தை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதில் பலருக்கு ஐயப்பாடு உள்ளது.  சஃபாய் கரம்சாரி அந்தோலன் இயக்கத்தை சேர்ந்த வி சாமுவேல் இதற்கு விளக்கமளிக்கிறார். “2018 ஆம் ஆண்டில் ஆறு மாவட்டங்களில், பல்வேறு துறைகளில்  உள்ள துப்புறவு பணியார்களை அடையாளம் காண சிறப்பு முகாம் நடத்தப்பட்டது,” என்று கூறும் சாமுவேல், “இந்த முகாமில் 2500க்கும் மேற்பட்ட கழிவு அகற்றும் பணியாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்தனர். ஆனால் பின்னர் நடத்தப்பட்ட தகவல் சரிபார்த்தலின் போது அரசின் நிர்பந்தத்தால் இந்த தகவல்காள் மாற்றப்பட்டது.  மனிதர்களால் அகற்றப்படும் கழிவு குறித்த தீவிர புரிதல் அரசு துறைக்கு உள்ளதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. புனரமைப்பின் முதல் படியே சரியான முறையில் கணக்கெடுத்தல் ஆகும்.” என்கிறார் அவர்.

10. தர உத்தரவாத ஆய்வக மேம்பாடு

தண்ணீர் தர சரிபார்த்தலை குடி நீர் வாரியத்தின் தர உத்திரவாத நிலையம் மேற்கொள்கிறது. உலக சுகாதார மையத்தின் கோட்பாட்டின் படி சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்கள் படி உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது. இந்த தர நிலையம் விரைவில் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் பணிபுரியும் ஆய்வாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Read the article in English here

Comments:

  1. Venkat says:

    Most of the residents are using motors to draw water when water-supply is done in Korattur area. Despite the fact that it was brought to the notice of the concerned officials, no action is taken and the motor usage is continued showing their muscles to the normal consumer. Normal users do not get water at all since the persons with clout are using the motor. There are illegal connections by some people associated with political parties.
    What is the plan by water board authorities to ensure everyone is getting adequate water supply?

  2. chithra says:

    Sir I have faced the same problem but when I raised the complaint they took action however not immediately they wanted to negotiate with the wrong doers amicably but I went on raising it. Finally they took action

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Similar Story

What data says about Bengaluru’s alternatives to Cauvery water

Data enthusiasts analysed possible ways to make Bengaluru self-sufficient, without relying on Cauvery river.

The Cauvery River is located 100 kilometres away from Bengaluru, 350 metres lower than the city’s elevation. The Bangalore Water Supply and Sewerage Board (BWSSB) has to spend approximately Rs. 3 crores per day as electricity charges to pump the water over such long distances. The city’s dependence on Cauvery as its primary water source prompted us to analyse this issue at the recently held 'Bengaluru Water Datajam', held by Opencity.in. Since the extraction of water from the Cauvery is recent (just 50 years ago), how did Bengaluru operate its water needs before the onset of rapid urbanisation? Since, we…

Similar Story

Insights from K-RERA: Large real estate projects add to Bengaluru’s water stress 

Huge real estate projects are mushrooming across already water-stressed Bengaluru. What do they say about their water sources?

Within just a few decades, Bengaluru has grown into the third largest city and the fifth largest metropolitan area of the country, with over 13 million people. The city’s rapid development is evident in the rise of built-up area, which has increased 37.4% in 2002 to 93.3% in 2020. In just 40 years, the extent of water bodies has reduced from 3.4% (1973) to less than 1% (2013), placing Bengaluru’s water resources under tremendous stress. Consequently, the city has come to depend heavily on Cauvery water and private water tankers or individual borewells to meet its daily demand. The overexploitation…