வீட்டுப் பணியாளர்களுக்கு உதவும் அரசு திட்டங்கள்

RIGHTS OF DOMESTIC WORKERS

Representational image by GodImage from Pixabay

Translated by Sandhya Raju

58 வயதுக்கு பின் மாத ஒய்வூதியமாக ஆயிரம் ரூபாய் பெற முடியும் என எத்தனை வீட்டு பணியாளர்காளுக்கு தெரியும்? திருமணம், கல்வி போன்றவற்றிற்கு அரசு நலத்திட்டங்கள் பெற முடியும் என எத்தனை பேருக்கு தெரியும்?

இவர்களை விடுங்கள், வீட்டு வேலைக்கு அமர்த்துபவர்களுக்கே இதை பற்றி தெரியாது.

“மாநில அரசு இந்த திட்டங்களை போதுமான அளவுக்கு மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை,  வீட்டு வேலை பார்க்கும் பல பணியாளர்களுக்கு இது பற்றி தெரியவில்லை,” என்கிறார் பெண் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பு செயலாளர் எஸ் பழனிசாமி.  இந்த அமைப்பில் முப்பதாயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களின் சமூக மற்றும் நிதி பாதுகாப்பு,  அரசாங்கத் திட்டங்களைப் பற்றி அவர்களுக்கு உணர்த்துவது போன்ற செயலில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் வீட்டு வேலை பார்க்க பணியாளர்களை அமர்த்தினாலும், ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் துறையில் இவர்கள் இல்லை. மத்திய அளவில் இவர்களின் மேம்பாடு,  நலன் காக்க வெகு சில சட்டங்கள் உள்ள நிலையில், தமிழக அரசு இத்தொழிலாளர்களுக்கென ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளது.

குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948 இன் அடிப்படையில் மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்  துறை வெளியிட்டுள்ள அரசு ஆணை 2018 இன் படி, ஒவ்வொரு வீட்டுப் பணியாளருக்கும் குறிப்பிட்ட சலுகைகள் வரையுறுக்கப்பட்டன.

இந்த சலுகைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

நலத் திட்டங்கள்

மாவட்ட வீட்டு பணியாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இந்த அலுவலகம் தேனாம்பேட்டையிலுள்ள சொக்கலிங்கம் நகரில் அமைந்துள்ளது.

குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக், ஸ்மார்ட் கார்ட், ஐந்து பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் என வாரியம் அவர்களுக்கு அட்டை வழங்கும்.

மேற்கொண்ட சான்றுகளுடன் நல வாரிய அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்.  “ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் அட்டை வழங்கப்படும்”, என்கிறார் பழனியம்மாள்.  அரசு நலத்திட்டங்களை விரைவாக பெற இந்த அட்டை உதவுகிறது.

இதன் படி இவர்கள் பெறக் கூடிய முக்கிய நன்மைகள்:

  • பெண் தொழிலாளர்களுக்கு ரூ.5000 மற்றும் ஆண்களுக்கு ரூ.3000 என திருமணத்திற்கென வாரியம் வழங்குகிறது.
  • விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் ஒரு லட்சமும் கூடுதலாக மயான செலவுக்கு ஐயாயிரம் ரூபாயும் தொழிலாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும். இந்த தொகை கட்டிட வேலை செய்பவர்களுக்கு (ஐந்து லட்சம்,மயான செலவுக்கு ஐயாயிரம்)வழங்குவதை விட குறைவானது என்றாலும், பொருளாதாரா ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இது உதவும்.
  • பத்தாம் வகுப்பு பயிலும் வீட்டு பணியாளரின் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பொது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்படுகிறது.  பதினோராம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் பயிலும் பெண் பிள்ளைகளுக்கு இரு வருடங்களுக்கும் தலா ஆயிரத்து ஐநூறு ரூபாய், ஆண் பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
  • பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும்.
  • ஐம்பத்தை எட்டு வயதை கடந்த பணியாளர்கள் நல வாரிய அலுவலகத்தில் வயது சான்றிதழ் பதிவு செய்த பின், மாத ஒய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம்

நம் வாழ்வை எளிமையாக்கும் வீட்டு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை நாம் எவ்வாறு உயர்த்த முடியும்?

அவர்களுக்கு நியாயமான சம்பளத்தை ஒவ்வொரு குடிமகனும் வழங்க முன்வர வேண்டும்.  திறன் வாய்ந்த (சமையல் வேலை) தொழிலாளர்காளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு முப்பத்தி ஒன்பது ரூபாயும், திறன்  குறைந்த (சுத்தம் செய்பவர்கள்) தொழிலாளர்களுக்கு முப்பது ரூபாயும் சம்பளமாக தர வேண்டும்.

போனஸ் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்க கட்டாயமில்லை என்றாலும், கூடுதலாக ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும்.  “எங்களுக்கு புடவையோ இனிப்போ போனஸாக தர வேண்டாம். இந்த வருடம் எங்கள் முதலாளிகளிடம் ஒரு மாத சம்பளத்தை போனசாக கேட்டோம், 75% பேர் இதற்கு ஒப்புக்கொண்டது ஆச்சரியமாக இருந்தது,” என்றார் பெசன்ட் நகரில் வேலை பார்க்கும் பி தேன்மொழி. இவர் பெண் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர் ஆவார்.

ஆனால் பணம் மட்டுமே பிரதானம் அல்ல!

தேன்மொழி போன்றவர்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறார்கள்?” எங்களை பணியாளராக மதித்து இனிமையாக பேசினாலே வேலை பார்க்கும் இடம் ஆரோக்கியமானதாக மாறும்,” என்கிறார் தேன்மொழி. 

வீட்டுத் பணியாளர்களுக்கு சமூக ஆதரவை உறுதிப்படுத்த இந்தியாவில் எந்த விதிகளும் இல்லை என்றாலும் இவற்றைப் பின்பற்றுவது  மனிதநேயமாகும்:

  • வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, கூடுதல் நேரம் பணியாற்றினால் அதற்கான தொகையை அளித்தல்.
  • வேலை பார்க்கும் இடத்தில் கழிப்பறை உபயோகிக்க அனுமதி.
  • மீதமான சாப்பாட்டை தரலாம், ஆனால் கெட்டுப்போனதை அல்ல.
  • தரையில் அமர வைப்பது, லிஃப்ட் பயன்படுத்துவதை தடை செய்தல் அல்லது பிற அடிப்படை தேவைகளை மறுப்பது போன்ற செயல்களை தவிர்ப்பது.

இன்னும் ஒரு படி மேலே சென்று அவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை பற்றி தெரியப்படுத்துவதோடு சரியான தொழிற்சங்கத்தைத் தேர்ந்தெடுக்க உதவ வேண்டும்.

(Translated by Sandhya Raju. The original article in English can be read here.)

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Laasya Shekhar 287 Articles
Laasya Shekhar is an independent journalist based in Chennai with previous stints in Newslaundry, Citizen Matters and Deccan Chronicle. Laasya holds a Masters degree in Journalism from Bharathiar University and has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. She tweets at @plaasya.