நீண்டநேர பணி, சுகாதார அபாயங்கள், வசதியின்மை: சென்னை போக்குவரத்து காவலர்களின் அன்றாட இன்னல்கள்

Life of traffic cops in Chennai

A team of traffic cops at Gemini flyover junction. Pic: Laasya Shekhar

Translated by Sandhya Raju

கடும் வெயில் கொளுத்தும் ஒரு மதிய நேரம், வெள்ளை, காக்கி உடையில் தன் வாகனத்தை ஜெமினி பாலம் அடியில் நிறுத்தி விட்டு, தலைக் கவசமின்றி வாகனம் ஓட்டிய ஒரு இரு சக்கர வண்டி ஓட்டுனரைபோக்குவரத்து காவலர் இடைமறிக்கிறார்.

தேனாம்பேட்டையில் பத்து கி.மீ தூரம் தொலைவில் வெவ்வேறு இடங்களில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள 48 வயது சி.பழனி ஈ3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார். தமிழக முதல்வரின் இல்லம் மற்றும் அஇஅதிமுக அலுவலகம் அருகே உள்ள இந்த சாலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த SIET சந்திப்பு, தேனாம்பேட்டை சிக்னல், ஆள்வார்பேட்டை என கட்டுப்பாட்டு அறை சொல்லும் இடத்தில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் இவர் ஈடுபடுகிறார். இதற்கு முன்னர், ஐந்து ஆண்டுகள், பாண்டி பஜார் சிக்னல் அருகே இவர் பணி புரிந்துள்ளார்.

எட்டு மணி நேர பணி நேரத்தில்,பல குடும்ப விழாக்களுக்கு கூட செல்ல முடியாமல் இந்த சாலைகளில் தான் இவர் அதிக நேரம் செலவிட்டுள்ளார். “போக்குவரத்து காவலராக இது என்னுடைய ஆறாவது வருடம். மூன்று எட்டு மணி நேர பணி முடிவிற்கு பின்னர் 36 மணி நேரம் ஓய்வு. ஆனால், இதுவும் முக்கியதஸ்தர்களின் போக்குவரத்து, பந்தோபஸ்து போன்றவற்றை பொறுத்தது.” என்கிறார் பழனி. உதாரணமாக, குடிமக்கள் திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடந்த தொடர் போராட்டம் காரணமாக ஓய்வு நேரத்தை இவரால் எடுக்க முடியவில்லை.

வேலை சுமை காரணமாக, பழனி போன்ற மற்ற போக்குவரத்து காவல்துறையினருக்கும் இதே நிலை தான். வெய்யிலோ மழையோ, கடும் வேலை இவர்களின் உடல் மற்றும் மன நிலையை பாதிக்கிறது.

சென்ட் தாமஸ் மவுன்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணி புரியும் 37 வயது பி.மணிமாறன் ஒரு துடிப்பு மிக்க காவலர். “காலை எட்டு மணிக்கு, பணிக்கு வந்தால் சில நேரங்களில் இரவு 11 மணி வரை பணி நீடிக்கும். சவாலாக இருந்தாலும், போக்குவரத்தை சீர் படுத்த உதவுவதால், புத்துணர்ச்சியோடு தான் பணி புரிவேன்,” எனக் கூறும் மணிமாறன் ஜி.எஸ்.டி சாலை கத்திபரா சந்திப்பில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுகிறார்.

சென்னையில் உள்ள 67 போக்குவரத்து காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறையே இந்த நிலைக்கு காரணம். “4182 காவலர்கள் தேவைப்படுகையில், ஆய்வாளர், துணை ஆய்வாளர், தலைமை கான்ஸ்டபிள்கள் என பல்வேறு நிலையில் 3091 காவலர்களே உள்ளனர். மீதியுள்ள காலி இடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என்கிறார், போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஏ.அருண்.

தொழில்முறை சவால்கள்

C Palani, Sub Inspector, Traffic, Teynampet Police Station  Pic: Laasya Shekhar

ஒரு மணி நேரத்தில் அண்ணா ரோட்டரி சந்திப்பில், குறைந்தது 4000 வாகனங்கள், புகையை கக்கிக் கொண்டும், ஒலியை எழுப்பிக் கொண்டும் செல்கின்றன, எனக் கூறும் பழனி, புகையை கக்கி கொண்டு தன்னை கடந்து செல்லும் ஆட்டோவினால், இரும்புகிறார்.

அமெரிக்க தூதரகத்தில் அருகே காற்றின் 2.5 தன்மை 96 என காட்டுகிறது. இது காற்று மாசு குறியீட்டின் படி மிதமான தரம். சுகாதாரத்திற்கு கேடு(101 என்ற அளவு) எனும் அளவை எட்ட ஒரு சில புள்ளிகள் வித்தியாசம் தான். “என்னிடம் முகக் கவசம் உள்ளது. ஆனால் அது வசதியாக இல்லை. இதை அணிவது முக்கியம் என தெரியும், என்னுடன் பணியிலுள்ள சில மூத்த அதிகாரிகள் சுவாச பிரச்சினைகளால் அவதி படுகிறார்கள் என தெரியும். இதை அணிய பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்கிறார். 

இந்த பிரச்சனை ஒரு புறமிருக்க, பல்வேறு காரணங்களுக்காக பொது மக்களின் பேச்சுக்கும் இவர்கள் ஆளாகின்றனர். “அரசின் முடிவுகளுக்காக பொது மக்கள் எங்களை குறை கூறுவர். போதிய சாலை, மேம்பாலம் வசதியின்மை போன்றவற்றிற்கு கூட மக்கள் எங்களை குறை கூறுகின்றனர், இதற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை,” என வேதனை கொள்கிறார் பழனி.

போதிய வசதியின்மை

சத்தம் மிகுந்த மாசு உள்ள சாலைகளே இவர்களின் பணியிடமாக உள்ளது. இவர்களுக்கு அவ்வப்பொழுது முகக்கவசம் அளிக்கப்படுவதாக கூடுதல் ஆணையர் அருண் தெரிவித்தாலும், அடிப்படை வசதியான  குடிநீர், டாய்லட் வசதி போன்றவை இல்லை. கோடை வெய்யிலின் பொழுது காவல் துறை இவர்களுக்கு தினமும் இரண்டு பாக்கட் மோர் வழங்குகிறது.”அந்த நான்கு மாதங்கள் மட்டும் பராவாயில்லை, மற்ற படி திண்டாட்டம் தான்” என்கிறார் மணிமாறன்.

பெண் காவலர்களின் நிலைமை பெரும் சவால் தான். “அருகில் உள்ள ஹோட்டல், திருமண மண்டபத்தில் உள்ள டாய்லட்டை தான் உபயோகிக்கிறோம்.  விடுப்பு எடுப்பதில் சிரமம், முக்கிய குடும்ப நிகழ்வுகளின் போது செல்ல முடியாதது நாங்கள் செய்யும் மிகப் பெரிய சமரசம்.  பெண் காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்ய சிறந்தவர்கள் இல்லை எனும் எண்ணம் ஏற்கனவே துறையில் உள்ளதால், உடம்பு சரியில்லை என்றால் கூட நான் விடுப்பு கோர மாட்டேன்,” என்கிறார் பெயர் கூற விரும்பாத பெண் காவலர்.

பொது கழிப்பிட வசதி எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு ” ஒன்று அவை மூடப்பட்டிருக்கும் இல்லையேல் மிகவும் மோசமான நிலையில் இருக்கும். மேலும் எல்லா இடத்திலும் பொது கழிப்பிட வசதி இல்லை.” என்கிறார் அவர்.

வீட்டு வசதி, காப்பீடு ஆகியவற்றை தவிர, மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகளும் அவ்வப்போது அளிக்கப்படுகின்றன. “வருடத்தில் இரண்டு முறை நடத்தப்படும் பயிற்சியில் மன அழுத்தத்தை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு இது பயன்படுகிறது, பின்னர் மீண்டும் பழைய நிலைமை தான்.” என்கிறார் மணிமாறன்.

பொது கருத்து

சென்னையில் யாரை கேட்டாலும் இந்த பதிலை எதிர்பார்க்கலாம்.  பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர், லஞ்சம் பெறுகின்றனர். “90 சதவீதம் பேர் லஞ்சம் பெறுபவர்கள். அபராதத் தொகையில் பாதியை கொடுத்தால் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை விட்டு விடுவார்கள். இதனால் தான் அவர்கள் மீது எனக்கு மதிப்பில்லை.,” என்கிறார் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் சிக்கி சாலமன்.

இதைப் பற்றி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பணி புரியும் மாசிலாமணியிடம் கேட்ட பொழுது “பணமில்லா வர்த்தகம் இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். அபராத தொகையின் பாதியை லஞ்சமாக கொடுக்க பொது மக்கள் முன் வரும் போது மிகவும் கறாரான காவலர்கள் கூட சலனப்படுவர். ஆன்லைன் வர்த்தகம் மூலம் அபராதத்தை கட்ட பொது மக்கள் முயற்சி மேற்கொண்டால், இதை நிச்சயம் தடுக்க முடியும்.” என்கிறார் அவர்.

[For the English version, click here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Laasya Shekhar 287 Articles
Laasya Shekhar is an independent journalist based in Chennai with previous stints in Newslaundry, Citizen Matters and Deccan Chronicle. Laasya holds a Masters degree in Journalism from Bharathiar University and has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. She tweets at @plaasya.