லாபம் காணும் டாஸ்மாக்; அதிகரிக்கும் மது அடிமைத்தனம்

ALCOHOL AND SUBSTANCE ABUSE

Chennai Corporation has included de-addiction in the premises of a primary health care at Royapettah. Pic: Laasya Shekhar

Translated by KJ Krishna Kumar

2016-17 நிதி ஆண்டு அறிக்கையின் படி “டாஸ்மாக்” அரசு மது விற்பனை நிறுவனத்தின் மொத்த வரவு : 31,247 கோடி , நிகர லாபம் 25.23 கோடி ஆகும். இது 2016 டிசம்பர் உச்ச நீதி மன்றம் 220 மீட்டர் அருகாமையில் உள்ள மதுபான கடைகளை இடமாற்றம் செய்ய இட்ட ஆணையின் படி 3321 டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூடியதினால் வந்த இழப்பையும் தாண்டி. மது விற்பனையால் அரசுக்கு கொழுத்த லாபம் வந்த நேரத்திலும், மதுவால் பாதிக்கப் பட்டோர்களுக்கு திருத்தம் செய்ய என்ன செய்திருக்கிறது / போதுமான அளவு ஏற்பாடுகள் செய்திருக்கிறதா?

சமூகநீதி மற்றும் தன்மேம்பாடு அமைச்சகம் நியமித்து AIIMS’சின் தேசிய போதைப்பொருள் மறுசீரமைப்பு மையம் செய்த ஆய்வின்படி மதுவினால் வரும் பிரச்சனைகளில் முதன்மை மாநிலமாக உள்ளது தமிழ்நாடு

போதையடிமை மறுசீரமைப்பு மையங்கள் எல்லாம் ஒரு அரசு மருத்துவமனையோடோ, பொதுநல மையங்களோடோ இணைக்கப்பட்டு இருப்பதால், தனியாக மையம் சென்னையில் எங்குமே இல்லை. போதையடிமை மறுசீரமைப்பு மையங்கள் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆரோக்கிய நிறுவனம் [IMH] ஆகிய இடங்களில் உள்ளன.

“மது மற்றும் போதையிலிருந்து மறுசீரமைப்புக்கு சற்று துண்டித்து விலகி இருத்தல் தேவைப்படுகிறது, மது அடிமைத்தனம் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத வியாதி என்பதால், பாதிக்கப்பட்டோர் இந்த விஷயதை மறைத்தே சமாளிக்க ஆசை படுவார்கள். சென்னையில் உள்ள போதையடிமை மறுசீரமைப்பு மையங்கள் மருத்துவமனையோடு இணைத்தே இருப்பதால் அப்படிப்பட்ட அந்தரங்கதையோ/மறைவையோ கொடுப்பதில்லை” என்கிறார் மருத்துவ உளவியலாளர் மற்றும் “Mind zone” நிறுவனர் டாக்டர் சுனில் குமார். மறுசீரமைப்பு மையங்களை நடத்தி பராமரிக்க VHS[ தன்னார்வ ஆரோக்கிய சேவை] மற்றும் தீபம் அறக்கட்டளைக்கு மாநில அரசு மற்றும் சென்னை மாநகராட்சி மட்டுமில்லாமல் மத்திய அரசும் நிதி கொடுத்து வருகிறது. சிகிச்சை எப்படி தரப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள சென்னை மாநகராட்சி மற்றும் மத்திய அரசு நிதியில் நடக்கும் 2 மையங்களை பார்வையிட நாங்கள் சென்றோம்.

சிகிச்சைக்கு உள்ள தேவைகளின் தட்டுப்பாடு

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பின்னே உள்ள ஒரு குறுகிய சந்துக்குள் மாநகராட்சியின் போதையடிமை மறுசீரமைப்பு மற்றும் ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு அது ஆரம்ப சுகாதார நிலையமாக பிரபலமே தவிர போதையடிமைதனத்திற்கான சிகிச்சைக்கு அல்ல, என்பதால் இதை பற்றிய விழிப்புணர்வு பெரிதாக இல்லை என்று தான் தோன்றுகிறது.

இடம் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றன. 13 படுக்கை கொண்ட மையத்தில் நோயாளிகள் உறங்கிக்கொண்டு, படித்துக்கொண்டு, அல்லது தியானம் செய்துகொண்டிருத்தனர். இந்த 15 நாள் இலவச சிகிச்சை ஏழைகளுக்கும் கீழ்-நடுத்தர மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றாலும் மாநகராட்சி சில முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த தவறியுள்ளது

சில அறைகளில் நோயாளிகள் படுக்கைகள் இல்லாததால் தரையில் படர்ந்து காணப்படுகிறார்கள். தமிழ்நாடு மாநில மனநல மருத்துவ விதிகள், 2013, 24×7 மனநல மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் இருக்கவேண்டும் என்றும் “தரையில் இதர நோயாளி படுக்கை இருக்க கூடாது” என்று தெளிவாக வரையறுத்துள்ளது. ஆனால் ராயப்பேட்டை மாநகராட்சி மையம் விதிமுறைகளை மீறி உள்ளது

“இங்கு வேலை செய்பவர்கள் என்னை தரையில் படுக்குமாறு வற்புறுத்த வில்லை ஆனால் காலியாக இருக்கும் பொழுது பிறகு வரலாம் என்று தள்ளி போட்டால் மனம் மாறிவிடும் என்று நான் தான் ஏற்றுக்கொண்டேன். குடிப்பழக்க உள்ளவர்கள் நிலையான புத்தி இல்லாதர்வர்கள் இல்லையா?” என்றார் அங்கு சிகிச்சை எடுத்த கார்த்தி T.

“ஆரம்ப சுகாதார மைய்யத்திற்கு வரும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க மருத்துவர் மதியம் இருப்பார். அதே மருத்துவர் தான் இருக்கும் நேரத்தில் போதை-அடிமை-சிகிச்சை மையத்தில் உள்ளவர்களின் பிரச்சனைகளையும் கவனிக்கிறார்”, என்று அங்கு வேலைபார்க்கும் ஊழியர் கூறினார். மையத்திற்கு வரும் மனநல மருத்துவர் மற்ற ஒரு அரசு மருத்துவமனையில் வேலைபார்ப்பதாக அந்த ஊழியர் மேலும் கூறினார். மாநகராட்சி சுகாதார துணை கமிஷனர் தொடர்புகொள்ளும் முயற்சி வீணாக போயிற்று.

மதிய அரசு நிதியில் தீபம் அறக்கட்டளை நடத்தும் தாம்பரம் கேம்ப் ரோடு மையத்தில் பயிற்சி பெற்ற உளவியலாளரோ, மனநல மருத்துவரோ இல்லை. அந்த மையத்தை (சமுதாய வேலை முதுகலை பட்ட பெற்ற )ஒரு சமூக சேவகர் நடத்தி வருவதுடன் தேவைப்படும் பொழுது நோயாளிகளுக்கு ஆலோசகராகவும் செயல்படுகிறார்.

“15 நோயாளிகளை கவனிக்க 3 ஆலோசகர்கள் உள்ளனர். என்னை போல் அவர்களும் படித்த சமூக சேவகர்கள். நோயாளிகளுக்கு நாங்கள் மனநல மருத்துவ உதவி கொடுப்பதில்லை.” என்றார் மையத்தில் இருந்த ஆலோசகர். மையத்தில் மது போதை அடிமைத்தனத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கபடுகிறது, கோவம் மற்றும் இதர மனநலம் சார்ந்த நடத்தை பிரச்சனைகளுக்கு இல்லை.

சிகிச்சை எவ்வளவு துரிதமாக இருக்கிறது

இரண்டு மையங்களுமே குறுகிய-கால சிகிச்சை மட்டுமே தருகின்றன. ராயப்பேட்டை மய்யம் 15 நாள் சிகிச்சை அளிக்க படுகிறது, தாம்பரத்தில் ஒரு மாதம் வரை சிகிச்சை பெறலாம். மதுபோதை அவ்வளவு குறுகிய கால சிகிச்சையால் குணப்படுத்த முடியுமா??

“போதை அடிமைத்தனம் முற்றியவர்களுக்கு, குடி-நிறுத்த பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு முழுமையாக குடியிலிருந்து மீள குறைந்தபட்சம் 3 மாதம் தேவை. ஆனால் துரதிஷ்டவசமாக, போதை-அடிமைகளை இந்த மையங்கள் ஒரு மாதம் தான் வைத்திருக்க முடியும். மது/நோய் திரும்பாமல் இருக்க(சிகிச்சை முடிந்த பிறகும்) தொடர்ந்து ஒழுங்காக யோகா, த்யானம், மற்றும் ஆலோசனை அவசியம்” என்றார் “Freedom Care” போதை-அடிமை சிகிச்சை மையத்தின் நிருபர் K N S வரதன். செயல் வழி சிகிச்சை(யோகா, மென்-திறன் உள்ளடக்கிய) கொடுப்பதில் இந்த/இவரின் இரு மையங்களுமே தேர்ச்சி பெற்றவை.

இரு மையங்களுமே “antabuse” என்னும் மருந்தை சிகிச்சைக்கு நம்பியிருக்கின்றனர். Disulfiram என்ற பெயரில் வரும் Antabuse மாத்திரைகள் பல விரும்பத்தகாத விளைவுகளை/அறிகுறிகளை கொடுப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடனும் மேற்பார்வையுடனும் பயன்படுத்த வேண்டும். மதுவின் மோசமான விளைவுகள் எப்படி அவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் நாசம் செய்தது என்பதை எடுத்துரைத்து ஆலோசனைகள் மூலமே போதை-அடிமைகளை மாற்ற முயற்சிக்க வேண்டும். மருந்தை எடுத்துக்கொண்டு குடித்ததால், antabuse கொடுப்பது/மட்டுமே கொடுப்பது பலர் இறக்க காரணமாக உள்ளது.

மனநல-மருத்துவர் antabuse பரிந்துரைத்த மறுநாள், ஒருவர் குடித்துவிட்டு வெளியே சென்றார், நிலை குலைந்து வலிய-நிலைக்கு என்றதால் கட்டுப்படுத்த முடியவில்லை. சுயநினைவை இழந்து விபத்துக்கு உள்ளானார். அதிர்ஷ்ம் தான் அவரை காப்பாற்றியது” என்றார் பூந்தமல்லி இல்லத்தரசி நிருபமா C.

இதர போதைப்பொருட்கள் அடிமைத்தனம்

தமிழ்நாட்டில் மது-அடிமை பரவலான போதை அடிமைத்தனமாக இருதாலும், கஞ்சா அடிமைத்தனமும் பெரிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. “மலிவான விலையில் எளிதாக கிடைப்பதால் சென்னை நிறைய/பற்பல இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி வருகிறார்கள். மெத்-படிகம் மற்றும் கோகெயின் உபயோகிக்கும் போக்கும் அதிகமாகி வருகிறது ” என்றார் Narcotics Control Bureau,[போதை கட்டுப்பட்டு பணியகம்] இயக்குனர், A ப்ருனோ.

தற்பொழுதைய போதை-மறுப்பு/சிகிச்சை மையங்கள், மது தவிர மற்ற போதை உள்ளவர்களை கண்டிப்பாக ஏற்பதில்லை. ” இதர போதை நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு விடாமுயற்சியும், நிபுணத்துவமும் வேண்டும். அவர்கள் வலிய தாக்குதல் மற்றும் வன்மையான நடத்தை வெளிப்படுத்தகூடியவர்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க எங்களிடம் போதுமான ஆட்களோ, உள்கட்டுமான வசதிகளோ இல்லை” என்றார் ராயப்பேட்டை மைய்ய ஊழியர்.

சென்னையில் போதை பொருள் பயன்பாடும் அடிமைத்தனமும் அதிகரித்து வருவதால், சிகிச்சையில் உள்ள பெரிய ஓட்டைகளை மத்திய மாநில அரசு மைய்யங்கள் அடைத்து திருத்திக்கொள்வது முக்கியமாகிறது.

Age Addictive substance  Salient factors at play
12-15 years Whiteners, nail polish removers, dry lizard’s tail
(வெள்ளை- அழிப்பான், நகம் போலிஷ், இறந்த பல்லி வால்)
No knowledge about other drugs, fear to procure them etc ( மற்ற போதை பொருட்கள் பற்றி தெரியாது, அவைகளை வாங்க பயம்)
16 -18 years Cannabis(கஞ்சா ) Seek help from peers and learn about peddlers ( உபயூகிக்கும் நண்பர்கள், மற்றும் விற்பவர்கள் தெரிந்துகொள்ளுதல்  )
18 -30 years Hardcore drugs(Methamphetamine, and LSD)
பலமான போதை மருந்துகள்(LSD, மெத்தாம்பெடாமைன்)
Chances of getting caught at home/ work are less, compared to alcohol, peer pressure
(மது போல வீட்டில்/வேலை இடத்தில்  மாட்டிக்கொள்ளமாட்டார்கள், சக நண்பர்கள் அழுத்தம்)
Above 30 -50 years Alcohol (மது) Less dependency/ staying away from parents, work culture (office parties)
சார்பில்லாமை/பெற்றோர்களை பிரிந்து வாழ்தல் / வேலையிடத்தில் கொண்டாட்டங்கள்
Above 50 years  Alcohol and Cannabis(மது, கஞ்சா) Retirement stage to kill boredom( வேலை ஓய்வு, அலுப்பை தவிர்க்க)

Read the original in English.

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Laasya Shekhar 287 Articles
Laasya Shekhar is an independent journalist based in Chennai with previous stints in Newslaundry, Citizen Matters and Deccan Chronicle. Laasya holds a Masters degree in Journalism from Bharathiar University and has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. She tweets at @plaasya.