குடிநீர் வாரியத்திடம் உங்கள் ஆழ்குழாய் கிணறுகளை பதிவு செய்யும் முறை என்ன?

BOREWELL REGISTRATION IN CHENNAI

All open wells and borewells in the city are to be registered with metro water by November end. Pic: Vijay Krishna/Flickr (CC BY:SA 2.0)

Translated by Krishna Kumar

கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ஒரு இரு வயது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி சோகத்தில் ஆழ்த்தியது. அரசின் சார்பில் அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து திறந்த கிணறுகள், மற்றும் ஆழ்குழாய்களை ஆவண படுத்தும் வேலைகள் நடந்து  வருகிறது. இதையொட்டி சென்னை குடிநீர் வாரியம், சென்னை வாசிகள் அனைவரையும் தங்கள் திறந்த கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்களை நவம்பர் மாத இறுதிக்குள் தங்களிடம் பதிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது 

நவம்பர் 1 அன்று அறிவிக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு, மாநகரத்தில் எத்தனை ஆழ்குழாய்கள் தற்போது புழக்கத்தில் மற்றும் பழுது நிலையில் உள்ளன என்பதை பற்றிய அறிய உதவும். தற்போது இத்தகவல் அதிகாரிகளிடம் இல்லை.

நீங்கள் திறந்த கிணறோ, அல்லது  ஆழ்குழாயோ வைத்திருக்கும் சென்னை  வாசியாக இருந்தால் சென்னை குடிநீர் வாரியத்தில் அதை பதிவிடுவது அவசியம். இதற்கான படிவம் இணையத்திலும், உங்கள் அருகில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்திலும் கிடைக்கும். குடிநீர் வாரிய அதிகாரிகள் வீட்டிற்கு வந்தும் படிவத்தை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

உங்கள் ஆழ்குழாய் அல்லது திறந்த கிணற்றை பதிவிடும் முறை வருமாறு:

  1. குடிநீர் வாரிய இனையதில்  இருந்து of படிவம் X பதிவிறக்கம் செய்யவும்.
  2. படிவத்தில் கேட்கப்படும் தகவல்கள், கிணற்றின் வகை, ஆழ்குழாயின் ஆழம், தோண்டப்பட்ட வருடம், பம்ப் வகை, திறன், ஆழ்குழாய் பம்ப்  மின்சார இணைப்பு எண்/வகை நிரப்புக.
  3. படிவத்தை நிரப்பிய பிறகு, நவம்பர் மாத இறுதிக்குள் உங்களுக்கு அருகில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் கொண்டு சென்று பதிவிடவேண்டும். அல்லது இணையத்திலேயே இந்த படிவத்தை பதிவிடும் வசதியும் உள்ளது.

தற்போதைக்கு படிவத்தோடு வேறு எந்த இணைப்பும் தேவையில்லை, பின்பு குடிநீர் வாரியம் மேலும் தகவல்கள் கேட்கலாம்.   

ஏன் இப்பொழுது ?

இதுகுறித்து சிடிஸின் மாட்டேர்ஸிடம் பேசுகையில் குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது, ” இரண்டு வயது சிறுவன் சுஜித் வில்சன் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து இறந்த பிறகு எடுத்த முடிவின்படி இந்த கணக்கெடுப்பு செய்து வருகிறோம். இதன் முக்கியமான நோக்கம் அனைத்து திறந்த ஆழ்குழாய்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் பயன்படுத்தப்படாமல் பழுது நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை மழைநீர் அறுவடை குழிகளாக மாற்றுவதுமே. இந்த  கணக்கெடுப்பு, ஆழ்குழாய்கள் எவ்வளவு உள்ளன மற்றும் எவ்வளவு தண்ணீர் பல்வேறு பயன்பாட்டிற்கு ஆழ்குழாய் மூலம் எடுக்கப்படுகிறது என்பதை அறிய/கணிக்க உதவும்.”

நகரவாசிகள் தாங்களாகவே படிவம் மூலம் கிணறு மற்றும் ஆழ்குழாய்களை பதிவு செய்வது எங்கள் முயற்சியின் முதல் படி. படிவங்கள் வாங்கிய பிறகு சென்னை குடிநீர் வாரியம் ஆழ்குழாய்கள் மற்றும் திறந்த கிணறுகள் என்ன நிலவரத்தில் உள்ளன என்று ஆய்வு செய்யும்.

நேரத்தில் பதிவிடவில்லை என்றால் என்ன நேரும் ?

அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும்பொழுது, நீங்கள் பதிவு செய்த படிவத்தின் அடிப்படையில் கிணறு மற்றும் ஆழ்குழாய்களின் உண்மை நிலையை செரிபார்ப்பார்கள். கள ஆய்வுக்கு பிறகு பயன்பாட்டில்  இல்லாத ஆழ்குழாய்கள் மூடவோ அல்லது மறு-பயன்பாடு செய்யவோ உத்தரவு செய்யப்படும். ஆய்வின்பொழுது பயன்பாட்டில் உள்ள ஆழ்குழாய்களுக்கு கட்டணம் மற்றும் பதிவிடப்படாத ஆழ்குழாய்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சென்னை மாநகராட்சி பகுதி நிலத்தடி கட்டுப்பாடு சட்டம், 1987ன் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்படும்.

ஆய்வு செய்த பின் சீராக உள்ள ஆழ்குழாய்களுக்கு  ஆண்டுதோறும் கட்டணம் விதிக்கப்படும். ஆழ்குழாயின் ஆழத்தைப் பொறுத்து கட்டணத்திலிருந்து விலக்கு கொடுக்கப்படலாம் என்று துறை சார்ந்த அதிகாரிகள் கூறினர்.

ஆழ்குழாய்களை பதிவிடாமை மற்றும் அவற்றின் பாதுகாப்பு விதிகளை மீறுவோர்க்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அபராதம் கட்டவில்லை என்றால் ஆழ்குழாயை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு நகரவாசிகள் தொடர்புகொள்ளவேண்டிய எண் : 044-28454080

The original article in English an be found here.

About Aruna Natarajan 160 Articles
Aruna is a staff reporter at Citizen Matters Chennai. Apart from writing, she enjoys watching football.