பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காக்கவல்ல சர்வதேச குறியீடு

SAVING PALLIKARANAI MARSHLAND

Garbage dump at Pallikaranai marshland. Pic: Laasya Shekhar

Translated by Sandhya Raju

1987 ஆம் ஆண்டில், பல்லாவரம்- துரைப்பாக்கம் 200 அடி சாலையில் பேருந்து பயணிக்கும் பொழுது கைகுட்டையிலனாலோ அல்லது புடைவை முனைப்பாலோ அனைவரும் மூக்கை மூடி கொள்வது வழக்கம்.  இன்று, சாலை விரிவாக்கப்பட்டு, இங்கு பல கல்வி, ஐ.டி நிறுவனங்கள் வந்துள்ள போதும், துர்நாற்றம் மட்டும் மாறவில்லை.சொல்லப்போனால் 1987 ஆண்டை மிகவும் மோசமாகத்தான் ஆகியுள்ளது.

சதுப்புநிலஅழிவு: பள்ளிக்கரணையின் கதை

1980 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி இந்த வளம் மிகுந்த ஈர நிலத்தில் திடக்கழிவுகளை கொட்ட  தொடங்கியது முதல் இந்த சதுப்பு நிலத்திற்கு அழிவு ஆரம்பித்தது.  ஆன்மீக நிறுவனங்கள், மத்திய மாநிலத்திற்குட்பட்ட துறைகள், கல்வி நிறுவனகங்கள் என அனைவராலும் இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 

“1972 ஆம் ஆண்டு 13500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது 1500 ஏக்கருக்கு சுருங்கியுள்ளது.  குறைந்தது 1000 குடியிருப்புகள், பெருங்குடி ரயில் போக்குவரத்து, தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியன அத்துமீறி கட்டிடம் கட்டியுள்ளது” என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹாரிஸ் சுல்தான்.

The satellite image from 16 December 2001 shows the 140-acre dump yard in Pallikaranai marsh. Credits: Harris Sultan

Taken on 9th July 2018, the image shows how the dump yard has extended to 268 acres. Credits: Harris Sultan

2018 ஆம் ஆண்டில், ₹165.58 கோடியை சதுப்பு நில மீட்புக்காக மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பெற்றது.  பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்க மாநில அரசு மேற்கொண்ட  எந்தவொரு நடவடிக்கையும் பலன் அளிக்கவில்லை.

இத்ற்கிடையே, பயோமைனிங் (biomining) திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. “இதற்காக 400 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கியுள்ளது” என்கிறார் சென்னை பெரு நகராட்சி ஆணையர், ஜி.பிரகாஷ். ஆனால் மாநகராட்சி தொடர்ந்து இங்கு குப்பையை கொட்டினால் இது எப்படி சாத்தியமாகும்?

“சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி கழிவுகளை கொட்ட பயன்படுத்தப்படும். கழிவுகளை தரம் பிரித்து. அவற்றை மைக்ரோ உர மையங்கள் மற்றும் வள மீட்பு மையங்களுக்கு கொண்டு செல்ல பல தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு வருடங்களில், சதுப்பு நிலத்திற்கு கழிவுகளை கொண்டு செல்வது முற்றிலும் குறைக்கப்படும், இதன் பிறகு சதுப்பு நிலத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பயோமைனிங் செய்யப்படும்” என விளக்கமளித்தார் பிரகாஷ். இந்த முயற்சி பலன் அளிக்குமா என காலம் தான் பதில் கூற வேண்டும்.

தொலைநோக்கு திட்டம்

சென்னையில் நிலத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சதுப்பு நிலத்தை சுற்றியுள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு தொடரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நகரத்தின் எல்லைக்குள் உள்ள இந்த் சதுப்பு நிலத்தை நாம் எவ்வாறு காப்பாற்றுவோம்?  சர்வதேச கோட்பாடுகளில் சேர்ப்பதின் மூலம் இதன் அழிவை மாற்றி அமைக்க முடியுமா? ஆம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ராம்சர் மாநாட்டில் சேர்ப்பதற்கான எல்லா அம்சங்களும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு உள்ளது.  ராம்சர் என்பது ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தம் ஆகும்.

“ராம்சர் பகுதியில் சேர்க்க தேவையான எல்லா அம்சங்களும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு உள்ளது. ராம்சார் மாநாடு ஈரநிலங்களை சரியாக பயன்படுத்துவதைக் குறிக்கிறது, மேலும் சுற்றுச்சூழல் தன்மைக்குள் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது” என்கிறார் ஹாரிஸ் சுல்தான்.

உலகம் முழுவதுமுள்ள சதுப்பு நிலங்கள் மெல்ல அழிவதால், இதைத் தடுக்க, பாதுக்காப்பை உறுதி படுத்த ராம்சர் மாநாடு உதவுகிறது. ராம்சர் பகுதி சர்வதேச அளவில் பரிசீலக்கப்படுவதால் சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

பள்ளிக்கரணைக்கு ராம்சர்

ராம்சர் மாநாட்டில்  விண்ணப்பிக்க உள்ள தமிழக வனத்துறையின் விண்ணப்பத்தை சிட்டிசன் மேட்டர்ஸ் சென்னை,பார்வையிட்டது. இது இன்னும் விண்ணப்பிக்க படவில்லை. பல முறை முயன்றும், தாமதத்திற்கான காரணத்தை கூற அதிகாரிகள் மறுத்து விட்டனர். ஆனால், நில ஆக்கிரமிப்புக்காவே இது தாமதப்படுத்தப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ” இந்த சதுப்பு நிலம் சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் பகுதியில் அமைந்துள்ளதால், எவ்வளவு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முடியுமோ அவற்றை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகவே அரசு தாமதத்தை ஏற்படுத்துகிறது” என மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Migratory bird Northern Shoveller is seen at Pallikarnai. Pic: Amar Bharathy

தென் இந்தியாவில் உள்ள கடைசி சதுப்பு நிலமான பள்ளிக்கரணை, ராம்சர் மாநாட்டில் வகுக்கப்பட்டுள்ள ஒன்பது அடிப்படை அம்சங்களில் ஏழு அம்சங்களை பூர்த்தி செய்கிறது. வகுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அம்சத்தை பூர்த்தி செய்தாலே ராம்சர் பகுதியில் இடம் பெற முடியும்.  பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை  பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் இதோ:

1. இயற்கையாக அமையப் பெற்ற சதுப்பு நிலமாக இருத்தல் வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இயற்கை கட்டுப்பாடு, மேம்பாடு மற்றும் வெள்ள பாதிப்பை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அருகிலுள்ள ஈர நிலங்களின்  நீர், உபரி நீராகவோ அல்லது வடிகால் மூலமாகவோ இந்த சதுப்பு நிலத்தை அடைகிறது. மழை காலங்களில் சுற்றியுள்ள பெரிய மற்றும் சிறிய என குறைந்தபட்சம் 30 ஈர நிலங்களிலிருந்து  உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வந்தடைகிறது.

2. கருப்பு வால் கொண்ட காட்விட், கிரேட் நாட், வண்ண ஸ்டார்க் பறவை என அழிவின் விளிம்பில் உள்ள 18 சர்வதேச பறவைகளுக்கு பள்ளிக்கரணை சரணாலயமாக உள்ளது. “பாதகத்திலும் சாதகம் உள்ளது, உணவு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக புதிய வகை பறவைகள் வருடந்தோறும் இங்கு வருகின்றன,” என்கிறார் நேச்சர் டிரஸ்ட்டின் நிறுவனர் கே.வி.ஆர்.கே. திருநரனன். இவர் பறவை பார்வையாளர் மற்றும் ஆர்வலர்.

3. 29 வகையான புற்கள் உட்பட சுமார் 114 வகை செடிகள் இந்த சதுப்பு நிலத்தில் உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளன. 164 வகை பறவைகள், 10 வகை பாலூட்டிகள், 21 வகை ஊர்வனைகள், 50 வகை மீன்கள், 9 வகை நீரினங்கள் மற்றும் மொல்லஸ்க்குகள் (நத்தைகள்), 5 வகையான ஒட்டு மீன்கள் மற்றும் 7 வகையான பட்டாம் பூச்சிகள்  என இந்த சதுப்பு நிலத்தில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.

4. செடி மற்றும் விலங்கின உயிரினங்களை அதன் முக்கிய வாழ்நிலையில் ஆதரித்தாலோ அல்லது பாதகமான சூழ்நிலையில் தஞ்சம் அளித்தாலோ, சர்வதேச முக்கியத்துவம் பெற தகுதியானது என ராம்சர் மாநாடு தெரிவிக்கிறது. புள்ளி வாத்து, விசிலிங் வாத்து, புள்ளி பெலிகன், ஊதா நிற மூர்ஹன், பின்-இறக்கைகள் கொண்ட ஸ்டில்ட், சிறிய க்ரெப், ஃபெசண்ட்-வால் ஜகானா போன்ற உயிரினங்கள் இங்கு குஞ்சு பொரிக்கின்றன.

5. ராம்சர் மாநாட்டின் படி,20,000 க்கும் மேற்பட்ட பறவைகளுக்கு ஒரு சதுப்பு நிலம் வாழ்வாதாரம் அளித்தால், அது சர்வதேச முக்கியத்துவம் பெறும். நேச்சர் டிரஸ்ட் சேகரித்துள்ள தகவலின் படி, சராசியாக, இடம்பெயர்வு பருவ காலத்தின் போது கிட்டத்திட்ட 40,000 பறவைகளுக்கும், மற்ற காலங்களில் (கோடை காலங்களில்) 5000த்திற்கும் மேற்பட்ட பறவைகளுக்கும்  பாள்ளிக்கரணை சதுப்பு நிலம் வாழ்வளிக்கிறது.

6. மார்ச் முதல் ஜூன் மாதத்தில்,  பெரிய விசிலிங் வாத்து என்ற உள்ளூர் இடம்பெயர்வு  பறவை இந்த சதுப்பு நிலத்திற்கு அதிக அளவில் (1500 வரை) வந்துள்ளது. இது தென் இந்தியாவில் அரியது. இதைத் தவிர, புள்ளி வாத்து (3500 பறவைகள்) மற்றும் மற்ற விசிலிங் வாத்து (1500 வரை) இங்கு வந்துள்ளது உலக முக்கியத்துவம் வாய்ந்தது.

7. சுமார் 50 வகை மீன் வகைகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது, இதில் சில புதியவை எனவும் தெரிகிறது.

A flock of Little Cormorant at the marsh. Pic: Amar Bharathy

ராம்சர் குறியீடு பள்ளிக்கரணையை மீட்க உதவுமா?

ராம்சர் பதிவு ஒரு சதுப்பு நிலத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக குறிப்பிடுவதோடு, சதுப்பு நிலத்தை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. சர்வதேச கொள்கை வகுப்பாளர்களின் தொடர் ஆய்வுக்கு ராம்சர் பகுதி உட்படுத்தப்படுவதால், அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. உதாரணமாக, கிழக்கு கொல்கத்தாவில் உள்ள சதுப்பு நிலம் ராம்சர் பகுதி என ஆகஸ்ட் 19, 2009 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது. 125 சதுர கி.மீ. தூரம் பரந்துள்ள இதில் உப்பு சதுப்பு நிலங்கள், உப்பு புல்வெளிகள், கழிவுநீர் பண்ணைகள் மற்றும் குளங்கள் உள்ளன. இன்றும் பொதுத்துறை மற்றும் தனியாரால் ஆக்கிரமிப்பு இருந்தாலும், இதற்கு சமூக மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு உள்ளது.

“வெறும் ராம்சர் குறியீடு மட்டுமே சதுப்பு நிலத்தை காப்பாற்றாது. ஆனால் இது போன்ற வளத்தை காக்க மக்களின் ஆர்வத்தை நிச்சயம் தூண்டும். ராம்சர் பகுதியில் கட்டுமான நடவடிக்கைகளை மாநில அரசு கட்டாயம் நிறுத்த வேண்டும்.” என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் எம். கோஷ். இவர் கிழக்கு கொல்கத்தாவில்லுள்ள சதுப்பு நிலத்தை காப்பாற்ற change.org தளத்தில் பிராச்சாரத்தை தொடங்கினார்.

சென்னையில், வெகு சில ஆர்வலர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உள்ளூர் வாசிகள் தவிர அநேக மக்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் முக்கியதுவத்தை பற்றி அறியாமலே உள்ளனர். ராம்சர் குறியீடு ஒரு மாற்றத்தை விதைக்க உதவும்.

For the English version, please click here.

About Laasya Shekhar 285 Articles
Laasya was a Senior Reporter at Citizen Matters. Prior to this, she worked as a reporter with Deccan Chronicle. Laasya has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. A Masters in Journalism from Bharathiar University, she had been experimenting at Citizen Matters with diverse formats varying from photos, videos and infographics for an interactive content presentation. Laasya is most proud of her work on beach encroachment and lake pollution, which the NGT took suo moto cognizance of. Currently, Laasya is a principal correspondent at Newslaundry. She tweets at @plaasya.