புதிய எரி வாயு இணைப்பை சென்னையில் பெறுவது எப்படி

CITIZENS' GUIDE

Pic: Krish Dulal/ Wikimedia Commons

கேஸ்  வாடிக்கையாளர்களின் எளிய, தொல்லையில்லா ஆன்லைன் வழிகாட்டி .

நீங்கள்  சாதாரண மக்களுடன் பேசி பார்த்தீர்கள் என்றால், அவர்கள் அரசு துறைகளிடமிருந்து வேலையை முடித்து வாங்குவது மிகவும் சிரமமான காரியம் என்று சொல்லக் கேட்பீர்கள் . ஆனால் ரி வாயு இணைப்பையும் எரி வாயு அடுப்பையும் அரசு நிறுவனங்களிடமிருந்து வாங்குவது அவ்வளவு கடினம் இல்லை.

ஆனால் எரி வாயு அடுப்பை வாங்கவில்லை எனில், இந்த நிறுவனங்கள் நீங்கள் ரி வாயு இணைப்பை பெற அலைக்கழிக்கக் கூடும் . அப்படி எரிவாயு அடுப்பை அவர்களிடம் இருந்து வாங்காத பட்சத்தில், வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்குப்  பின்போ, அல்லது ஐந்தாறு முறை அந்த நிறுவன அலுவலகத்திற்கு நடையாய் நடந்த பின்னரும் கூட இணைப்பு எண்ணை பெற இயலாது தவிக்க நேரிடும்.

மேற்சொன்ன காரணங்களினால் , நான் ஆன்லைன் வழியாக இணைப்பை பெற முயற்சி செய்தேன். இந்த முறையானது சுலபமாகவும், எளிமையாகவும் இருந்ததால், இந்த வழிமுறையை  உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிரேன்.

படி 1

நீங்கள் உங்களுக்கு அருகில் உள்ள ஏஜென்சியை  தேர்வு செய்வது நல்லது. ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் உள்ள ஏஜென்சியை தேர்ந்தெடுத்தால், அந்த ஏஜென்சி உங்களை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. நான் என் வீட்டிற்கு அருகில் உள்ள ஏஜென்சியை கூகுள் மேப் இனைய தளத்தின்  மூலம் அருகில் உள்ள இன்டேன்* (Indane) ஏஜென்சி என்று எழுதி கண்டுபிடித்தேன்.

நீங்கள் இன்டேனின் இனைய தளம் தொடர்பு  வழியையும் பயன்படுத்தலாம். ஆனால் இது சற்றே கடினமாக இருக்க கூடும்.

https://indane.co.in/locate_distributor.php?bgstate=24@2191&bgadistrict=502

*இதற்கு முன் நான் எச்பி (HP) மற்றும் பாரத் (Bharat) ஏஜென்சிகளை அணுக முயற்சித்தேன், ஆனால் எச்பி  ஏஜென்சி அருகில் இல்லாமையாலும், பாரத் ஏஜென்சியின் இணையதளத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகளினாலும் நான் இன்டேன ஏஜென்சியை அணுகினேன்.

எச்பி ஏஜென்சி லிங்க் – https://myhpgas.in/myHPGas/NewConsumerRegistration.aspx

பாரத் ஏஜென்சி லிங்க் -https://ebharatgas.com/bharatgas/new_request.jsp?siteid=ebharat

படி 2

மின் வழி இணையத்தில் உங்களுக்கு ஏற்ற ஏஜென்சியையும் , உங்களைப் பற்றிய விவரங்களையும் புதிய  தொடர்பை பதிவு செய்யவும்.

இணைப்பு லிங்க் :https :/indane.co.in/new_connection .php

நீங்கள் மேற்பட்ட விவரங்களை சரியாக  பதிவு செய்த பின்னர், நீங்கள் உங்கள் ரெஜிஸ்டிரேஷனை  உறுதி செய்யும்படி கோரப்படுவீர்கள்.இதற்கு நீங்கள் இ- மெயிலில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை பயன்படுத்த வேண்டும்.இந்த லிங்க் 48 மணி நேரம் வரை மட்டும் பயன் படுத்த முடியும்.

படி 3

இ- மெயிலில் அனுப்பப்பட்டுள்ள லிங்க்கை பயன் படுத்தி ,உங்கள் ரெஜிஸ்டரேஷனை உறுதி  செய்யவும்.

படி 4

மேற்சொன்ன லிங்க்கை தேர்ந்தெடுத்தால்,

https :/indane.co.in/applynewconnection.php என்ற பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் அந்தப் பக்கத்தில் உள்ள படிவத்தை நிறைவு செய்ய வேண்டும்.

உங்கள் அடையாள அட்தாட்சியையும், முகவரி  அட்தாட்சியையும் நிருபிக்க வேண்டும். அட்தாட்சிக்கு  வேண்டிய ஆவணங்கள் பட்டியல் அந்த படிவத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை ஸ்கேன் செய்து, அவற்றை அந்த இனைய தள பக்கத்திலேயே பதிவு ஏற்றம் செய்து கொள்ளவும்.

படி 5

நீங்கள் இணைய தளத்தில் பதிவு ஏற்றம் செய்த பின், இ-மெயில் மூலமாக இணைப்பு வேண்டுதல் உங்களுக்கு அனுப்பப்படும்.

படி 6

கிட்டத்ததட்ட 3 நாட்களுக்குப் பிறகு , நீங்கள் அனுப்பிய ஆவணங்கள் சரி பார்க்கப்பட்ட பின், உங்களுக்கு கீழ்கண்ட மெயில் அனுப்பப்படும்.

அதில் https :/indane.co.in/check_connection_status.php என்ற லிங்க்கை கிளிக் செய்து , அதில் கேட்கப்பட்டுள்ள  விவரங்களைப் பூர்த்தி  செய்யவும். ஸ்டேட்டஸ் லிங்கில், ஆன்லைன் மூலமாக பணம் கட்டுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

படி 7

நீங்கள் கட்டணம் செலுத்தியவுடன் கீழ்கண்டது போன்று ஒரு இ-மெய்ல் உங்களுக்கு அனுப்பப்படும்.

படி 8

ஒரு நாளுக்குப் பின், உங்களின் எஸ் வி (ESV – E-Subsriber Voucher) இமெயில் அனுப்பப்படும். அதை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.

இதன் பின்னர், உங்கள் சிலிண்டர் டெலிவெரிக்காகஆட்டோபுக் செய்யப்படும். உங்கள் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட பின், நீங்கள் கீழ்கண்ட முறையில் ஏஜென்சியை அணுகலாம்.

படி 9

லிங்க் https:/indane.co.in/check_ connection_status.php  என்ற இடத்திற்குச் செல்லவும்.

இது உங்களுடைய இணைப்பு அனுமதியையும், மேற்கண்ட பல்வேறு செய் முறைகளையும் காண்பிக்கும்.

நீங்கள் மேல் காண்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் எஸ்வி பிரிண்டுடன், மூன்று பாஸ்போர்ட் புகைப்  படங்களையும் எடுத்துக்கொண்டு ஏஜென்சிக்குச் செல்லவும். ஏஜென்சி உங்களுக்கு இறுதி இ-எஸ்வி ஆவணத்தை கொடுக்கும். இந்த   ஆவணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.இது பின்னாளில் நீங்கள் வேறு ஏஜென்சியின் மற்றொரு முகவரிக்கு மாற்றம் செய்ய விரும்பினால் தேவைப்படும்.

 

பின்குறிப்பு :

என் வீட்டில் உள்ள கேஸ்  ஸ்டவ்வை சரியான முறையில் பரிசோதித்தும், கேஸ் பில்லைச் சரிபார்த்தும், ஸ்டவ் புதிதாகவும், தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கின்றதா எனவும் பரிசீலித்து இருக்க வேண்டும்.ஆனால் இவை நடை பெறவில்லை.

ஆனால் எனக்கு, என்னுடைய மூன்று நாட்கள் கழித்து பணம் கட்டிய தாமதத்தைக்  கழித்த பின்னர்,ஒரு வார காலத்திலேயே கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translation into Tamil by Namachivayam (Volunteer, FEDARA) and Aruna Natarajan

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Mahesh Kumar S T 12 Articles
Mahesh Kumar S T is a prolific writer on citizen issues, particularly with respect to the election process and voter education. He can be reached at stmaheshkumar@gmail.com