செவிக்கு கோளாறு இல்லாது பிறப்பதற்கும், அப்படியே பிறந்தாலும் பேசும் திறன் பெறுவதற்கும் உள்ள வழிமுறைகள்

HEARING IMPAIRMENT IN CHILDREN

Pic: Pixabay

என் பள்ளித் தோழி மும்பையில் இருந்து, தன் ஒரு வயதே ஆன செவித் திறன் குறைந்த மகளுக்கு பேச்சு வருவதற்க்காக, பாலா வித்யாலயா  இளம் செவித் திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளி பற்றி கேள்விப் பட்டு சென்னை வந்திருந்தாள். அவர்கள் செவித்திறன் குறைந்த பிள்ளைகளுக்காக ஆற்றிடும் சேவைகளை பற்றி விரிவாக எடுத்து சொன்னாள். 48 வருடங்களுக்கு முன்  பாலா வித்யாலயா, இளம் செவித் திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளி தொடஙக்கப்பட்டு, இதன் மூலம்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பேசும் திறமை பெற்று உள்ளார்கள் என்றும் கேள்விப்பட்டதாக சொன்னாள்.

அப்பொழுது, நான்  20-2-2016 ல் ‘தி டெலிகிராப்’ (The Telegraph) பத்திரிக்கையில்  வால் நரம்பு உள்வைப்பு  (cochlear  implant) பற்றி வந்த செய்தியினைப் படித்தது நினைவிற்கு வந்தது . இக்  கருவியின் மூலம் பழுது அடைந்த ,   திறன் குறைந்த செவிகளுக்கு வரும் ஒலியினை மூளைக்கு மின்னணு  சமிக்ஞைகள் மூலம் அனுப்ப முடியும், அதனால் பேச இயலாதவர்களையும் பேச செய்ய முடியும் என்று எழுதியிருந்தார்கள்.

அரசாங்கம் 2016 ல் வருமானம் குறைவாய் உள்ள குடும்பத்தில் இருந்து, 4 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் செலவில் இந்த அறுவை சிகிச்சையினை செய்தனர். அவர்கள் இப்பொழுது பேசும் திறன் பெற்று விட்டாலும், இந்த நான்கு குடும்பங்களும் இப்பொழுது மின்கலம் (பாட்டெரிஸ்) ஆகும் செலவினய் எதிர் கொள்ள முடியாது தவிக்கின்றார்கள் . இக்  கருவி பழுது அடைந்தாலும் சீர் செய்ய நம்மால் முடியுமா என்று யோசிப்பதாகவும் அந்த செய்தி துளியில் இருந்தது.

இதனைப்  படித்த பொழுது, இதற்கு பதிலாக இவர்கள், அரசு இலவசமாக தரும் கேட்க்கும் சாதனம்  (Hearing Aid ) ஒன்றினை பொருத்தி , செவித் திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்திருக்கலாமோ  என்று என்னை யோசிக்கச்செய்தது.

20.2.17 ல்தி ஹிந்து’ பத்திரிக்கையில் ருபெல்லா தடுப்புஊசி (Ruebella vaccine ) பற்றி ஒரு செய்தி வந்துள்ளதும் நினைவிற்கு வந்தது. ‘A  woman infected with the rubella virus during the early stage of pregnancy has a 90% chance of transmitting it to the foetus. The virus can cause hearing impairments, eye and heart defects and brain damage in newborns, and even spontaneous abortion and foetal deaths.’ இந்த தடுப்பு ஊசியை ஒவ்வொரு பெண்ணும் பிரசவ காலத்திற்கு முன்பே எடுத்தால் செவித் திறன் குறைபாடு, மூளை பாதிப்பு, கண், இதயக் கோளாறுகளை தடுக்க முடியும் என்று நிறைய ஆராய்ச்சிகளுக்கு பின் அறிவித்துள்ளார்கள் . அரசாங்கமும்  2020க்குள், போலியோ (polio) , மீசல்ஸ் (measles) போன்றவற்றுக்கு தடுப்பு ஊசி போடுவது போல் இதற்கும் பள்ளிகளின் மூலம் எல்லா பெண்களுக்கும் தடுப்பு ஊசி போடப்  போவதாக அறிவித்துள்ளது . இதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வானொலி,தொலைகாட்சி, பத்திரிக்கைள் மூலம் அறிவிக்க வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம்.

என் தோழி சொல்லியவைகளும், நான் படித்ததும் என்னை உடனே இப் பள்ளியை நடத்துபவர்களை பார்த்து பேச வேண்டும், இவர்கள் ஆற்றிடும் சேவைகளையும், இளம் செவித் திறன் குறைபாடு உடையவர்கள் குறை நீக்கி பேசும் திறன் பெற்றிட வைக்கும் அதிசயத்தையும் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை எழுப்பியது.. பள்ளியை நடத்திடும் மூவரையும் பார்த்து நான் பேசித் தெரிந்துகொண்டவைகளை அடுத்து வரும் செய்தி துளிகளில் கூறுகிறேன்.

 

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Visalakshi Palaniappan 3 Articles
The author has not yet added any personal or biographical info to her or his author profile.