கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் சென்னைவாசிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

TIPS AND GUIDELINES FOR THE COVID-AFFECTED

சரியான நேரத்தில் கோவிட்-19 தொற்றை பற்றி அறிதல் சிகிச்சைக்கு மிக முக்கியம். படம்: சென்னை மாநகராட்சி

Translated by Sandhya Raju

சுமார் 25,000 பேருக்கு தொற்று உள்ள நிலையில், சென்னை நகரம் இன்னும் தொற்றின் பிடியிலிருந்து சற்றும் குறையவில்லை. அதிக நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், எங்கு பரிசோதனை செய்வது, சரியான மருத்துவமனையை தேர்ந்தேடுப்பது ஆகிய அடிப்படை விஷயங்கள் குறித்த புரிதல் இன்னும் பலருக்கு இல்லை. இதன் விளைவாக பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானால், அடிப்படை விஷயங்களை பற்றி சரியான புரிதல் இல்லாததால் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் பயத்தை ஏற்படுத்துகிறது.

“சென்னையில் கோவிட்-19 தொற்றால் ஏற்படும் மரணத்திற்கு பெரும்பாலும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததே காரணம். தொற்று அறிகுறியை அறிந்து தாமதிக்காமல் சிகிச்சை எடுத்துக்கொள்வது இந்த நேரத்தில் மிக அவசியம்” என்கிறார் ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கே. தனசேகரன்.

உங்களுக்கு தொற்று ஏற்பட நேரிட்டால், கிருமி மற்றும் நோய் குறித்து சரியான தகவலை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் கருதி, உங்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டியை இங்கே தொகுத்துள்ளோம்.

தகவல் ஆதாரம்: சென்னை மாநகராட்சி

முன்னெச்சரிக்கைகள் மற்றும் பரிசோதனை

  • ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல், தொண்டை புண், நெரிசல், தலைவலி, உடல் வலி, வாசனையின்மை, சுவையின்மை ஆகியவற்றை எதிர்கொண்டதாக தொற்று ஏற்பட்டவர்கள் கூறுகின்றனர். ஆனால், அறிகுறியற்ற நோயாளிகள் இவற்றில் எதையும் உணர மாட்டார்கள்.
  • கோவிட்-19 தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள மருத்துவ சுகாதார பணியாளர்கள் ஆகட்டும் அல்லது அறிகுறியற்ற நோயாளிகளாகட்டும், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்ள ஆக்சிமீட்டரை வாங்குங்கள். மிகவும் ஆரோக்கியமான நபர்களுக்கு 95 சதவிகித ஆக்ஸிஜன் செறிவு நிலை உகந்ததாக கருதப்படுகிறது. ஆக்ஸிஜன் செறிவு நிலை 90% கீழே சென்றால் உடனடி மருத்துவ உதவி நாட வேண்டும்.
  • கோவிட்-19 தொற்று அறிகுறி தென்பட்டால், ICMR அங்கீகாரம் பெற்ற மருத்துவ ஆய்வகங்களில் ஸ்வாப் (swab) பரிசோதன மேற்கொள்ளவும். பரிந்துரை இல்லாமலேயே இந்த பரிசோதனையை மேற்கொள்லலாம் என ICMR விதியில் குறிப்பிட்டிருந்தாலும், பெரும்பாலான மருத்துவ ஆய்வகங்கள் இதை கடைப்பிடிப்பதில்லை. தனியார் ஆய்வகத்தில் ஸ்வாப் பரிசோதனைக்கு ₹4000 முதல் ₹6000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ICMR அங்கீகாரம் பெற்ற மருத்துவ ஆய்வகங்களில் பட்டியல்
  • அனைத்து மண்டலங்களிலும் சென்னை மாநகராட்சி நடத்தும் காய்ச்சல் கிளினிக்குகளிலும் சோதனை செய்யலாம். உங்கள் அருகாமையில் உள்ள கிளினிக்கை இங்கே அறியலாம்.
  • ஸ்வாப் பரிசோதனை மேற்கொண்ட 48 மணி நேரத்தில் முடிவு உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனை முடிவு தொற்று உள்ளது என உறுதியானால், உங்கள் மண்டல மாநகாராட்சி அலுவலுருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.

எனக்கு தொற்று உள்ளது! மருத்துவமனை செல்ல வேண்டுமா அல்லது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டுமா?

14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலை சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கீழ்கண்ட சூழலில் பரிந்துரைப்பார்

  • கோவிட் தொற்று உள்ள நபருடன் தொடர்பில் இருந்தால், வெப்ப நிலையை கண்காணிப்பது அவசியம்.
  • அறிகுறியின்றி கோவிட் தொற்று ஏற்பட்டால்.
  • இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற இலேசான அறிகுறி தென்பட்டால்.
  • நோயாளிக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய், நாள்பட்ட நுரையீரல் / கல்லீரல் / சிறுநீரக நோய் போன்றவை இல்லை என்றால்.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நோயாளியின் கண்காணிப்பாளர் அவ்வப்போது நோயாளியின் உடல் நலத்தை கண்காணிக்க வேண்டும். நோய் அறிகுறி (மூச்சு திணறல், ஆக்சிஜன் அளவு 90% விட குறைதல், நெஞ்சு வலி, முகம் அல்லது உதடு நிறம் மாறுதல்) தீவிரமடைந்தால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

கோவிட் தொற்று குணமடைந்து வீடு திரும்பியதும், தனிமைப்படுத்தி கொண்டு முழுவதுமாக குணமடைந்து விட்டார் என அறியும் வரை கண்காணிப்பில் இருத்தல் வேண்டும்.

வீட்டு தனிமையில் இருக்க, குறைந்தது குளியலறையுடன் கூடிய இரண்டு அறைகளும், கண்காணிப்பாளரும் அவசியம். வசதி இல்லையெனில் மாநகராட்சி அதிகாரிகளை அணுகினால் அருகிலுள்ள கோவிட் பராமரிப்பு சென்டரை (உதாரணமாக கல்வி நிலையம், ஹோட்டல்) பரிந்துரைப்பார்.

(மூலம்: சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம்)

தயார் நிலையில் கிட் வைக்கவும்
கோவிட் பராமரிப்பு நிலையத்திற்கு செல்லும் முன், ஆவணங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கிட் தயாராக வைக்கவும்.
அத்தியாவசியம்: துணிமணிகள், அலைபசி, லாப்டாப், சார்ஜர், டெபிட் கார்ட், ஆக்சிமீட்டர், முக கவசம், தெர்மாமீட்டர், தின பராமரிப்பு தேவைகள், தண்ணீர் பாட்டில், எலெக்டிரிக் கெட்டில் மற்றும் சானிடைசர்.
ஆவணங்கள்: காப்பீடு தகவல்கள், மருத்துவ கோப்புகள், ஒவ்வாமை பட்டியல்.
மூலம்: Citizen Matters Bengaluru

மருத்துவமனை அனுமதி அடிப்படை

  • அருகிலுள்ள அரசு மருத்துவமனையை தேர்ந்தெடுத்து படுக்கைகள் உள்ளதா என கண்டறியவும். அரசாங்க நிறுவனங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றால், உங்கள் மண்டலத்தில் உள்ள மாநகராட்சி அதிகாரியை அழைக்கவும் (தகவல் கீழே)
  • உங்கள் மண்டலத்தில் உள்ள சென்னை மாநகராட்சி அதிகாரியை தொடர்பு கொண்டு அரசு மருத்துவமனை குறித்து கேட்டறியவும் (தகவல் கீழே). நோயின் தீவிரத்தை அறிய வீட்டிற்கே ஒரு மருத்துவரை மாநகராட்சி வரவழைக்கும்.
  • தனியார் மருத்துவமனைக்கு செல்ல விருப்பப்பட்டால் முன்னதாகவே படுக்கை உள்ளதா என தெரிந்து கொள்ளவும். தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் மற்றும் தொடர்பு தகவல்கள் இங்கே உள்ளது.
  • தனியார் மருத்துவமனைகளில், ஏழு நாள் கோவிட் சிகிச்சை பாக்கேஜ் சுமார் ₹2-3 லட்சம் (சிலவற்றில் கூடுதலாகவும்) வரை ஆகும்.
  •  மருத்துவ காப்பீடு இருந்தால், அதில் இந்த சிகிச்சையும் சேர்த்திருக்கப்படும். கோவிட் சிகிச்சை காப்பீடு குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இங்கு பெறலாம்.
  • மருத்துவமனைக்கு (அரசு அல்லது தனியார்) ஆம்புலன்சில் மட்டுமே செல்ல வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி பெற 108-ஐ அழைக்கவும். தனியார் மருத்துவமனை என்றால் அவர்களே ஆம்புலன்ஸ் அனுப்புவர்.
  • தொற்று பரவல் காரணமாக குடும்பத்தாரையோ அல்லது வேறு நபரையோ,மருத்துவமனையில் உடன் தங்க அனுமதிக்க மாட்டார்கள்.
தகவல்: சென்னை மாநகராட்சி
  • வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், சென்னை மாநகராட்சி சுகாதார பணியாளர் தினமும் உங்களின் உடல் நலம் குறித்து நேரிலோ அல்லது தொலைபேசியிலோ கண்டறிவார். எந்த தகவலையும் மறைக்காமல் தெரிவிப்பது நன்மை அளிக்கும்.
  • நீங்கள் தொடர்பில் இருந்த அனைவரின் விவரங்களையும் தெரிவியுங்கள். தொற்று அறிகுறி தெரிந்த இரண்டு நாள் முன்பு வரை தொடர்பில் இருந்தவர்கள் பற்றி தகவல் அளிக்கவும் (அல்லது தொற்று அறிகுறி ஏற்பட்ட பின் அதிகபட்சம் 14 நாட்கள்).

அவசியம் தெரிவிக்க வேண்டியவை

  • தொற்று ஏற்பட்டவரின் குடும்ப உறுப்பினர் உடனடியாக மாநகராட்சி அலுவலரை (மண்டல வாரியான தகவல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது) தொடர்பு கொள்ள வேண்டும். அனைவருக்கும் ஸ்வாப் பரிசோதனை மேற்கொள்ள, இவர் ஏற்பாடு செய்வார்.
  • காவல் அதிகாரி அல்லது FOCUS (Friend of COVID Citizen Under Surveillance) குழுவின் தன்னார்வலருக்கோ தகவல் அளிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள், தேவைகள் ஆகியவற்றை பெற இவர்கள் உதவுவர்.
  • வீடு முழுவதையும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய சுகாதார பணியாளரையும், மாநகராட்சி அலுவலர் அனுப்புவார்.
  • அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள், குடியிருப்பு சங்க தலைவர் / செயலாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

சிகிச்சை மற்றும் டிஸ்சார்ஜ்

  • மிக இலேசான அறிகுறி: மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லாதது மற்றும் அறிகுறி தென்பட்ட பத்து நாட்களுக்கு பின் டிஸ்சார்ஜ்
  • மிதமான அறிகுறி: மூன்று நாட்களுக்குள் காய்ச்சல் சரியாகி ஆக்சிஜன் நிலை சீரக இருந்தால், அறிகுறி தென்பட்ட பத்து நாட்களுக்கு பின் டிஸ்சார்ஜ். தொடர்ந்து மூன்று நாட்கள் ஆக்சிஜன் நிலை சீராக இருத்தல் அவசியம்.
  • கடுமையான அறிகுறி: மூச்சுத் திணறல், ஆக்சிஜன் அளவு குறைதல், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் (HIV, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், புற்று நோய் உள்ளவர்கள்) ஆகியோர் இந்த பிரிவின் கீழ் வருவர். RT-PCR பரிசோதனை முடிவில் எதுவுமில்லை என்ற முடிவு தெரிந்த பின்னரே இவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.

(தகவல்: தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை)

தகவல் குறிப்பு

  • நெருக்கடியான சூழலில் கவலை, குழப்பம் அல்லது சோகம் ஏற்படுவது இயல்பு. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்கோப்போடு வைத்துக் கொள்ள, நீங்கள் நம்பும் நபர்களுடன் பேசுங்கள். சென்னை மாநகராட்சியின் உளவியல் ஆதரவுக்கான தொலைபேசி ஆலோசனை மையத்தையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்: 044 46122300
  • வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள போது உதவிக்கு தொடர்பு கொள்ள: 044 25384520

[Read the original article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Laasya Shekhar 287 Articles
Laasya Shekhar is an independent journalist based in Chennai with previous stints in Newslaundry, Citizen Matters and Deccan Chronicle. Laasya holds a Masters degree in Journalism from Bharathiar University and has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. She tweets at @plaasya.