சென்னையில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை, அங்கு நிலவும் சூழல் என்ன?

கோவிட்-19: சென்னையில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் குறித்த கேள்விகள்

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
நகரம் முழுவதும் உள்ள தடைசெய்யப்பட்ட மண்டலங்களை சென்னை மாநகராட்சி வரையுறுத்தியுள்ளன. படம்; ஆல்பி ஜான் / ட்விட்டர்

Translated by Sandhya Raju

கோவிட்-19 தொற்று எண்ணிக்கையில்  நாட்டின் முதல் பத்து இடங்களில் சென்னை இடம் பெற்றுள்ளது. நகரத்தின் இரண்டு மண்டலங்கள் தவிர அனைத்து பிற பகுதிகளிலும் தொற்று பரவியுள்ளது.

118 பேருடன் ராயபுரம் முதல் இடத்திலும், அதற்கடுத்து 56 பேர் தொண்டியார்பேட்டையிலும், 49  பேர் திருவிக நகரிலும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மண்டல வாரியாக தொற்று குறித்த பட்டியல். படம்: சென்னை மா நகராட்சி

தொற்று மேலும் பரவாமல் தடுக்க, இந்த இடங்களை மாநகராட்சி தனிமைப்படுத்தியுள்ளன. இதற்காக, இந்த பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு மண்டலங்கள் என்றால் என்ன?

கோவிட்-19 தொற்றை தடுக்க, சென்னை மாநகராட்சி, நகரம் முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் நிறுவியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்த மண்டலங்கள்  வரையுறுக்கப்பட்டுள்ளது. தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டதும், அவர் வசிக்கும் இடத்தை சுற்றி உள்ள தெருக்கள்  கட்டுப்பாட்டு மண்டலமாக குறிப்பிடப்படும். இந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு  நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சிறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அத்தகைய மண்டலங்கள் எத்தனை உள்ளன?

ஏப்ரல் 24ம் தேதி நிலவரப்படி 400 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்பொழுது நகரத்தில் 112 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளது.  கோட்டூர்புரம் மற்றும் தி.நகரில் உள்ள சில பகுதிகள் சமீபத்தில் தான் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் எந்ததெந்த தெருக்கள் இதில் அடங்கும் என அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. மாநகரட்சியின் சமீபத்திய தகவலின் படி  அனைத்து மண்டலங்களிலும் மொத்தம்  84 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தகவல் பெறப்பட்டதும், தரவு விவரங்கள் புதிப்பிக்கப்படும்.

** கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பிற தெருக்கள் பற்றி புதிப்பிக்கப்பட்ட விவரப்பட்டியல் மாநகராட்சியிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த பகுதிகளில் எத்தனை பேர் வசிக்கின்றனர்?

சென்னை மாநகராட்சியின் தகவலின்படி, ஏப்ரல் 16ம் தேதியிலான தரவின் படி, மொத்தம்  10,56,738 வீடுகளும் 20,19,211 குடும்பங்களும் சென்னையில் பல்வேறு கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பதாக தெரிவித்துள்ளது.  இந்த பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும்  கோவிட்-19 அறிகுறிகள் உடையவர்களை பார்வையிடுவதுடன், வயதானோர், கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் அல்லது நீரிழிவு நோய் உடையவர்களையும் தினந்தோறும் சுகாதார அதிகாரிகள் பார்வையிடுகின்றனர். இதற்காக 12,000 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் என்ன?

கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள தெருக்கள் முழுவதும் தடுப்புகள் போடப்பட்டு, போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.  இவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் பெற்று வீட்டில் தருகிறார்கள். இந்த பகுதிகளில் உள்ள பிறர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களை தடுப்பு போடப்பட்டுள்ள இடங்களில் வந்து பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தடுப்புகள் அருகே கை கழுவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரும் காவல் துறை அதிகாரியும் 24 மணி நேரமும் இங்கு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டு  பகுதிகளில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது, படம்: ஆல்பி ஜான் / டிவிட்டர்

மாநகராட்சி இந்த பகுதிகளில் தினமும் கிருமி நாசினி தெளிக்கிறது.  கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தினந்தோறும் அங்கு வசிப்பவர்களுக்கு தொற்று அறிகுறி உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது. தொற்று ஏற்பட்டுள்ள நபரிடம் தொடர்பில் இருந்தவர்களை அல்லது தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக கோவிட்-19 தொற்றுக்காக பரிசோதிக்கப்படுகின்றனர். ஏப்ரல் 19-ம் தேதி வரை கட்டுப்பாட்டு மண்டலங்களில் மட்டும் மொத்தம் 6300 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டு மண்டலத்தில் உங்கள் தெரு உள்ளதா என எப்படி தெரிந்துகொள்வது?

உங்கள் பகுதியில் அல்லது அருகாமையில், கட்டுப்பாடு உள்ளதா என்பதை சென்னை மாநகராட்சி அமைத்துள்ள கன்டைன்மென்ட்  வரைபடம் மூலம் அல்லது கொரோனா மானிடரிங் ஆப் தறவிறக்கம் செய்துஅறிந்து கொள்ளலாம் .

கட்டுப்பாட்டு மண்டலங்கள் குறித்த தகவல்கள் கொரோனா மானிடரிங் ஆப்-பில் உள்ளன

கட்டுப்பாட்டு மண்டலங்களில் வாழ்க்கை எப்படி உள்ளது?

மண்டலம் 3-ல் கங்கை அம்மன் கோயில் தெருவில் வசிக்கும்  ராகுல்* கட்டுப்பாடு நடவடிக்கைகள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் உறுதி அளிப்பதாக கூறுகிறார். “பக்கத்து தெருவில் உள்ள ஒருவருக்கு பயணம் காரணமாக தொற்று ஏற்பட்டுள்ளது.  எங்கள் பெற்றோர்கள் வயதானவர்கள் என்பதால் இதைக் கேள்விப்பட்டதும் கவலை அடைந்தோம். தடுப்புகள் போடப்பட்டதும், இங்கு வசிப்பவர்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். தேவையான பொருட்கள் வீட்டிற்கே வந்து கொடுக்கிறார்கள், மேலும் அதிகாரிகள் உடல் நலத்தை கண்காணிக்கின்றனர். ஒரே இடத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது கடினமாக இருந்தாலும், இது அவசியம் என்பதை உணர்கிறோம்.”

அத்தியாவசிய பொருட்கள் தடுப்பின் அருகில் டெலிவர் செய்யப்படுகின்றன படம்: ஆல்பி ஜான் / டிவிட்டர்

கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள முதியோர்கள் சிறப்பாக கவனிக்கப்படுகின்றனர். இது சந்தோஷம் அளிப்பதாக மண்டலம் 5-ல் கே சி கார்டனில் வசிக்கும் கே கலியப்பெருமாள் கூறுகிறார். “தெரு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டதும் எனக்கும் என் மனைவிக்கும் அசௌகரியமாக இருந்தது. எங்களுக்கு 70 வயதாகிறது, எங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஆனாலும், இந்த ஊரடங்கில் எந்த வித பிரச்சனையும் நாங்கள் சந்திக்கவில்லை. அத்தியாவசிய பொருட்களை சென்னை மாநகராட்சியினர் வீட்டிலேயே கொண்டு தருகின்றனர். எங்களுக்கு தேவையான மருந்துகளையும் வாங்கி தருகின்றனர். மிக விரைவில் இந்த சூழலிலிருந்து மீள்வோம் என நம்புகிறோம்.”

கட்டுப்பாட்டு மண்டலங்களில் எப்பொழுது கட்டுப்பாடு தள்ர்த்தப்படும்?

தளர்வு குறித்து எந்த வித அறிவிப்பு இது வரை இல்லையென்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டுப்பாடுகள் தளர்த்த கூடுதல் காலமாகலாம். தினந்தோறும் கண்காணிப்பு, தொற்று மேலும் பரவாமல் இருக்க உதவுகிறது. 28 நாட்களில் புதிதாக கோவிட்-19 தொற்று அந்த பகுதியில் ஏற்படாமல் இருந்தால், கட்டுப்பாடுகள் தளர்த்துவதற்கான சாத்தியங்கள் உள்ளது.

 

 

[Read the original article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Aruna Natarajan 182 Articles
Aruna is an Associate Editor at Citizen Matters. She has a BA in Economics and a PG Diploma in Journalism. She has also worked in a think-tank on waste management policy and with a non-profit in sport for development. She writes on civic issues, governance, waste, commute and urban policy. She tweets at @aruna_n29.