குப்பையான பாதையை மைதானமாக மாற்றிய கோட்டூர்புரம் குழந்தைகள்

KOTTURPURAM TRANSFORMATION

A girl paints the wall at the Kotturpuram Housing Board.

Translated by Sandhya Raju

கோட்டூர்புர வாசிகள் மேற்கொண்ட ஒரு மாற்றம் சென்னையின் பிற பகுதி மக்களுக்கு ஒரு ஊந்துகோலாக அமைந்துள்ளது. சுற்றுப்புறத்தை  அழகாக மாற்ற உறுதி பூண்டு, அங்குள்ள சிறுவர்களும் இளைஞர்களும் தூய்மைபடுத்தியது மட்டுமில்லாமல் சுவர்களை வண்ண  பூச்சுகளை கொண்டு அழகிய படங்கள் வரைந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒரு வாரம் முன்னர் வரை, கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரியத்தின் எச் ப்ளாக், ஒரு சிறிய குப்பை கிடங்கு போல் தான் இருந்தது. ஒவ்வொவொரு முறை அந்த இடத்தை கடக்கும் போது, மக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அளவுக்கு துர்நாற்றம் வீசும். ஆனால் இன்று அந்த இடம் முற்றிலுமாக மாறியிருப்பதை காண மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வந்து செல்கின்றனர்.  நகரத்தின் பிற பகுதி மக்களும் இந்த மாற்றத்தை பின்பற்ற ஆர்வம் காட்டுகிறார்கள்.

“பிற ப்ளாக் மக்களும் இதை கடைப்பிடிக்க ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. மாற்றம் ஒரு தொற்று போல் பரவும் என்பதை இது காட்டுகிறது. கழிவு மேலாண்மையை திறம் பட செய்ய மாநகராட்சி உற்ற துணையாக இருக்கும்,” என்கிறார் , சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர் Dr. ஆல்பி ஜான்.

மாற்றதிற்கு முன்பும் பின்பும்

முயற்சி திருவினையாகும்

பல வருடங்களாக இங்குள்ள மக்கள், சில அடி தூரத்தில் உள்ள குப்பைதொட்டியில் குப்பை போடுவதை விட, இந்த பாதையிலேயே போடுவதை வழக்கமாக்கி கொண்டனர். இதனால், வீட்டு வசதி குடியிருப்பு என்றாலே இப்படி தான் சுகாதாரமற்று இருக்கும் என்று நம்பப்பட்டத்தை உறுதிபடுத்துவதாகவே இந்த செயல் அமைந்தது. இந்த நிலையை மாற்ற, இங்கிருக்கும் சில மக்கள் சென்னை மாநகராட்சியுடன்  கைகோற்றனர்.

“சில மாதங்களுக்கு முன்னர், இந்த பாதையில் உள்ள குப்பைகளை அகற்றியதோடு மட்டுமல்லாமல், சுகாதார பாதுகாப்பு குறித்தும் இங்குள்ள மக்களுக்கு விளக்கப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் இந்த இடம் குப்பைகூளமாக மாறியது,” என்று இங்கு வாழும் ஆர்.கவாஸ்கர் ஆதங்கப்பட்டார். இவர் ஒரு துப்பரவு பணியாளரும் ஆவார்.

இந்த முறை, எங்கள் அணுகுமுறையை மாற்றி அமைத்தோம். குப்பைகூளமான அதே இடத்தில் நிலைமையை உணர்த்தும் வகையில் ஒரு கூட்டம் நடத்தினோம். “இங்கு குப்பை கொட்டியவர்கள் வருத்தப்பட தொடங்கினர்; கழிவுகளை அகற்றும் பணியார்களின் நிலைமையை அவர்கள் உணரத்தொடங்கினர்,” என்கிறார் துப்பரவு பணி கண்காணிப்பாளர் வசந்த்.

இனி கழிவுகளை கொட்டமாட்டோம் என உறுதி அளித்த உடன், இங்கு வசிக்கும் குழந்தைகள் எங்களுடன் சுத்தப்படுத்தும் பணியில் இணைந்தனர். பெற்றோர்களின் உதவியுடன், சுவர்களில் வண்ணம் பூசத்தொடங்கினர். “இருபாலருக்கும் இது வெற்றியாக அமைந்தது. இப்பொழுது  கிரிக்கட், கேரம் போன்ற விளையாட்டை விளையாட இந்த இடத்தை சிறுவர்கள் உபயோகிக்கின்றனர். இதை காணும் பெற்றோர்களும் தங்களின் போக்கை மாற்றிக்கொண்டுள்ளனர்.” என்கிறார் கவாஸ்கர்.

 

மாற்றியமைக்கப்ட்ட பாதையில் கேரம் விளையாடும் சிறுவர்கள்

இதற்கு நிதி திரட்டுவது சவாலாக இருந்தது. ஆனால், க்ரௌட்சோர்ஸிங் (crowdsourcing) முறை கைகொடுத்தது. வண்ணம் தீட்டுபவர்கள் வண்னங்களை கொடுத்து உதவினர், பணியாளர்கள் குப்பையை அகற்றுவதில் உதவினர், சிலர் பொருளாராதர ரீதியாக உதவினர். மொத்தத்தில், மக்களே சுயமாக இந்த பணியில் ஈடுபட்டது வெற்றிகரமாக முடிந்தது மட்டுமல்லாமல் ஒரு சிறந்த சமூக மாற்ற முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது. இது மற்றவர்களுக்கும் உந்துதலாக அமையும் என நம்புகிறோம்.

(பாட்மிடன் போன்ற பிற விளையாட்டு உபகரணங்களுக்கு போதிய நிதியில்லாததால்,  இந்த மாற்றத்திற்கு உதவுமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருப்பமுள்ளவர்கள் கவாஸ்கரை +91 79044 48494 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.)

Read the original article in English here.

About Laasya Shekhar 279 Articles
Laasya Shekhar is Senior Reporter at Citizen Matters Chennai. She tweets at @plaasya.