கோவிட் 19- குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்

COVID-19 and child safety

பீதியை கிளப்பாமல் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேன்டும். படம்: லாஸ்யா சேகர்

Translated by Sandhya Raju

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் என்ணிக்கை கூடி வருகிறது. இதன் தீவிர தாக்குதலை தடுக்கும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது, இதைத் தவிர வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீட்டில் அனைவரும் ஒன்றாக இருக்கும் இந்த தருணத்தில், அதுவும் தனிமைப்படுத்த பட்டவர்கள் வீட்டில் உள்ள பொழுது, குழந்தைகள் சரியாக ஈடுபடுத்தவும், பாதுகாப்பதும்  பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

பாதுகாப்பு குறித்த பல சந்தேகங்கள் உள்ளன: தொற்று அவர்களையும் பாதிக்குமா? எந்த மாதிரி உணவு கொடுக்க வேண்டும்?

ரேலா இன்ஸ்டியூட் , குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு மூத்த மருத்துவர் Dr ரவி தம்பிதுரை, மனநல ஆலோசகர் Dr ஆர் வசந்த், குழந்தை மனநல மூத்த மருத்துவர் Dr வி வெங்கட்ரமணி ஆகியோரிடம் குழந்தைகள் பாதுகப்பு குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.

  • குழந்தைகளுக்கும் இந்த கோவிட்-19 தொற்று ஏற்படுமா

ரவி குமார்:  குறிப்பாக அவர்கள் பாதிக்கப்படுவதில்லை. ஆனால்,  நண்பர்களுடன் பொம்மைகளுடனும் விளையாடும் போது அனைத்தையும் அவர்கள் தொட வாய்ப்புள்ளது. அதனால் ஆபத்து உள்ளது. வைரஸ் தாக்கம் குழந்தைகளிடம் குறைவாக இருந்தாலும், பெரியவர்கள், இதய நோயாளிகள், மூச்சு திணறல் உள்ளவர்கள் ஆகியவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

  • கோவிட்-19  தொற்றிலிருந்து குழந்தைகளை காக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? 

ரவி குமார்: கை கழுவுதல் குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 20 நொடி விதியை பெரும்பாலும் குழந்தைகள் பின்பற்றுவதில்லை. தும்மும் போதும் இரும்பும் போதும் கைச்சட்டையில் மூடிக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். இதை நான் வாம்பயர் இருமல் என்று கூறுவேன். வீட்டில் தினம் ஒரு தடவையேனும் மேற்பரப்பினை சுத்தம் செய்ய வேண்டும். கோவிட்-19 தொற்று ஏற்பட்ட குடும்பத்தில் உள்ள குழந்தைகளிடம் விளையாட அனுமதிக்காதீர்கள். ஆறு வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு வருடந்தோறும் போடப்படும்  காய்ச்சல் தடுப்பூசி போடுங்கள். இது எல்லா வித தொற்றிலிருந்தும் இவர்களை காக்கும்.

  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க எந்த மாதிரி உணவை தர வேண்டும்?

ரவி குமார்: நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களே இந்த தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதால், எதிர்ப்பு சக்தியை கூட்டிக்கொள்ளும் முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும். நிறைய தண்ணீர் அருந்தச் சொல்லுங்கள். வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை, ப்ரகோலி, கீரை, தக்காளி, ஆரஞ்ச், கிரேப் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • இந்த சமயத்தில் குழந்தைகளை ஈடுபாட்டுடன் வைப்பது எப்படி?

வெங்கட்ரமணி: தனிமைபடுத்துதல் என இந்த காலத்தை எண்ண வேண்டாம். உங்களின் பொழுது போக்கிலும் இவர்களை ஈடுபடுத்தலாம். வெளியில் செல்வதை விட இது தரும் சந்தோஷமே அலாதியானது. டிஜிட்டல் உபகரணங்களை பயன்படுத்த அனுமதிப்பது எளிது, ஆனால் இதை செய்யாதீர்கள். இந்த தருணத்தில் அவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுப்பதில் செலவிடுங்கள். வைரஸ் தொற்றின் தீவிரத்தை இவர்கள் அறிய வாய்ப்பில்லை. குறைவான எதிர்ப்பு சக்தி இருப்பதால், இவர்களை வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்வது நலம், இதைப் பற்றி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

வசந்த்: தொற்றை பற்றி குழந்தைகளுக்கு எடுத்துக் கூறும் அதே வேளையில் பீதியை கிளப்பக்கூடாது. லேசான கலகலப்பான தலைப்புகளை தேர்ந்தெடுத்து அதை பற்றி விவாதியுங்கள். தொலைக்காட்சி செய்திகளை குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்காதீர்கள், அவர்கள் பீதியடையக் கூடும். நம்பத்தகுந்த அரசு செய்தி குறிப்பிலிருந்து பெறப்படும் தகவல்களையே நம்புங்கள். வாட்ஸப் தகவல்களை நம்பாதீர்கள். நேரமின்மை காரணமாக அவர்கள் விட்ட பொழுதுபோக்குகளை மீண்டும் தொடங்க உதவுங்கள்.

ரவி குமார்: உங்கள் பழைய புகைப்படங்களை மீண்டும் எடுத்து அந்த தருணத்தின் நினைவுகளை பகிர்ந்திடுங்கள். ஸ்டோரி-டெல்லிங், ட்ரஷர் ஹன்ட், தோட்டக்கலை போன்ற செயல்களில் ஈடுபடலாம். நல்ல திரைப்படத்தை பார்த்து, பின் அதனை அலச உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்துங்கள்.

  • அதிகம் பேர் பங்கு கொள்ளும் விளையாட்டு போன்ற வகுப்புகளை நிறுத்த வேண்டுமா? 

ரவி குமார்: ஆம். இரண்டு வாரம் எதுவும் வேண்டாம். உங்கள் குழந்தையின் நண்பர்களின் உடல் நலம் குறித்து ஐயப்பாடு இல்லை என்றால் வீட்டிலிலுள்ளேயோ குடியிருப்பு பகுதியிலோ விளையாட அனுமதிக்கலாம். வீட்டில் பாடம் கற்பிக்கும் முறையை பின்பற்றலாம்.

வசந்த்: ஆம், உள்விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. வீடு சுத்தப்படுத்துதல், சமையல் ஆகியவற்றில் ஈடுபட வைக்கலாம்.

வெங்கட்ரமணி: பொது இடங்களுக்கு விளையாட அழைத்து செல்லாதீர்கள். குறைந்தது இரண்டு வாரம் அமைதியாக வீட்டிலேயே இருப்பது நலம்.

  • உடல் நல பாதிப்பு உள்ள குழந்தைகளை இந்நேரத்தில் பாதுகாப்பது எப்படி?

ரவி குமார்: நீரிழிவு, புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்கள் உடைய குழந்தைகள், நீண்ட காலம் மருந்துகள் எடுத்து வரும் குழந்தைகள் ஆகியவர்களுக்கு தொற்று எளிதில் பரவும். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தடுப்பு ஊசி போடுவது நல்லது.

  • பெற்றோர்களுக்கு  நீங்கள் கூறும் ஒரு அறிவுரை?

ரவி குமார்: பயப்பட வேண்டாம். சாதாரண ஜலதோஷம் வரும். கொரோனா அறிகுறிகள் பர்றி தெரிந்து கொள்ளுங்கள். ஜூரம் வந்த உடனே மருத்துவமனை செல்வதை தவிருங்கள். சுவாசக் கோளாறு, அதிக வெப்ப ஜூரம் மற்றும் இருமல் ஆகியவை  கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறி. 100 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 37.7 டிகிரி செல்ஷியஸ் மேல் இருந்தால் தான் அது ஜூரம் ஆகும்.

கோவிட்-19 பற்றிய செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

[Read the article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Laasya Shekhar 287 Articles
Laasya Shekhar is an independent journalist based in Chennai with previous stints in Newslaundry, Citizen Matters and Deccan Chronicle. Laasya holds a Masters degree in Journalism from Bharathiar University and has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. She tweets at @plaasya.