நிலத்தடி நீர் வளம்: மற்ற பகுதிகளை விட மத்திய சென்னையில் ஏன் அதிகமாக உள்ளது

சென்னையில் நிலத்தடி நீர் வளம்

பாரம்பரிய முறைப்படி பெருங்களத்தூரில் உள்ள திறந்தவெளி கிணறு. படம்: அவினாஷ். டி

Translated by Sandhya Raju

கோடை காலம் தொடங்கும் முன்னரே, ஏப்ரல் மாதத்தில் சேலையூரில் உள்ள எஸ். வேலு வீட்டிலுள்ள இரண்டு ஆழ்துளை கிணறு வற்றிப்போனது. மூன்றாவதாக, 600 அடி ஆழத்தில் மற்றொரு கிணறு தோண்டியதில், அதிலும் தண்ணீர் ஊற்றெடுக்கவில்லை. தற்போது தண்ணீர் லாரி மற்றும் நகராட்சி நீர் வழங்கலை நம்பி உள்ளார் வேலு. 2019-ம் ஆண்டு போல் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லையென்றாலும், நகரத்தின் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் வற்றிப்போக தொடங்கியுள்ளது. இதனால், குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீரையே பெரும்பாலான வீடுகளும், தொழிற்சாலைகளும் நம்பியுள்ளன.

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் கூடுதல் நீர் தேவையை பூர்த்தி செய்வதில் நிலத்தடி நீருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், இதன் தொடர் உபயோகத்தால், சென்னயின் நீர் அட்டவணை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

1970-ம் ஆண்டு வரை, சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் திறந்தவெளி கிணறுகளிலிருந்து கைகளால் இறைக்கப்பட்டதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. 70ம் ஆண்டு தொடக்கத்தில் தான் ஆழ்துளை கிணறு என்ற முறை தொடங்கி, தற்போதைய நிலத்தடி நீர் சுரங்கம் எனப்படும் முறையில் தண்ணீர் உரிஞ்சப்படுகிறது. மக்கள் தொகை அதிகமானதால், தேவைக்காக தற்போது 600-700 அடி ஆழம் வரை தோண்டப்படுகிறது.

நிலத்தடி நீர் சில பகுதிகளில் குறைய இது ஒன்று தான் காரணமா? ஆழ்துளை கிணறு வற்றிப்போக இது தான் காரணமா? சில பகுதிகளில் மட்டும் ஏன் நீராதாரம் மோசமாக உள்ளது?

நிலத்தடி நீர் சுரங்கத்திலிருந்து அதிக அளவில் நீர் உறிஞ்சப்படுவது ஒரு முக்கிய காரணம் என்றாலும், நிலத்திற்கடியில் என்ன நடக்கிறது என்பதை அறிய முற்படவேண்டும். நகரத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் நிலத்தடி நீர் சீராக இருக்காது, இது ‘நீர்வளவியல்’ பொறுத்து மாறுபடும். ஆகையால், நீர் எடுப்பதும் இதை பொறுத்தே இருத்தல் வேண்டும்.

“பாறைகளால் ஆன பூமியின் துணை மேற்பரப்பிற்கும் நிலத்தடி நீருக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வு நீர்வளவியல் எனப்படும்” என விளக்கினார் அண்ணா பல்கலைகழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் எல்.இளங்கோ. நகரத்தின் இயற்கை நிலத்தடி நீரை பற்றி அறிந்து கொள்ள கடலோர சென்னை, வட சென்னை, தென் சென்னை, மேற்கு சென்னை என பிரித்துக் கொள்ளலாம்.


Read more: Chennai will be a water abundant city in five years: Metro Water official


கடலோர சென்னை

எண்ணூரிலிருந்து சோளிங்கநல்லூர் வரையிலான கடலோரப் பகுதியில் நீர்கோள் படுகை உள்ளது. நீர்கோள் படுகை என்பது நிலத்தின் மேற்பரப்பில் உள்ள பாறை / மணல் / ஒருங்கிணைக்கப்படாத வண்டல்கள் ஆகும், இவை தண்ணீரை சேமித்து விடுவிக்கும் தன்மை உடையவை. படுகையின் ஆழம் மற்றும் மகசூல் இடத்திற்கு இடம் இயற்கையாகவே மாறுபடும்.” என விளக்கினார் இளங்கோ.

கடலோர படுகையில், புதிய நீர் மற்றும் உப்பு நீர் மண்டலங்கள் பலவீனமான சமநிலையில் உள்ளன. உப்பு நீர் மண்டலத்தில் உப்பு, உப்பு நீர் மற்றும் புதிய நீர் மண்டலத்திற்கு இடையிலான எல்லை தெளிவாக இல்லை.

“நம் நகரத்தில் கடலோர படுகைகள் தனித்துவம் மற்றும் சிக்கலானது, இயற்கையான ஊற்றையும் தண்ணீர் எடுக்கப்படுவதையும் சமம்படுத்த வேண்டும், குறிப்பிட்ட அளவை விட தண்ணீர் எடுப்பது அதிகமானால், கடல் நீர் ஊடுருவும்.” என்கிறார் நீர்வளவியலாளர் மற்றும் நீர் நிபுணர் ஜெ சரவணன்.

கடல் நீர் ஊடுருவும் போது, உப்பு நீர் மட்டம் உயர்கிறது. இது நிலத்தடி நீரில் தாக்கத்தை உண்டாக்கிறது. ஆதலால், இந்த பகுதிகளில், நன்னீர்-உப்பு நீர் சமநிலையை பராமரிக்க வேண்டும். நன்னீரில் அனுமதிக்கப்பட்ட டி.டி.எஸ் (மொத்தக் கரைந்த திடப்பொருட்கள்) மதிப்பு லிட்டருக்கு 500 முதல் 1000/1500 mg வரை இருக்கும். உப்பு நீரில், டி.டி.எஸ் மதிப்பு லிட்டருக்கு 35,000 முதல் 45,000 mg வரை செல்லும்

ஆழமாக தோண்டாமல் இந்த சமநிலையை உறுதிசெய்வது எப்படி? ஒவ்வொரு அடி ஆழத்திலும் டி.டி.எஸ் அளவை தொடர்ந்து டி.டி.எஸ் சோதனை சாதனம் கொண்டு சரிபார்ப்பதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்.

உப்பு நீர் ஊடுருவலை விவரிக்கும் படம். Graphic: Jooja/Creative Commons Attribution-Share Alike 4.0 International license

“கொள்கையளவில், உப்பு நீர் நன்னீரை விட 40 மடங்கு அடர்த்தியானது. உப்பு நீரை ஒரு அடி கீழே தள்ளுவதற்கு கூட, நன்னீர் 40 அடி உயர வேண்டும், அதாவது உப்புநீரை பின்னுக்குத் தள்ளுவது மிகவும் கடினம் ”என்று சரவணன் மேலும் கூறுகிறார்.

இக்காரணத்தால், கடலோர பகுதிகளில் கிடைக்கும் நிலத்தடி நீர் அளவு மற்றும் தன்மை நன்றாக இருப்பதில்லை. இந்த பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு திட்டம் பரவலாக அமலாக்கப்பட வேண்டும். “குடியிருப்புகளில் மட்டும் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமல்படுத்துவது போதாது, சாலையோரங்கள், கோயில் குளங்கள், நீர் நிலைகள் என கடலோர பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக இது நடைமுறைபடுத்தப்படவேண்டும்.” என மேலும் அவர் கூறினார்.


Read more: Why residents in northern parts of Chennai throw away pots of water every week


மத்திய சென்னை

அடையாறு, கூவம் என இரண்டு ஆறுகள் மத்திய சென்னை வழியாக செல்கிறது. அதனால், இந்த பகுதிகளில், குறிப்பிடத்தக்க ஆழம் வரை வண்டல் மண் வைக்கிறது, அதற்குக் கீழே கடினமான பாறைகள் ஏற்படுகின்றன.

அடையாறு ஆற்றின் வண்டல் மண் 10 முதல் 20 மீட்டர் ஆழம் வைப்பு இருக்கும், இதன் தன்மை இடத்திற்கு இடம் மாறுபடும். கூவம் ஆற்றின் வண்டல் மண் 10 முதல் 28 மீட்டர் ஆழத்தில் வேறுபடும். இது கீழ்பாக்கம்-பெரம்பூர் பகுதிகளில் மேலும் சிறுதுகள்களாக இருக்கும்.

“வண்டல் மண்டலம் தண்ணீரை எடுக்க ஒரு நல்ல பகுதி, ஏனெனில் அலுவியத்தின் போரோசிட்டி தண்ணீரை சேமிக்க மிகவும் பொருத்தமானதாக அமைகிறது. 100 கன அடி அலுவியம் வைப்பு உள்ள இடத்தில் 25 கன அடி வரை தண்ணீரை உறிஞ்சும்,

தென் சென்னை

ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், கிண்டி ஆகிய சில பகுதிகள் தென் சென்னை ஆகும். இந்த பகுதிகள் பாறை நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளன, புவியியல் ரீதியாக இவை கடினமான பாறை பகுதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கடினமான பாறை பகுதிகளில் இரு வகையான நீர் நிலைகள் உள்ளன: வளிமண்டல நீர் நிலைகள் மற்றும் உடைந்த நீர் நிலைகள். உதாரணமாக, தாம்பரம் பகுதியின் மேல் பகுதி (5 முதல் 10 மீட்டர்) மணலாகவும், அதன் கீழ் சிதனிந்த பாறைகளாலான வளிமண்டல நீர் நிலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள வண்டல் மண் வளிமண்டல நீர் நிலை எனப்படும். உடைந்த வண்டல் நீர் நிலைகளில் மேல் பகுதி கடும் பாறைகளால் ஆனவை.” என விளக்குகிறார் இளங்கோ.

முதல் வகையில், “வளிமண்டல மண்டலம் (மென்மையான, வளிமண்டல பாறைகளால் ஆனது) மேல் மண் மண்டலத்திற்கு கீழே தோன்றுகிறது, அதன் ஆழம் 6 முதல் 15 மீட்டர் வரை மாறுபடும். இந்த பகுதிகளில் திறந்தவெளி கிணறு அமைக்க உகந்தது, மழைக் காலத்திற்கு பிறகு விரைவாக ஊற்றெடுக்கும்,” என்கிறார் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி, Dr பி. உமாபதி.

உடைந்த நீர் மண்டலம் வளிமண்டல நீர் நிலைகளுட இணையும் போது தான் தண்ணீர் ஊடுருவி உடைந்த மண்டலத்தை சேரும். “கடும் பாறைகள் மிகுந்த பகுதிகளில் இதனால தான் தண்ணீர் உடைந்த மண்டலத்தை சேரும் போது மட்டுமே கிடைக்கிறது. பல பகுதிகளில் இந்த இணை இல்லாமல் போகும் போது, ஆழ்துளை கிணறு தோண்டுகையில் நீர் வருவதில்லை,” என உமாபதி மேலும் தெரிவித்தார்.

போர்வெல் சாதனம் மாதிரி படம்: விக்கிமீடியா காமன்

கடும் பாறைகள் உள்ள நீர் மண்டலத்தில், நீர் மட்டம் ஒரு ஆழமற்ற மட்டத்தில் பராமரிக்கப்பட வேண்டும். இந்த மட்டம் கீழே போனால், நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, ஆழ்துளை கிணறுகளில் நீர் கிடைப்பதில்லை.

மேற்கு சென்னை

மத்திய சென்னை போலில்லாமல், மேற்கு சென்னை பகுதிகளில், மேல் மண்ணின் கீழ் ஒரு குறிப்பிட்ட அளவு அலுவியம் உள்ளது, அதன் கீழ் களிமண் உள்ளது. வளசரவாக்கம், விருகம்பாக்கம், அண்ணா நகர், போரூர் போன்ற பகுதிகள் களிமண் நிறைந்தது. இந்த பகுதிகளில் கிடைக்கும் நீரில் இரும்பு சத்து மிகுந்துள்ளதால், வீட்டு உபயோகத்திற்கு ஏற்றது.

“மேற்கு சென்னையில் கிடைக்கும் நீரின் தன்மை மற்றும் அளவு சற்று விசித்திரமானது. உதாரணமாக, வளசரவாக்கம் பகுதியில், 10 மீட்டர் வரை கிடைக்கும் நீர் நல்ல தரமுடனும், 10 முதல் 30 மீட்டர் உள்ள நீரில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால், இது உபயோகிக்க முடியாது. 30 மீட்டர் அடியில் இது உமிழ் நீராக உள்ளது. இதுவே, போரூர் பகுதிகளில், 30 அடி கீழே கூட தண்ணீர் நல்ல தரமாக உள்ளது. 250 அடி ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் நீர் வளசரவாக்கத்தில் உமிழ் நீராகவும், போரூரில் நல்ல தண்ணீராகவும் உள்ளது,” என விளக்கினார் சரவணன்.

வட சென்னை

சத்தியவாணி நகரில் கை பம்ப்களில் தண்ணீர் வற்றினாலும், முயற்சியில் ஈடுபடும் பெண். படம்: லாஸ்யா சேகர்.

வட சென்னை வண்டல் பாறைகள் கொண்டது, இதில் மணற்கல் மற்றும் மணல் அல்லது ஷேல் ஆகியவை மேல் மண்ணின் அடியில் அடுக்குகளை உருவாக்கி, நல்ல நிலத்தடி நீர் விளைச்சலுக்கு உகந்ததாக அமைகிறது.

நகரத்தின் முக்கியமான மூன்று நீர் நிலைகளான அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு ஆகிய நதிகள் இந்த பகுதியின் நீர்வளவியலை தீர்மானிக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகள் முன் உருவான இவை, நூற்றாண்டுகளில் பல தடவைகள் தங்கள் தடங்களை மாற்றியுள்ளன. ஆதலால், நிலத்தடி நீர் தன்மை மாறியுள்ளது

நீர ஓட்டத்தோடு, அதன் பாதையில் மண், மிதமான பாறைகள் போன்றவற்றையும் நதி அடித்து வருகிறது. நீர் ஒட்டப்பாதை மாற்றம்,கனமான நுண்ணிய பொருட்கள் மேல் பகுதிகளில் திட்டாக ஒட்டுவது போன்ற காரணிகள் வட சென்னையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நதி மத்திய சென்னைக்கு செல்லும் போது சிறு மண் துகள்களை கொண்டு செல்கிறது, இவை வண்டல் மண் திட்டாகிறது.

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.