சென்னை மாவட்டத்திற்க்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை வாக்காளர் பட்டியல்

draft voter roll
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க மற்றும் பிற மாற்றங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / அரசு முதன்மை செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.11.2021) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 01.01.2022- ஆம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2022-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 01.11.2021 வெளியிடப்படுகிறது.

மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2022 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (01.01.2004 ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6-னை பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-னை பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-னை பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8 A-யினை பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்/ பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 01.11.2021 முதல் 30.11.2021 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.


Read more: Why Chennai will continue to see low voter turnout unless we fix these


மேலும் பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

சென்னை மாவட்டத்தில் 3,750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 19.03.2021 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,94,505, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20,61,473, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 1,083 என மொத்தம் சென்னை மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 40,57,061 ஆகும்.

நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 19,92,198 ஆண் வாக்காளர்கள், 20,60,767 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,073 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 40,54,038 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில் 10,621 ஆண் வாக்காளர்கள்,11,862 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 22,492 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.


Read more: Explainer: Who administers and provides public services in Chennai?


மேலும் 12,928 ஆண் வாக்காளர்கள், 12,568 பெண் வாக்காளர்கள் மற்றும் 19 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 25,515 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை சட்டமன்றத்தொகுதி வாரியாக கீழ்கண்டவாறு உள்ளது.

Draft voter rolls chennai

வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக எண் 18 துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,76,679 வாக்காளர்களும், அதிகபட்சமாக எண் 26 வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3,15,502 வாக்காளர்களும் உள்ளனர். ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலினை பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / அரசு முதன்மை செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

[This article is based on a Press Release by Chennai Corporation and has been republished here with minimal edits.]

Also read

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About News Desk 381 Articles
The News Desk at Citizen Matters puts out Press Releases, notifications and curated information useful to the urban reader.