இரண்டாம் அலை: கோவிட் பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தடுப்பூசி நெறிமுறைகள் பற்றிய தகவல்கள்

கோவிட்-19 சமீபத்திய வழிகாட்டுதல்கள்

chennai vaccination drive
Chennai has vaccinated more persons than other metro cities. Pic: Greater Chennai Corporation

Translated by Sandhya Raju

கடந்த் 11-ஆம் தேதி 2124 தொற்று எண்ணிக்கையுடன், சென்னை 2000 அளவை எட்டியுள்ளது . கோவிட்-19 இரண்டாவது அலை மிக தீவிரமாக சென்னையில் பரவி வருகிறது. முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி, தேவையின்றி பொது வெளியில் செல்வது என கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தொற்று மேலும் பரவாமல் இருக்க, புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பரிசோதனை வழிமுறைகள், தனிமைப்படுத்துதல், தடுப்பூசி நெறிமுறைகள் ஆகியவற்றை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியதை இங்கே தொகுத்துள்ளோம்:

பரிசோதனை மற்றும் மருத்துவமனை அனுமதி:

கோவிட்-19 பரிசோதனையை எங்கு மேற்கொள்ளலாம்?

அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஐசிஎம்ஆர் அங்கீகரித்துள்ள தனியார் பரிசோதனை மையம் ஆகியவற்றில் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்லலாம். சுயமாகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரையிலோ இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம்.  RT-PCR பரிசோதனை மேற்கொள்ள மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவையில்லை.

சரியான நேரத்தில் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். படம்: லாஸ்யா சேகர்

கோவிட்-19 பரிசோதனையை யாரெல்லாம் கட்டாயம் எடுக்க வேண்டும்?

 1. கடந்த 14 நாட்களில் சர்வதேச பயணம் மேற்கொண்டவர்கள், அறிகுறி உள்ள நபர்கள் (காய்ச்சல், ஐ.எல்.ஐ அறிகுறிகள்).
 2. தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் தொடர்பில் இருந்த அறிகுறி (ஐ.எல்.ஐ அறிகுறிகள்) உள்ள நபர்கள்.
 3. கோவிட்-19 தடுப்பு பணியிலுள்ள, அறிகுறி (ஐ.எல்.ஐ அறிகுறிகள்) உள்ள சுகாதார மற்றும் முன்னணி பணியாளர்கள்.
 4. கடுமையான சுவாச தொற்று உள்ள நோயாளிகள்.
 5. தொற்று உறுதியான நபர்களின் நேரடி தொடர்பில் இருந்த உயர்-ஆபத்தில் உள்ள நபர்கள் 5 மற்றும் 10 ஆம் நாள் இடைவெளியில் ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.
 6. தொற்று அதிகம் பரவும் இடங்களில் அல்லது தனிமைபடுத்தப்பட்ட இடங்களில் உள்ள ஐ.எல்.ஐ அறிகுறிகள் உள்ள நபர்கள்.
 7. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் ஐ.எல்.ஐ அறிகுறிகள் உள்ளவர்கள்.
 8. வெளியூர்களிலிருந்து வந்த ஏழு நாட்களுக்குள் ஐ.எல்.ஐ அறிகுறிகள் தென்படுபவர்கள்.

Read more: Current COVID protocol to follow if you are travelling to Chennai


கோவிட்-19 தொற்று உள்ள அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா?

இல்லை. வயது, தொற்று அளவு, பிற நோய்கள் ஆகியவற்றை பொறுத்து வீட்டிலேயே தனிமைபடுத்துதல் அல்லது மருத்துவமனை அனுமதி தீர்மானிக்கப்படும். லேசான அல்லது மிதமான அறிகுறிகள் உள்ளவர்கள், இணை நோய் அல்லாத அறுபது வயதுக்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்படுவார்கள்.

வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள், அரசு அமைத்துள்ள கோவிட் பராமரிப்பு மையங்களுக்கு செல்லலாம்.

இணை நோய்கள், குறைவான சுவாசம் உள்ள நபர்கள், மருத்துவமனையில் அனுமதித்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுவர்.

மருத்துவ நிலையை பொறுத்து, மருத்துவமனை அனுமதி குறித்து முடிவு எடுக்கப்படும்.

சென்னையில் எங்கு கோவிட்-19 சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்?

அனைத்து அரசு மருத்துவமனைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள், பிரத்யேக கோவிட்-19 வார்ட்களை அமைத்துள்ளது.அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனைகளின் விவரம் மற்றும் படுக்கை இருப்பு ஆகிய விவரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

அரசு மருத்துவமனை குறித்த விவரங்கள், உதவி எண்கள் குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நடைமுறைகள் என்ன?

அ. மிக லேசான/லேசான/ஆரம்ப அறிகுறி உள்ளவர்கள்:

 • கோவிட் பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொற்று உறுதியான பத்து நாட்களுக்கு பின், மூன்று நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இல்லாமல் இருந்தால், விடுவிக்கப்படுவர்.
 • மருத்துவனையிலிருந்து வெளியேறும் முன் தொற்று இல்லை என்பதற்கான RT-PCR பரிசோதனை அவசியமில்லை.
 • வெளியேறிய பின், வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆ. மிதமான அறிகுறி உள்ளவர்கள்:

 • தொற்று உறுதிசெய்யப்பட்ட 10 நாட்கள் பின், தொடர்ந்து 3 நாட்கள் வேறு எந்த அறிகுறியின்றி இருந்தால் விடுவிக்கப்படுவார்கள்.
 • மருத்துவனையிலிருந்து வெளியேறும் முன் தொற்று இல்லை என்பத்ற்கான RT-PCR பரிசோதனை அவசியமில்லை.
 • வெளியேறிய பின், வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இ. கடுமையான தொற்று உள்ளவர்கள்:

 • முழுமையாக குணமான பின்னரே மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவர்.
 • அறிகுறி முற்றிலும் குணமான பின், தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய RT-PCR பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்கள்

தொற்று அதிகம் உள்ள நிலையில், மீண்டும் கட்டுப்பாடு விதிகளை கொண்டு வந்துள்ளதோடு, தொற்று அதிகம் பரவும் இடங்களை கட்டுப்பாடு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு மண்டலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

தொற்று அதிகம் பரவும் இடங்களை கட்டுப்பாடு மையங்களாக அறிவிக்கப்படுகிறது. இவைகள் க்ளஸ்டர்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது ஒரே இடத்தில், மூன்று இண்டெக்ஸ் தொற்று நபர்கள் அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் க்ளஸ்டர் என வகைப்படுத்தப்படுகின்றன. (தொற்று எங்கிருந்து பரவியது என்பதை அறிய முடியாத பொழுது அவை இண்டெக்ஸ் தொற்று எனப்படுகிறது)

 1. மூன்றுக்கு அதிகமான இன்டெக்ஸ் தொற்று நபர்கள் அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால்,
 • நிலைமையை பொறுத்து, மாநகரட்சி அல்லது புற நகர நகராட்சியின் கீழ் வரும் இடங்களில், ஒரு தெரு அல்லது தெருவின் ஒரு பகுதி கட்டுப்பாடு இடமாக வரையுறுக்கப்படும்.
 • அடுக்கு மாடி குடியிருப்பாக இருப்பின், முழு குடியிருப்போ அல்லது பகுதியோ கட்டுப்பாடில் வைக்கப்படும்.
 • அதிக நெரிசல் உள்ள குடியிருப்பு பகுதிகளில், தனி நபர் இடைவெளி கடைபிடிக்க முடியாத சூழலில், தொற்று உள்ள நபர்கள் நிறுவன தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவர்.

2. மூன்று இன்டெக்ஸ் தொற்று வரை அல்லது மூன்று குடும்பங்கள் வரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

3. ஒரு தெருவில் அதிக தொற்று இருப்பின், வெளியில் செல்ல கட்டுப்பாடு விதிப்பு மற்றும் வீடு வீடாக சென்று தொற்று அறிகுறி பற்றி கண்காணிப்பு செய்யப்படும்.

கட்டுப்பாடு பகுதியில் எப்பொழுது கட்டுப்பாடு நீக்கப்படும்?

14 நாட்கள் பின், (கடைசியாக தொற்று உறுதி செய்யப்பட்ட தேதியிலிருந்து) மேலும் தொற்று இல்லையென்றால், கட்டுப்பாடு நீக்கப்படும்.

கோவிட்-19 தொற்று பரவாமல் தடுக்க வேறு வழிவகைகள்

தொற்று மேலும் பரவாமல் இருக்க, அதிக அளவில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவது, பொது இடங்களுக்கு செல்வது, பயண கட்டுப்பாடுகள் என அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 10 முதல் கீழ்கண்ட கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன:

 • பேருந்தில் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி. பயணிகளின் நலன் கருதி மேலும் 200 கூடுதல் பேருந்துகளை அரசு இயக்க முடிவு செய்துள்ளது.
 • கோயில் திருவிழாக்கள் மற்றும் மதக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டு தளங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
 • படப்பிடிப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்கள் RT-PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
 • வாடகை கார்களில் ஓட்டுனர் தவிர மூன்று நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர இரண்டு பேர் மட்டுமே பயணிக்க வேண்டும்.
 • வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • திருமணங்களில் 100 பேர் மற்றும் இறுதி சடங்குகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
 • திரை அரங்குகள், மால்கள், கடைகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. வணிக கடைகள் இரவு 11 மணி வரைக்கும் செயல்படலாம்.
 • உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி.
 • கோயம்பேடு சந்தையில் சில்லறை வர்த்தகத்திற்கு அனுமதியில்லை.
 • உள் அரங்குகளில் அரசியல், சமூக, விளையாட்டு, கல்வி, கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகள் 200 பேருடன் மட்டுமே நடத்த அனுமதி.
 • கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
 • பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகள் நடத்தவும், கோவிட் நெறிமுறைகள் பின்பற்றி நீச்சல் குளங்கள் செயல்படவும் அனுமதி.
 • பிற மாநிலங்கள் அல்லது நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வர ஈ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஈ-பாஸ் பெற இங்கே விண்ணப்பிக்கலாம்.
 • அரசு ஏற்கனவே அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் செயல்படலாம். அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டுதல் படி ஊழியர்களுக்கு தடுப்பூசி போட நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். வழிகாட்டுதல்களை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது இரவு நேர ஊரடங்கு இல்லை என்ற போதும், தற்போதுள்ள வழிமுறைகள் போதுமானதாக இல்லாவிட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலிக்கலாம்.

COVID-19 பாதுகாப்பு மீறலுக்கான அபராதம்

முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வழிகாட்டுதல்களை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

விதிமுறை மீறல்அபராதம்
முககவசம் அணியாததுRs 200
தனிமைபடுத்துதல் விதிகளை மீறல்Rs 500
பொது இடங்களில் எச்சில் துப்புதல்/தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொது இடங்களில் கூடுதல் Rs 500
நிறுவனங்கள் வழிகாட்டுதல்களை மீறுதல்Rs 5,000

கண்காணிப்பை தீவிரப்படுத்த ஒவ்வொரு மண்டலத்திற்கும் அபராதம் வகிக்கும் இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி தகவல்கள்

தடுப்பூசி யார் எடுத்துக் கொள்ளலாம்?

நாடு முழுவதும் மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் படி, ஏப்ரல் 1 முதல், இணை நோய் உள்ள அல்லது இல்லாத 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். www.cowin.gov.in என்ற வலைதளத்தில் இதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.

தகுதி உள்ளவர்கள் அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். சென்னையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மையங்களை இங்கே பார்க்கலாம்.


Read more: All you need to know to get your COVID vaccine in Chennai now


தடுப்பூசி சான்றிதழ் எவ்வாறு பெறுவது?

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்காள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் கியூஆர் குறியீடு அடிப்படையிலான சான்றிதழை பெறுவர். கோவின் வலைதளத்திலிருந்தும் இதனை தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தடுப்பூசியின் இரண்டாவது தவணை தேதி சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும்.

அடுக்கு மாடி குடியிருப்புகளில் தடுப்பூசி நிகழ்வுகள் ஏற்பாடு செய்ய முடியுமா?

இல்லை. கண்காணிப்பை பாதிக்கும் என்பதால் வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி போடுவதற்கு தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, தடை விதித்துள்ளது. தடுப்பூசி வழிகாட்டுதல் படி, தடுப்பூசி போடப்பட்டவர்கள் 30 நிமிடம் கண்காணிப்பில் வைக்கப்படுவர். பின்விளைவுகள் ஏதேனும் தென்பட்டால் மருத்துவம் அளிக்கப்படும்.

தொழில் நிறுவனங்களில் வெகுஜன தடுப்பூசிகள் வழங்கலாமா?

தகுதியுள்ள 100 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினால், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான தடுப்பூசி வழங்கும் முறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ஆன்-சைட் தடுப்பூசி மற்றும் கண்காணிப்பு வசதிகள் உள்ளூர் நிர்வாகத்தால் தயார் செய்யப்படும்.

தடுப்பூசி எடுக்கும் முன் குடும்ப மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டுமா?

ஆம். மருத்துவ ரீதியாக தகுதியை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். டைபாய்ட் போன்ற நோய் இருக்கக் கூடாது அல்லது சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருக்கக்கூடாது. குணமடைந்த 14 நாட்கள் பின்னரே தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இணை நோய் உள்ளவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

தனிமைபடுத்துதலில் உள்ள போதோ அல்லது பரிசோதனை எடுத்துக் கொள்ளவுள்ள நிலையிலோ தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா?

தனிமைப்படுத்துதலில் உள்ள போது அல்லது பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் போது அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது, தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது. தடுப்பூசி இரண்டாம் தவணையின் போது உடல் நிலை சரியில்லை என்றால் பொறுத்திருந்து குணமடைந்தவுடன், ஆனால் விரைவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல் நிலை சரியில்லை என்றால், அருகிலுள்ள மையத்தில் கோவிட்-19 பரிசோதனையை மருத்துவர் பரிந்துரையின்றி மேற்கொள்ளலாம். தொற்று உறுதி செய்யப்பட்டால், உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

தொற்று குணமடைந்தவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா?

ஆம். தொற்று குணமடைந்தவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். எதிர்ப்பு சக்தியை கூட்டுவதோடு மீண்டும் தொற்று பரவாமல் இருக்க உதவும். எனினும், நோய் கட்டுப்பாட்டு மையத்தின் வழிகாட்டுதல் படி தொற்று குணமடைந்த பின் 90 நாட்கள் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

(மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த உள் மருத்துவ நிபுணர் டாக்டர் சையத் ஹபீசுல்லா ஆகியோரின் தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது)

Read the original article in English here.

Also read:

About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar is Staff Reporter at Citizen Matters Chennai. She tweets at @_bhavaniprabha
About Aruna Natarajan 158 Articles
Aruna is a staff reporter at Citizen Matters Chennai. Apart from writing, she enjoys watching football.

1 Comment

 1. Dear Sir,
  I am 47 Yrs. Old.
  Please Let me know how to register for Vaccine for Corona

Comments are closed.