சென்னையில் உங்கள் வீட்டிற்கு சூரிய மின்சக்தி இணைப்பு பெற வழிகாட்டி

GETTING A GRID-CONNECTED SOLAR ROOFTOP

Source: Wikimedia Commons

கடந்த பத்து வருடங்களாக எல்லோரையும் சூரிய எரிசக்திக்கு மாறும் படி வலுயுறுத்தி வருகிறேன். இது நான் எடுத்த சிறந்த முடிவு. இது எவ்வளவு எளிதானது என்பதை மக்கள் உணர்ந்தால், அவர்கள் நிச்சயம் முயற்சிப்பார்கள். அதற்கான மனம் தான் தேவை” என்கிறார் சென்னைவாசி டி சுரேஷ். சூரிய எரிசக்தி பற்றி சென்னை மற்றும் தமிழ்நாட்டு மக்களிடையே எடுத்துச் செல்லும் இவரது முயற்சிக்காக இவர் சோலார் சுரேஷ் என்றே அழைக்கப்படுகிறார்.

க்ரீன்பீஸ் மற்றும் ஜெர்மி (Greenpeace India and GERMI) நடத்திய Rooftop Revolution: Unleashing Chennai’s Solar Potential  ஆய்வின் படி சென்னையில் 1.38 GW (கிகாவாட்) அளவுக்கு சூரிய மின்சக்தி தயாரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் இதுவரை இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறுகிறது. மேலும், வீட்டு கூரை மேல் சூரிய மின்சக்தி அமைப்பின் மூலம் 586 MW (மெகாவாட்) கிடைக்கும் என்றும் இது மொத்த அளவீட்டில் 46% ஆகும் எனவும் கூறுகிறது.

புதுப்பிக்கதக்க சக்தி உபயோகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியம் வழங்குகிறது. இவை மூலதன ஊக்கத்தொகையாகவோ மின்சார கட்டணத்தில் சலுகையாகவோ தருகிறது. தற்போதுள்ள அமைப்பிலேயே வீட்டில் சோலார் மினசார வினியோக அமைப்பை மின்தொடர் (grid)- உடன் இணைந்து அமைப்பதையே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

கூரை மீதான சூரிய சக்தி எப்படி செயல்படுகிறது?

மின்தொடர் (grid) மூலம் இணைக்கப்பட்ட சூரிய சக்தி இரு திசையிலும்  பொருத்தப்பட்ட மீட்டர் மூலம் வீட்டில் எவ்வளவு மின்சாரம் தயாராகிறது எவ்வளவு உபயோகப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.  அதிகமான மின்சாரம் உற்பத்தி ஆகும் போது, அது க்ரிட் மூலம் அனுப்பப்படுகிறது. நிகர் மீட்டர் அளவின் படி மின்சார கட்டணத்தில் வருடா வருடம் வரவு வைக்கப்படுகிறது.

கம்பி மூலம் இணைக்கப்பட்ட அமைப்பில் மின்கலம் (battery) உபயோகம் இல்லாததால், சூரிய எரிசக்தி அமைக்க மூலதன முதலீடு மற்றும் இடம் ஆகியவை குறைவாகவே தேவைப்படுகிறது.

ஆகவே, புதுப்பிக்கதக்க எரிசக்திக்கு மாறுவதோடு மட்டுமல்லாமல், மின்சாரத்திற்கு செலவிடும் தொகையிலும் சேமிக்க முடியும். இதை பற்றி கூடுதலான அடிப்படை தகவல்கள் இதோ உங்களுக்காக.

சேமிப்பு

முதலமைச்சரின் வீட்டு சூரிய ஒளி திட்டத்தின் கீழ், தனி வீடோ அல்லது அடுக்கு மாடி குடியிருப்பிலோ கூறை மேல் வீட்டு உபயோகத்துக்காக சூரிய எரிசக்தி அமைத்தால், ஒரு கிலோவாட் பீக்குக்கு அதிகப்படியாக இருபதாயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. மத்திய அரசின் MNRE (புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்) வழங்கும் 30% மானியத்தை தவிர இது கூடுதலாக வழங்கப்படுகிறது. வரையுறக்கப்பட்ட விலை அல்லது கட்டமைக்க செலவாகும் தொகை இவை இரண்டில் குறைவான தொகையில் இந்த மானியம் கணக்கிடப்படுகிறது.  

அடுக்கு மாடி குடியுறுப்புகளில் பொது பயன்பாட்டிற்கு 5 kW, 10 kW அல்லது அதன் மடங்குளில் பயன்படுத்தலாம்.

ஒரு KWp  அமைக்க சராசரியாக 70,000 ரூபாய் பிடிக்கும். மானியத் தொகையை கணக்கில் கொண்டால் இது 45000 மட்டுமே செலவாகும்.

ஒரு KWp  4-5 யூனிட் மின்சாரம் கிடைக்கும். வீட்டின் பயன்பாட்டை பொறுத்து எவ்வளவு மின்சாரம் தேவை என்பதை திட்டமிடலாம். உபரியாக பெறப்படும் மின்சாரத்தை வரவு வைத்து அதை தமிழ்நாடு மின்சார வாரியம் அட்டவணைப்படி வருடா வருடம் பெற முடியும்.

சூரிய மின்சக்தி நிறுவ தேவையானவை

  • ஒரு kw பேனல் அமைக்க மொட்டை மாடியில் 100 சதுர அடி தேவைப்படும்.
  • LA-A1 (வீட்டு பயன்பாடு) கட்டண படி TANGEDCO இணைப்பு இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தமிழ் நாடு ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தில் (TEDA). நேரில் பெறலாம்.  அங்கீகரிக்கப்ப்ட்ட விற்பனையாளர்கள் பட்டியல் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

சூரிய மின்சக்தியின் நன்மைகள்

  • நீண்ட கால நன்மையாக மின்சார செலவில் குறிப்பிடதக்க வீழ்ச்சி.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தினம்தோறும் பயன்படுத்தல்
  • சோலார் பேனலின் பயன்பாடு காலம் 25 வருடம் என்பதால் விலையேற்றத்தின் தாக்கம் இருக்காது.
  • இதில் வரும் சேமிப்புக்கு வரி இல்லை.
  • சுற்றுசூழல் பாதுகாப்பு.
  • உபரி மின்சாரத்தை வீணாக்காமல் க்ரிட்டுக்கு செலுத்தும் அமைப்பு.

(Translated by Sandhya Raju. You can read the English article here)

About Aruna Natarajan 160 Articles
Aruna is a staff reporter at Citizen Matters Chennai. Apart from writing, she enjoys watching football.