கிருமிநாசினி தெளிப்பான் சேவை: அதிகரிக்கும் தேவை

கோவிட்-19 நேரத்தில் கிருமிநாசினி சேவை

கோவிட்-19 மற்றும் டெங்கு - சென்னையில் தூய்மை பணியாளர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள். பணியாளர்கள் தட்டுப்பாடால் தனியார் சேவையை நாடும் நிலை. படம்: யா ஃபெசிலிடிஸ் செர்வீஸ்

Translated by Sandhya Raju

கோவிட் 19 தொற்றால் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. விற்பனையின்மை, இடம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் ஏற்பட்டுள்ள தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால், தொழில்கள் மூடுநிலைக்கு வந்துள்ளது.

ஒவ்வொரு நெருக்கடியான தருணத்திலும் வாய்ப்புகள் உருவாகும் என்ற கூற்றின்படி இக்கட்டான இந்த சூழலில் கிருமிநாசினி தெளிப்பான் சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் இதற்காக வரும் விளம்பரங்களே இதற்கு சாட்சி.

புதிய வழிகள்

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கோவிட்-19 தொற்று உள்ள நபரின் வீடு, கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும். இது சென்னை மாநகராட்சியின் பொறுப்பு என்றாலும், பணியாளர்கள் தட்டுப்பாடால் இப்பணி தாமதமாகிறது. இதனால் தனியார் சேவையை மக்கள் நாடும் நிலை எழுந்துள்ளது. இதன் விளைவாக ஒரு புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகியுள்ளது.

பொது முடக்கத்தால், எம் கான் நடத்தி வந்த லெதர் தொழில் மூடும் நிலைக்கு வந்தது. “பொது முடக்கம் முடிவுக்கு வந்த பின்னர் புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தேன். இன்னும் அது முழு வடிவம் பெறவில்லை என்றாலும், கிருமி நாசினி தெளிப்பான் சேவையும் இதில் அடங்கும்.” என்கிறார் 1 சொலுஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான கான். இந்நிறுவனம் சுத்தகரிப்பு சேவையை வழங்குகிறது.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கிருமி நீக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்:

1. நுழைவாயில் பகுதிகள், காரிடார், மாடிப்படிகள், லிஃப்ட், பாதுகாவலர்களின் அறை, அலுவலக அறைகள், மீட்டிங் அறைகள், தேநீர் பகுதி என உட்புறங்களில் உள்ள அனைத்து இடங்களும் 1% சோடியம் ஹைபோகிளோரைட் அல்லது பினாலிக் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

2. மக்கள் அதிகம் உபயோகிக்கும் பகுதிகளான லிஃப்ட் பட்டன்கள், கைப்பிடிகள், இன்டெர்காம், அலுவலக உபகரணங்களான தொலைபேசி, ப்ரின்டர்/ஸ்கானர், மற்றும் மற்ற மெஷின்கள் ஆகியவை தினந்தோறும் இரண்டு முறை சுத்தமான லினென் துணி அல்லது 1% சோடியம் ஹைபோகிளோரைட்டில் முக்கிய துணியினால் துடைக்கப்பட வேண்டும்.

3. அடிக்கடி தொடப்படும் மேஜை, இருக்கை கைப்பிடி, பேனா, ஃபைல், டயரி, கீபோர்ட், மவுஸ், மவுஸ் பேட் மற்றும் டீ/காபி மெஷின் ஆகியவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.

4. மெட்டாலிக் பொருட்களான கதவு கைப்பிடி, செக்யுரிடி பூட்டு ஆகியவை 70% ஆல்கஹால் கொண்டு சுத்தம் செயாலாம், இதற்கு ப்லீச் உகந்ததல்ல.

5. அதிக அசுத்தமான பகுதிகளில் (டாய்லட் பவுல் அல்லது அதன் சுற்றுப்புறங்களில்) கிருமி நாசினியை உபயோகிக்காதீர்கள், அவ்வாறு தெளிக்கும் போது மேலும் தொற்று அதிகரிக்கக்கூடும்.

6. தொற்று பரவாமல் இருக்க, சுத்தப்படுத்திய பின் அந்த துணிகளை (மாப், துடைக்கும் துணி) தனியாக ஒரு பையில் போடவும். கையுறை அணிந்து அந்த பையை கட்டி அப்புறப்படுத்தவும்.

7. சுத்தம் செய்யும் பொருட்களை அடுத்த உபயோகத்திற்கு முன்பு உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும். பக்கட்களை ப்லீச் சொலுஷன் அல்லது சூடான தண்ணீரில் சுத்தம் செய்யவும்.

Source: MoHFW

அதிகரிக்கும் தேவை

சென்னையில் கிருமி நாசினி தெளிப்பான் சேவை வளர்ச்சிக்கான காரணம் என்ன?

“பல்வேறு தளத்திற்கேற்ப இந்த கிருமி இருக்கும் நிலையில் கெமிகல் நாசினியால் இவற்றை அகற்றிட முடியும். ஆதலால், தொற்று ஏற்பட்ட நபரின் வீட்டை தொற்று உறுதியானவுடன் கிருமி நாசியினால் சுத்தம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது மேலும் பரவாமல் இருக்க உதவும்,” என்கிறார் யா ஃபெசிலிடி சர்வீஸ் நிறுவனத்தின் ஜி சாலமன் ஜசின் ஃபின்னே.

அதிகரித்து வரும் தனியார் சேவைக்கான தேவை.
படம்: யா ஃபெசிலிடி செர்வீஸ்

சென்னை மாநகராட்சியில் நிலவும் பணியாளர்கள் தட்டுப்பாடே தனியார் சேவைக்கான தேவையை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது 10 புதிய வாடிக்கையாளர்களை பெறுவதாக தனியார் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

முகப்பேரில் வசிக்கும் ஜனனி ஷன்முகம், கோவிட்-19 தொற்று உறுதியானவுடன் கிருமி நாசினி தெளிப்பானுக்காக சென்னை மாநகராட்சி உதவி எண்களை தொடர்பு கொண்டார். ஒரு நாள் காத்திருப்பு, தொடர்ந்து தொலைபைசியில் அழைத்தும், எந்த வித பதிலும் அவரால் பெற முடியவில்லை. வேறு வழியின்றி தனியார் சேவையை ₹6000 செலவில் பெற்றனர்.

“மாநகராட்சி அளித்த உதவி எண்கள் எப்பொழுதும் பிசியாகவே இருந்தது. தொற்று உறுதியானதும், மாநகராட்சியின் அறிவுரைப்படி வீட்டை கிருமி நீக்கம் செய்ய தயாரானோம். ஆனால், வேறு வழியின்றி தனியார் சேவையை நாட வேண்டியதாயிற்று. தொற்று உறுதி என தெரிந்த நான்கு நாட்களுக்கு பின் மாநகராட்சி தன்னார்வலர் தொடர்பு கொண்டார்,” என்றார் ஜனனியின் சகோதரர் ஜகன்.

ஆனால், டெங்கு மற்றும் கிருமி நீக்கம் என பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் நிலை என மாநகராட்சி வேலைப்பளுவில் உள்ளது.

கோடம்பாக்கம், ராயபுரம் என தொற்று அதிகம் உள்ள பகுதிகளில், ஒரு நாளில் ஏழு முதல் எட்டு வீடுகளை சுத்தம் செய்யும் பணியை ஒரு பணியாளர் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதுவே தற்போதைய சூழலில் போதுமானதாக இல்லை.

“தொற்று அதிகம் உள்ள நிலையில், தற்பொழுது உள்ள பணியாளர்களிடையே வேலையை பகிர வேண்டியுள்ளது,” என்கிறார் அண்ணாநகரில் பணி புரியும் ஒரு தூய்மை பணியாளர்.

வீட்டை சுத்தப்படுத்தும் முறை:

1. கிருமி நீக்கம் செய்வதற்கு முன், அதிகம் அழுக்கடைந்த மேற்பரப்புகளை நீர் மற்றும் தரை கிளீனர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

2. குப்பை / கழிவுகளை ஒரு பையில் அடைத்து, சீல் வைத்து விட வேண்டும் தனியாக அப்புறப்படுத்த வேண்டும்.

3. அனைத்து கதவுகள், இழுப்பறைகள் மற்றும் கதவுகளை தொகுப்புகளை திறந்து, கிருமி நீக்கம் செய்வதற்கான ரசாயனங்கள் ஊடுருவுவதற்கு வசதியாக வைக்கவும்.

4. ஏர் கண்டிஷனர்கள் மற்றும் வெப்பமூட்டும் கருவிகளை அணைக்க வேண்டும்.

5. துணிமணிகாளை மூடிய அடுக்குகளில் வைக்க வேண்டும். உணவு பொருட்கள், பாத்திரங்கள் இருக்கும் பகுதிகாளை தவிர்த்து சமையலறையின் மற்ற பகுதிகளில் கிருமி நீக்கம் செய்யப்படும்.

6. கிருமி நீக்கம் செய்யப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு அறைகளை உபயோகிக்கக் கூடாது, பின்னர் உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

(ஜகன், ஷாரிக், சாலமன் ஆகியோரின் தகவலின்படி தொகுக்கப்பட்டது)

புதிய வாய்ப்பை நிலைநிறுத்துதல்

புதிதாக உருவாகியுள்ள இந்த வாய்ப்பு நீடிக்குமா? ஆம், என்கின்றனர் வணிக உரிமையாளர்காள்.

இந்தியாவில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது சென்னை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் தொற்றியியல் நிபுணர்களின் கணிப்புகள் படி, இந்த கிருமி மேலும் சில மாதங்கள் நீடித்திருக்கும். தமிழகத்தில் இந்த தொற்று அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உச்சத்தை தொடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், வீடு மற்றும் அலுவலங்களில் கிருமி நாசினி தெளிப்பான் சேவையின் தேவை அதிகரிக்கும்.

“தற்போதைய சூழலில், கிருமி நீக்கம் சேவை, குறைந்தது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிலைக்கும்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் ஷாரிக் & கோ நிறுவனர் முகமத் ஷாரிக். இந்நிறுவனம் கட்டுமானத் தொழில் மற்றும் கிருமி நீக்கம் சேவையை வழங்குகிறது.

நீண்ட கால அடிப்படையில், சேவையை மேலும் விரிவாக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்று காலம் பின், வீடு மற்றும் அலுவலகங்கள் ஆண்டு ஒப்பந்த(AMC) அடிப்படையில் சேவைகளை தொடர்ந்து பெறலாம். நிறுவனத்தின் அளவு, நேரம் அடிப்படையில் சேவைகளை விரிவாக்கி கொள்ளலாம்.

நில அளவை பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பெரிய இடம் என்றால் குறைவான யூனிட் கட்டணம் என மொத்த அளவு அடிப்படையில் சதுரடி கட்டணம் நிர்யணிக்கப்படுகிறது.

சென்னையில் கிருமி நீக்கம் சேவை வழங்கும் சில தனியார் நிறுவனங்கள்:

1. Yah Facilities Service – 86676 03856
2. Shariq & Co – 98841 50994
3. 1 Solutions – 98411 23524
4. Camaleon Service – 89258 87783
5. Pest Rid – 95518 55050

[Read the original article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.