பிளாஸ்டிக் இல்லா எதிர்காலத்திற்கு மஞ்சப்பை அவசியம்: சுப்ரியா சாஹு, IAS

சென்னையில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை

launch of meendum manjappai
பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரிய மஞ்சள் துணிப் பைகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதே மீன்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தின் நோக்கமாகும். படம்: @supriyasahuias/Twitter

Translated by Sandhya Raju

எதிர்காலத்தை வளமாக்க அழகாக்க, மீண்டும் நம் பாரம்பரியத்திற்கு திரும்ப வேண்டும்,” என்கிறார், தமிழக அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சுப்ரியா சாஹு, IAS. தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் பிரசாரத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்தார். இவர் தலைமையில் நடைபெறும் இந்த பிரச்சாரம், ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் நடத்தப்படும் இந்த பிரச்சாரம், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை விட்டு, ஒரு காலத்தில், குறிப்பாக திருமணங்களின் போது மாநிலத்தில் பரவலாகவும் பிரபலமாகவும் இருந்த, ​​சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரிய மஞ்சள் துணிப் பைகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக, சென்னையில் பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் முயற்சியாக, ஆசியாவின் பெரிய மொத்த விலை காய்கறி மற்றும் பழ சந்தையான கோயம்பேடு சந்தையில், பிளாஸ்டிக் பை உபயோகத்தை தடை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

ஒரு முறை உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் உட்பட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019-ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. 2020 ம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் ஊரடங்கால் இந்த தடையை முழுவதுமாக திறம்பட செயல்படுத்துவது கடினமானது. இந்நிலையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள மஞ்சப்பை பிரச்சாரம், முந்தைய தடை சாதிக்க முடியாததை சாதிக்குமா?


Read more: Two years since the ban, plastic is back in a big way. Is COVID the real reason?


சுப்ரியா சாஹுவை அவரது அலுவலகத்தில் சிட்டிசன் மேட்டர்ஸ் சந்தித்த போது பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது, பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த குடிமக்களின் மனநிலையில் மாற்றம் ஆகியவற்றை பற்றி நம்மிடம் உரையாடினார்.

2019 -ம் ஆண்டு பிளாஸ்டிக் உபயோகிப்பு தடை செய்யப்பட்டிருந்தாலும், மீண்டும் அவை உபயோகத்தில் உள்ளன. இந்த தடையை செயல்படுத்தவதில் என்ன குறைபாடு இருந்ததாக நினைக்கிறீர்கள்?

கடந்த கால அனுபவத்தைப் பார்க்கலாம். உலகம் முழுவதும் இது போன்ற நடைமுறை அமல்படுத்தலை பார்த்தோமேயானால், மக்களின் பங்களிப்பின்றி, அரசால் திணிக்கப்படும் கட்டளைகள் பெரும்பாலும் வெற்றி பெற்றதில்லை. இது வரை நடைமுறைப்படுத்துதலை பார்த்தால், தடையை பின்பற்றாத வணிக கடைகளை அதிகாரிகள் மூடினர், அல்லது பொருட்களை கைபற்றினர். ஆனால், மீண்டும் இந்த கடைகள் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தொடங்கின.

launch of meendum manjappai
கோயம்பேடு சந்தையில் வணிகர்களுக்கு துணிப்பை வழங்கப்படும் காட்சி. படம்: @supriyasahuias/Twitter.

நடைமுறைப்படுத்துதல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மக்களின் மனநிலை மாற்றமும் மிக அவசியம். அரசு செயல்படுத்தும் கட்டாய முடிவாக மக்கள் இதை பார்த்தால், இது வெற்றி பெறாது. ஆனால், இதில் உள்ள அவசியத்தையும், நன்மையும் புரிந்துக் கொண்டால், இந்த முயற்சி நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.

மக்கள் மனதில் இந்த மன நிலை மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்தப் போகிறீர்கள்?

மக்களை கவர்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என புரிந்து கொண்டோம், இது பிரசங்கமாகவும் இருக்கக்கூடாது. மக்களுக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு பாடம் சொல்லிக் கொடுத்தல் பிடிக்காது. ஆகையால், நம் பாரம்பரியத்துடன் தொடர்பு படுத்தி இதை செய்ய வேண்டும் என எண்ணினோம். இப்படித்தான் மஞ்சப்பை உதயமானது. இது பழங்காலத்திற்கு தொடர்புடையது மட்டுமின்றி, பழமையை விரும்பும் நவீனத்துவமும் கொண்டது. வருங்கால சந்த்ததியினருக்கு வாழக்கூடிய பூமியை விட்டுச் செல்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த முனைகிறோம். பெரியவர்களை விட, இளம் தலைமுறையினருக்கு இந்த தகவல் சென்றடையும் என உறுதியாக நம்புகிறோம்.

மஞ்சப்பை விழிப்புணர்வு குறித்து சொல்ல முடியுமா?

தமிழகத்தின் கலாச்சாரத்தில் இன்றியமையாத ஒன்று மஞ்சப்பை. முன்பு, அனைத்து திருமண விழாவிலும் இந்த அழகிய மஞ்சப்மப் கொடுப்பார்கள். இதில் தாம்பூலமும், வணக்கம் அல்லது நன்றி என்ற வரைபடம் இருக்கும். இந்த அழகிய பராம்பரியத்தை பரைசாற்றும் விதமாக விழிப்புணர்வு அமைய வஏண்டும் என எண்ணினோம். ஒரு வகையில் பார்த்தால், நமது கலாசாரத்திற்கு மீண்டும் இதன் மூலம் திரும்புகிறோம்.

supriya sahu ias
சுப்ரியா சாஹு, IAS

தற்பொழுது, இதன் உற்பத்திக்கு கட்டுப்பாடோ , வடிவமைப்பிற்கு பதிப்புரிமையோ இல்லை. விருப்பமுள்ள அனைவரும் இதை தயாரிக்கலாம். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (TNPCB) இணையதளத்தில் ஆன்லைன் விற்பனைக் கடை தொடங்குகிறோம், அதில் மதிய உணவு பாக்ஸ், ஸ்லிங் பேக்குகள், கிராஸ் பேக்குகளை பிரபலப்படுத்துவோம். தலைமை செயலகத்தில் மஞ்சப்பை குழு ஒன்று என் தலைமையில் செயல்படுகிறது, இதை பிரபலப்படுத்துவது குறித்து சிந்தித்து வருகிறோம்.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கு பதிலாக விலை குறைவான மாற்று குறித்து, குறிப்பாக சிறு வணிகர்களுடையே விவாதம் எழுகிறது. இதை எப்படி அணுகுகிறீர்கள்?

20 வருடம் முன் என்ன செயல்முறை இருந்தது? அப்போழுது பிளாஸ்டிக் இல்லை, நாம் நன்றாகவே வாழ்ந்தோம். மக்கள் பைகளை எடுத்துச் சென்றார்கள். மஞ்சப்பை அடிப்படையில் ஒரு குறியீடு உருவகம், அதற்கான தேவை வந்துவிட்டது என்பதையே இது குறிக்கிறது. நாங்கள் சொல்ல வருவது, நீங்கள் ஏன் சொந்தமாக பைகளை எடுத்துச் செல்வதில்லை? குடிநீர் பாட்டிலை ஏன் எடுத்துச் செல்வதில்லை? ஏன் பிளாஸ்டிக் பாட்டிலை நம்பியுள்ளீர்கள்? இன்று நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில் உபயோகம் இல்லை. அங்கு எப்படி மக்கள் செயல்படுகிறார்கள்? மக்கள் தங்கள் பாட்டிலை எடுத்துச் செல்கிறார்கள் அல்லது பொது நீர் வசதிகளை உபயோக்கிறார்கள்.


Read more: Zero-waste packaging: Help CAG build a list of shops that avoid plastic


பல நாடுகளில் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது, மேலும் பல நாடுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அமலாக்கம் கடுமையாக உள்ளது. நம்மால் ஏன் முடியாது? ஒவ்வொரு முறையும், மாற்றத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கும் போது, கடும் விமர்சனங்கள் எழுகின்றன.

மாற்று வழிகளைப் பொறுத்தவரை, நிறைய உள்ளன. பிளாஸ்டிக் லாபி தீவிரமாக உள்ளது. உத்திர பிரதேசம், பீகார் அல்லது மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முன்பு தண்ணீர், டீ ஆகியவற்றை மண் குவளைகளில் தான் அருந்தினர், ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் கப், பாட்டில் உபயோகிக்க தொடங்கினர். பெரிய நிறுவனங்களுக்கு இதில் பங்கு உள்ளது. இதனால், மண் குவளையாளர்களுக்கு வேலையின்றி போனது. மாற்று வழிகளை நோக்கி சென்றால், அது நிச்சயம் கிடைக்கும், ஆனால் நாம் தான் தேடிப்போவதில்லை.

தடை அமல்படுத்துவதில் மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா?

பன்முறை உத்தியை கடைப்பிடிக்க வேண்டும். முதலில், நடத்தை மாற்றங்களை கொண்டு வர வேண்டும். நமது பாரம்பரியம் குறித்தும், குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க பூமியை காப்பாற்றுவதின் அவசியம் குறித்தும் வலியுறுத்த வேண்டும். 2030 அல்லது 2050, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் இருந்தால், எந்த மாதிரியான உலகத்தை நாம் விட்டு செல்கிறோம் என எண்ண வேண்டும்? ஆகையால் இந்த கோணத்திலிருந்து மக்களை அணுக வேண்டும். பசுமை குழுக்கள், மாணவர்கள், மாணவ பிரதிநிதிகள் என அனைத்து தரப்பு மக்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறோம்.

நடைமுறைப்படுத்தலுக்கு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றுவோம். தடையை மீறும் கடைகளின் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா?

பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு, விநியோகம், போக்குவரத்து, விற்பனை ஆகியவற்றுக்கு முதல் முறை அபராதம் ரூ.25,000. இரண்டாவது முறை ரூ.50,000, மூன்றாவது முறை ரூ.1 லட்சம் ஆகும்.

டிசம்பர் 1-ம் தேதி சென்னையில் 15 மண்டலங்களில் 4816 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 1233 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டு 3,73,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

ரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் குறித்து சென்னை மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

பிளாஸ்டிக் உபயோகத்தின் தீங்கு குறித்து யாருக்கும் சொல்லத்தேவையில்லை என நினைக்கிறேன். தினந்தோறும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், வடிகால்கள் எவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகாளால் நிரம்பியிருந்தன என நம் அனைவருக்கும் தெரியும், சென்னை ஒரு அழகிய நகரம். இதன் முந்தைய அழகை நாம் மீட்டெடுக்க வேண்டுமென்றால், துணி பைகளுக்கு மாறுவது ஒன்றே தீர்வாகும். மஞ்சப்பை-க்கு மாறுங்கள் என புன்னகையுடன் முடிக்கிறார் சுப்ரியா சாஹூ.

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Korah Abraham 27 Articles
Korah Abraham is Reporter at Citizen Matters Chennai. He was earlier a reporter with The Newsminute and has reported on issues ranging from the Kerala floods in 2018 and 2019, politics, crime and society. Korah completed his graduation in Journalism, Psychology and English from Christ University, Bengaluru and a PG Diploma in New Media from the Asian College of Journalism.