தனிமரம் தோப்பாகாது – சர்வீஸ் சாலை சரி செய்ததின் உதாரணம்

மக்கள் பங்கேற்பின் முக்கியத்துவம்

chennai service road nhai
அதிகாரிகளிடம் புகார் கொடுத்து சாலை சரி செய்யப்பட்டது. படம்: ஸ்வாமிநாதன்

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் 200 அடி பைபாஸ் (NHAI) சாலையின் பணிகள் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு இருபுறத்திலும் ஒருபகுதி கால்வாய் அமைக்கப்பட்டு இருந்தது. சர்வீஸ் சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் 1 ×4 அடி அகலம், 8 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையின் இருபுறமும் தார்சாலை இரண்டு தடவைக்கு மேல் போடப்பட்ட காரணத்தினால் கால்வாயும் – தார் சாலையும் ஒரே சம அளவில் நிறைய பகுதியில் இருந்தது.

அப்பகுதியில் வேலைநிமித்தமாக தினம் சென்று வரும் அப்பகுதியில் கால்வாயில் நாய், ஆடு, மாடுகள் விழுந்த வண்ணம் வாரத்திற்க்கு இரண்டு தடவைக்கு மேல், அவர்களை காப்பாற்றும் பொருட்ட வண்ணம் (நடந்து செல்லும் மக்கள் துணையுடன் செய்து இருந்தேன். மழைபெய்யும் காலங்களில் இரவு நேர பணிக்கு சென்று வருபவர்கள் சரியான ஒளி விளக்கு இன்மை காரணத்தினாலும், மழைநீர் சமஅளவில் உள்ளதாலும் பலர் விழுந்து இயற்கை எய்தினார்கள்.


Read more: How citizen protests can help fix civic issues in Chennai


சாலையில் உள்ள பிரச்சனைகள்

கடந்த கொரோனா கால கட்டத்தில் மாலை நேரத்தில் சுமார் 7.00 மணிக்கு மேல் தாயும், மகளும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த சமயம், சாலையில் விளக்கு இன்மை, டிராபிக்கான நேரத்தில், பிரேக் பிடித்து கால் ஊன்றிய சமயத்தில் தவறி விழுந்து இருவரும் – மாண்டனர்- மிக-மிக-வருத்தமான சமயம்.

இவர்களின் ஆத்மா ஆசீர்வாதத்தால் மறுநாள் புதிய தலைமுறை T.V வாயிலாக மாலை 4.மணி அளவில் நேரடி வாயிலாக அறிவிக்கப்பட்டு, உரையாற்றினேன். அன்று முதல் சிந்தித்தேன், வெளியே செல்ல முடியாத நேரம் தட்டுபாடு வேறு, மீறியும் கிண்டி NHAI அலுவல் சென்றால் யாரும் இல்லை, தொடர்ந்து சென்று வர அதிகாரி போன் நெம்பர் வாங்கி போன் செய்தேன்.

மிகவும் கட்டுப்பாடான நேரமாக உள்ளதால் கஷ்டபட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு இருந்தேன். அச்சமயத்தில் காவல்துறையின் போக்குவரத்துறையும் கடிதம் வழங்கி உள்ளதை அறிந்தேன். அப்பகுதியில் 3 மீட்டர் மட்டும் தான் அமைக்கப்பட்டது.

chennai nhai service road

அப்பணிகள் நடக்கும் வேளையில் டில்லி அலுவலகத்தை கண்டு பிடித்து அவர்கள் மொழிக்கேற்ப பேசினேன். அவர்களும் புரிந்து கொண்டார்கள். நாம் கேட்டபடி சுமார் ஒட்டு மொத்தமாக சர்வீஸ் சாலையின் இருபுறமும் உள்ள கால்வாயை மூடி தர வேண்டும். எனது வேண்டுகோள் படி கால்வாயில் உள்ள டஸ்ட். குப்பைகள் அகற்றியும் கேட்டபடி அடி தார் சாலை மட்டத்தில் இருந்து உயர்த்தியும் மேலே (Slab) தரை தளம் போல் அமைத்துள்ளார்கள். இப்பணி தொலைபேசியின் மூலம் தொல்லை அளித்தும் டில்லி, சென்னை-NHAI அலுவலகம் அதிகாரிகளை தொடர்ந்து தினமும் கேட்டு கொண்டபடியால் மிக விரைவில் முடித்தார்கள்.


Read more: Poor state of Chennai’s public infrastructure must be fixed before cosmetic makeover


குறைகள் செரிசெய்தல்

ஒரு சில வேலைகள் உள்ளதையும் விரைவில் சீர்செய்வோம் என்று உறுதியளித்துள்ளனர். குறைந்த கால நேரத்தில் பைபாஸ் சர்வீஸ் சாலையில் அமைந்த கால்வாய் × அடி உயர்த்தியும், மேல் தளம் SLAB போட்டு மக்களையும், மாடுகள், மற்றும் ஆடு நாய் போன்றவை காப்பாற்றப்பட்டன.

எனது நீண்ட கால கனவாக நினைவில் இருக்கும் நீண்ட நாட்களாக மக்கள் படும் கஷ்டங்கள் ஆராய்ந்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகிறேன். எனது பணிக்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தந்து கொண்டிருக்கிற எங்கள் JAMBA United Welfare Association சங்கத்தார்களும் மற்றும் சுற்றுப்பகுதியில் வசிக்கும் GCC வார்டு 91 & 143 பகுதி வாழ் மக்களுக்கும், மேற்படி நடந்த பணிகள் தொய்வடையாமலும் போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமலும் பணியாளர்கள் பணி செய்வதற்க்கு ஒத்துழைப்பு அளித்த காவல்துறை அதிகாரிகளுக்கும் மிகுந்த ஆதரவு அளிக்கும் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Swaminathan Subramanyam 1 Article
Swaminathan is a civic activist and resident of Mogappair.