மக்கள் மனம் கவர்ந்த மன்றம்

TAMIL THINKERS' MEET

The platform for Tamil thinkers. Pic: Mandram Facebook Page.

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுள்ள ஒத்த பார்வையுள்ள சிந்தனையாளர்கள் ஒன்று கூடிய ‘மன்றம்’ நிகழ்ச்சி நவம்பர் மாதம் 17ஆம் நாள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சி பூங்கா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆறு பேச்சாளர்கள் அவர்களின்  வேறுபட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பல்வேறு துறைகளில் உள்ள, பல வயதினை கொண்ட பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழவும், உரையாடலில் பங்கு கொள்ளவும் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் உரையாட ஆறு பேச்சாளர்கள் வெவ்வேறு தலைப்புகளை தேர்ந்தெடுத்திருந்தனர். கணினி நுண்ணறிவு, இந்திய சட்ட சாசனம், மரங்களின் மகிமை, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வெளிப்படுத்தும் திறன்கள் போன்ற தலைப்புகளில் அறிவுபூர்வமான, ஆர்வம் தூண்டும் வகையில் பங்குகொண்டோர் பேச, சீராக நடைபெற்றது மன்றத்தின் மூன்றாவது நிகழ்ச்சி.

ஜோஹோ நிறுவனத்தின் சிந்தனையாளர் ராஜேந்திரன் தண்டபாணி கண்ணி நுண்ணறிவின் வளர்ச்சியையும், அதனின் எதிர்காலத்தைப் பற்றியும் விவரித்தார். உலக சதுரங்க சேம்பியன்களை தோக்கடிப்பதிலிருந்து, ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் மக்களின் விருப்பங்களை கண்டறியும் வரை கணிணி நுண்ணறிவின் திரன் மற்றும் பயன்கள் பல என்பதை எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் மேம்பட்ட தரன்களால் தாமே மனிதனின் பங்கின்றி அடுத்த மாற்றங்களை கணிணியில் உருவாக்கும் அளவுக்கு கணினி நுண்ணறிவு மேம்பட வாய்ப்புள்ளது என்ற வியத்தகு தகவலையும் கூறினார்.

தொழில் நிறுவனர் சீ கே குமரவேல் நாட்டிற்கு தொழில்முனைவோரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பாமர மக்கள் வாழ்க்கை மேம்பாடு தற்பொழுது உள்ள அரசியல்வாதிகளின் குறிக்கோள் இல்லை. நடுத்தர வர்க்கம் மற்றும் தொழில்முனைவோர் இருவரும் இணைந்து மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்ப்படுத்தி அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும் என கூறினார். இதில் பெண்களின் பங்கும் மிக முக்கியமான ஒன்று என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கிஷோர் குமார் இந்திய சட்ட சாசனம் பற்றி உரையாற்றினார். சட்ட சாசனம் எவ்வித மாற்றங்களை கண்டது மற்றும் அதற்கு காரணமான நிகழ்வுகள் மற்றும் நபர்களை பற்றி விரிவாக கலந்து கொண்டோர்க்கு தெரிவித்தார்.

தஸ்லீம் பர்ஸானா, திவ்ய ராஸா ட்ரஸ்ட்டின் அரங்காவலர், ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் திரண்களை பற்றி விவரித்தார். தன்னுடைய கண்காணிப்பில் இருக்கும் குழந்தைகள் சலர் பேச இயலாத நிலையிலும் தங்களுடைய கருத்துகளை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்கள் என பல்வேறு எடுத்துக்காட்டல்களுடன் கூறினார். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அன்பாலும் அரவணைப்பாலும் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ இயலும். அதற்கு அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களிடம் புரிதல் மற்றும் பொறுமை கொண்டு நடக்க வேண்டும் என்று கூறினார்.

பார்த்தசாரதி ராமானுஜம் இன்றைய உலகில் பாரதத்தின் கலை மற்றும் விஞ்ஞானம்  எவ்விதமான பங்கினை வகிக்கிறது என் விவரித்தார். அன்றாட வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த எவ்வாறு அவை உதவுகின்றன என எடுத்துரைத்தார். தமிழில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் அரசியல் அல்லது இலக்கியம் சார்ந்தவையாகவே இருந்த நிலையில் மன்றத்தின் நிகழ்ச்சி வேறுபட்ட சமகால கருத்துக்களை பகிரும் புதிய மேடையாக திகழ்வது பாராட்டத்தக்கது என் போற்றினார்.

சென்னையின் பசுமைப்படுதுதல் குறித்து உரையாடிய ‘நிழல்’ சார்ந்த ஷோபா மேனன், மக்களின் பங்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பசுமைப் படுத்தல் என்ற சமூக பணியானது மக்களின் பொறுப்புமே ஆகும். இது அரசின் பொறுப்பு மட்டுமன்று.இப்பூமியை சார்ந்த  பழமையான மரங்களை மீண்டும் விதைக்கும் முக்கியத்துவத்தை பற்றி கூறினார். முதிர்ந்த மரங்களை பாதுகாத்தல் மற்றும் சமூக பூங்காக்களை பசுமைப் படுத்தல், பராமரித்தல் பற்றி உரையாடினார். உரையின் முடிவில் பலர் இந்த பணியில் ஈடுபட ஆர்வம் கொண்டுள்ளதாக அவரிடம் தெரிவித்தனர்.

பல புதிய தகவல்கள் தெரிய வித்தாக மன்றத்தின் மூன்றாவது நிகழ்ச்சி திகழ்ந்தது

About Aruna Natarajan 160 Articles
Aruna is a staff reporter at Citizen Matters Chennai. Apart from writing, she enjoys watching football.