கொரட்டூர் ஏரியை காக்க மக்களும் அரசாங்கமும் இணைந்து செயல்பட வேண்டும்

கொரட்டூர் ஏரி பாதுகாப்பு

flamingoes in korattur lake
கொரட்டூர் ஏரியில் உள்ள உயிரினங்கள் மாசினால் பாதிக்கப்படுகின்றன. படம்: பரிதிமதி / விக்கிமீடியா காமன்ஸ் (CC BY:SA 4.0)

கொரட்டூர் ஏரி 20 ஆண்டுகளுக்கு முன்பாக சமையலுக்கு குடிநீருக்கு பயன்படுத்தி வந்துள்ளனர் ஆனால் தொழிற்சாலை மற்றும் பால்பண்ணை நச்சு கழிவுகளால் ஏரி மாசடைந்தது இதனால் நீரை பயன்படுத்த முடியவில்லை.

நிலத்தடி நீர் சுற்றி பாதித்துள்ளது கழிவு நீரால் ஆகாயத்தாமரை அதிகம் வளர்ந்துள்ளதால் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது ஏரியைச் சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்களின் வாழ்வாதாரம் ஏரியை நம்பி தான் உள்ளது ஏரி மாசடைந்து மண் மற்றும் தண்ணீர் பாதிப்பால் மீன் இனப்பெருக்கம் குறைந்துள்ளது.

ஆக்கிரமிப்பால் ஏற்படும் மாசு 

ஏரியைச் சுற்றிலும் அரசியல் போர்வையில் சமூக விரோதிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக போய்விடுகிறது.

ஓராண்டுக்கு முன்பாக கோர்ட்டு ஏரியில் ஆக்கிரமித்துள்ள 12 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது 21 நாளைக்குள் காலி செய்ய வேண்டும் என்று ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து ஏரிக்கரையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது ஏரிக்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் கட்டிடம் கட்டும் பணியில் உள்ளவர்கள் தங்களது கட்டடக் கழிவுகளை எல்லாம் – முக்கியமாக சிமெண்ட் பைகள், டைல்ஸ் வரும் பிளாஸ்டிக் – என எல்லாவற்றையும் ஏரியில் வந்து கொட்டுகின்றனர்.

இது குறித்து பல தடவை நீர்வள ஆதாரத்துறை சென்னை மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது இல்லை தன்னார்வல்களை கொண்டு தொடர்ந்து ஏரியை தூய்மை செய்ய முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அரசு கவனம் செலுத்தினால் மட்டுமே ஏரி மீட்கப்படும்.


Read more: Thazhambur Lake restoration brings fresh lease of life to the area


அரசின் நடவடிக்கை என்ன?

கழிவுநீர் தொழிற்சாலை நச்சுக் கழிவுநீர் ஏரிக்குள் செல்வது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில்  2014 ஆம் ஆண்டில் கொரட்டூர் ஏரி குறித்தான தரவுகளை, தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமாக திரட்ட ஆரம்பித்தேன்.

அதனைக் கொண்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பொதுப் பணித் துறை, மாசுக் கட்டுப்பாடு வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைக்கு மனு அளித்தும் பலனின்றி உயர் அதிகாரிகளை நேரில் பலதடவை சென்று பார்த்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் 2016 ஆம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்ய பட்டது. கொரட்டூர் ஏரி மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகி வந்ததை தடுக்கும் வகையில் 2016 ல் நீதிபதி உடனடியாக உத்தரவு பிறப்பித்தார் .

கொரட்டூர் ஏரியின் இரண்டு உள்வரத்து கால்வாய்கள் தற்காலிகமாக மண் போட்டு மூடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் மூடியதை ஜேசிபி கொண்டு சென்னை மாநகராட்சி சட்டத்திற்கு புறம்பாக உடைத்து விடும்.

மழைநீருடன் நச்சு கழிவு நீரும் கலந்து ஏறிக்குள் சென்று விடும் மழை நின்ற பிறகு கால்வாயை மூடாமல் விட்டு விடுவார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பிறகு, கால்வாய் மீண்டும் தற்காலிகமாக மூடப்படும். இதே நிலைதான் 2016 இல் தொடங்கி 2021 வரை இருந்தது.

2021 டிசம்பர் டிசம்பர் மாதம் எட்டாம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொரட்டூர் ஏரியை கள ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் கழிவுநீர் வருவதை தடுக்க வேண்டும் ஏரி எல்லை வரையறை செய்ய வேண்டும், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட வேண்டும், ஏரியை ஆழப்படுத்திட வேண்டும், ஏரியன் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் கலங்கள் உயரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் வழங்கினோம்.

அதற்கு இன்றைய நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

ஏரியில் உள்வரத்து வாய்க்கால் ரெகுலேட்டர் அமைக்கப்பட்டது தொடர்ந்து ஏரியை சுற்றி பல்வேறு இடங்களில் சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால் கால்வாய் கட்டி ஏரிக்கு கழிவுநீர் செல்லும் வகையில் செய்து உள்ளது. 

கொரட்டூர் ஏரி மறுசுரமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஆவலோடு காத்திருக்கிறோம்.


Read more: How to go about lake restoration: Learnings from efforts in Chennai


ஏரி பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்

அரசாங்கத்தின் நடவடிக்கைக்காக காத்திருக்கும் நிலையில் கொரட்டூர் மக்கள் ஏரியை பாதுகாக்க ஒன்றுதிரண்டு எம்மால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இதற்காக கொரட்டூர் ஏரி பாதுகாப்பு
மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டது.

ஏரிக்கு வரும் பறவைகளை வசதிக்காக ஏரியின் மையப் பகுதியில் இரண்டு மண் திட்டுகளை உருவாக்கி உள்ளோம். தமிழ்நாடு பெட்ரோ ப்ராடக்ட்ஸ்  TPL நிறுவனத்தின் உதவியுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு ஏரியில் குப்பை போடுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வேலி அமைத்து கரை முழுவதும் மரங்கள் வைத்துள்ளோம்.

கொரட்டூர் ஏரியை சுற்றியுள்ள மக்களுக்கும் வெளியில் உள்ள மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பொங்கலுக்கு பிறகு ஏரி பொங்கல் திருவிழா, மார்ச் 22 உலக தண்ணீர் நாளை முன்னிட்டு விழிப்புணர்வுக்காக நீர் ஓட்டம் என பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

chennai kapmi world water day
உலக தண்ணீர் தினத்தன்று ஆண்டுதோறும் நடத்தப்படும் விழா. படம்: கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7 மணி முதல் 9 மணி வரை ஏரிகள் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மது பாட்டில்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் பல்வேறு கல்லூரி என் எஸ் எஸ் மாணவ மாணவிகளை கொண்டு தொடர்ந்து விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொண்டு படுகிறோம்.

கொரட்டூர் ஏரியில் ஆகாயத்தாமரை அதிக அளவில் படர்ந்து உள்ளது. இதனால் உயிர்ச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளதால் நாங்களே ஏரிகள் இறங்கி ஆகாயத்தாமரைகளை அகற்றினோம் தற்போது எக்ஸ்னோரா தலைவர் ஐயா செந்தூர் பாரி அவர்கள் படகு ஒன்றை வழங்கி உள்ளார்.

மக்களின் முயற்சியால் பல நல்ல மாற்றங்கள் கொரட்டூர் ஏரியில் ஏற்பட்டாலும், ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் போன்றவற்றால் ஏற்படும் தீமையை அரசாங்கம் கட்டுப்படுத்தினால் மட்டுமே கொரட்டூர் ஏரியை பாதுகாக்க முடியும்.

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Sekaran Surulimani 1 Article
Sekaran is the Secretary of the Korattur Aeri Padhukappu Makkal Iyakkam (KAPMI).