சென்னையில் நிலப்பரப்பு வெப்பநிலை: வெப்பம் அதிகரித்துள்ள பகுதிகள் மற்றும் காரணிகள்

நகரமயமாக்கம் மற்றும் வெப்பநிலை போக்கு

Chennai Heat Island
நகர விரிவாக்கம் மற்றும் பசுமை வெளிகள், சதுப்பு நிலங்கள், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய கடலோர பகுதிகளின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் சென்னையில் வெப்ப நிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. படம்: பத்மஜா ஜெயராமன்.

Translated by Sandhya Raju

வாய்ப்புகள் தேடி மக்கள் நகர்ப்புறம் நோக்கி நகரத் தொடங்கியதில் உலகம் முழுவதும் நகரமயமாக்கல் வெகு விரைவாக முன்னேறியுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப நகரத்தின் உள்ளேயேயும், அதனை சுற்றியும் விரிவாக்கம் செய்யும் நிர்பந்தத்திற்க்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், வெப்ப நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, அதிக மாசு என அதன் தாக்கம் பல எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. 2001 ஆம் ஆண்டு 6.6 மில்லியனாக இருந்த மக்கள் தொகை 2011-ல் 8.6 மில்லியனாக (சென்சஸ் படி) அதிகரிக்க, சென்னையும் இந்த மாற்றத்திற்கு விதிவிலக்கல்ல. சமீபத்தில் வெளியான ஆய்வின் படி, 1991-2016 ஆண்டில் சென்னையில் கோடை வெப்பம் (மார்ச் – மே) 5.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. மக்கள் தொகை ஏற்றம், சீரற்ற நகரமயமாக்கல் ஆகியவை இதற்கான முக்கிய காரணியாக அமைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் இரண்டு இந்திய மெகாசிட்டிகளுக்கான மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் அதன் விளைவுகள்: பெங்களூரு மற்றும் சென்னை, என்ற தலைப்பில், கராக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஜூலை 2021 இல் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டது. நகர விரிவாக்கம் மற்றும் பசுமை வெளிகள், சதுப்பு நிலங்கள், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய கடலோர பகுதிகளின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் பாதிப்பு குறித்து இதில் அடிக்கோள் காட்டப்பட்டுள்ளது.

நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை மாற்ற போக்கை குறிப்பதோடு, 2025-ல் சென்னையின் வாளர்ச்சி எவ்வாறு இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Read more: Why some parts of Chennai felt hotter than others this summer 


நில பரப்பு வெப்ப நிலையும் காலநிலை மாற்றமும்

திட்டமிடப்படாத நகரமயமாக்கல் காரணமாக நகர்ப்புற வெப்ப தீவுகள் உருவாகிறது – சுற்றியுள்ள பகுதிகளை விட வெப்பமான வெப்பநிலையை அனுபவிக்கும் நகர்ப்புறங்கள். அதிக மக்கள் தொகை மற்றும் இடுக்கு கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இது போன்ற நிலை காணப்படுகிறது. இரு கட்டிடங்களுக்கிடையே வெப்பம் அடைபடுவதால், இந்த பகுதிகளில் வெப்ப அதிகரிக்கிறது.

“நிலபரப்பு வெப்பம் (LST) நகர்ப்புற வெப்ப தீவுகளின் காட்டியாக உள்ளது. இது பூமியின் மேற்பரப்பு வெப்பம் ஆகும். நீண்ட காலமாக நிலபரப்பில் வெப்பம் அதிகரிக்கும் போது, மேற்பரப்பில் உறிஞ்சப்படும் வெப்பம் அதிகமாக இருக்கும்,” என்கிறார் கரக்பூரில் உள்ள இந்திய இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ரன்பீர் மற்றும் சித்ரகுப்தா உள்கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் மேலாண்மை பள்ளியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆய்வு குழுவின் உறுப்பினர், பரத் எச் ஐதல்.

அதிக போக்குவரத்து, கட்டிடம் கட்டுதல், மின்சார உற்பத்தி ஆகியன காற்றை மாசுபடுத்துவதோடு, நிலபரப்பின் வெப்பத்தையும் அதிகரிக்கிறது. எனவே, இது கிரீன்ஹவுஸ் விளைவு மற்றும் புவி வெப்பமடைதலின் முக்கிய காரணியாகும், காலநிலை மாற்றத்தை வரையறுக்கவும் உதவுகிறது.


Read more: Why Chennai needs to put its ‘heat action plan’ to practice right away


சென்னையில் நிலப் பயன்பாட்டின் வெப்பநிலை போக்குகள்

ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஐஐடி கரக்பூரில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 1991 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நான்கு நில பயன்பாட்டு வகுப்புகளுக்கான நிலப்பரப்பு வெப்பநிலையை அளவிட்டனர். அவை:

  • நகரம் – குடியிருப்பு மற்றும் தொழில்துறை பகுதிகள், மேற்பரப்புகள் மற்றும் கட்டப்பட்ட பகுதிகள்;
  • தாவரங்கள் – காடுகள், பயிர் நிலங்கள் மற்றும் நர்சரிகள்;
  • நீர் நிலைகள் – தொட்டிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள்
  • மற்றவை – பாறைகள், குவாரி குழிகள், கட்டிட தளங்களில் திறந்த நிலம் மற்றும் கற்களற்ற சாலை.

நகர்புறம்

நகர்புறம் என வகுக்கப்பட்ட பகுதியில் 1991-ம் ஆண்டு 1.46% என்றிலிருந்து 2016-ல் 22% என உயர்ந்திருந்தது. இதனால், நில வெப்பம் 33.4 டிகிர் செல்சியஸ் என்ற அளவிலிருந்து 38.92 டிகிரி செல்சியசாக உயர்ந்தது.

“தற்பொழுது, கட்டிடங்களைச் சுற்றி மிகக் குறைந்த இடம், அது கூட பெரும்பாலும் இல்லை. மேலும், வீடுகளின் கட்டிடக்கலையும் மாறியுள்ளது. பெரிய கண்ணாடி முகப்புகளை [கட்டிடங்களில்] மக்கள் விரும்புகிறார்கள், இந்தியாவில் வெப்பமண்டல காலநிலை உள்ளது, எனவே வெப்பத்தை வெளியேற்ற வேண்டும், குளிர்ந்த காற்று உள்ளே வர வேண்டும். கண்ணாடியைப் பயன்படுத்துவது வெப்பத்தைத் தக்க வைக்கும்.,” எனக் கூறும் ஐதல், இது குளிர்சாதன பெட்டிகளின் உபயோகத்தை அதிகரிப்பதோடு, வெப்பக் காற்றுடன் கார்பன் உமிழ்வையும் வெளியேற்றுகிறது.

இது பெரும்பாலும் சென்னையில் காணப்படுகிறது. “ஐ.டி நிறுவனங்கள் தங்களின் அலுவலகத்தில் கண்ணாடி அதிகம் பயன்படுத்துவதால், அதிக வெப்பத்தை தக்க வைத்துக் கொள்கிறது. இதனால் அதிக அளவில் குளிர்சாதன பெட்டியை உபயோகிப்பதோடு, கட்டிடத்தின் வெளிபுறத்தையும் வெப்பமாக்குகிறது.,” எனக் கூறும் சென்னையில் உள்ள கட்டிடக் கலை நிபுணர் பவித்ரா ஸ்ரீராம், இதில் மேலும் கட்டுமானப் பொருட்களும் நிலைத்து நிற்காது.

Glass facade building -Tidel IT Park Chennai
சென்னையிலுள்ள அலுவலங்கள் பெரும்பாலும் கண்ணாடியை உபயோகிப்பதால், வெப்பத்தை ஈர்க்கிறது. சென்னையிலுள்ள டைடல் பார்க்.
படம்: ஷன்முகம் பி/விக்கிமீடியா காமன்ஸ் (CC BY-SA 4.0)

பழங்காலத்தைப் போல கட்டிடங்களை உருவாக்க மண் அல்லது கல் போன்ற பாரம்பரிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டால், கட்டிடத்தின் உள்ளே ஒரு வெற்றிடம் இருக்கும். “வெளியே வெப்பம் அதிகமனாலும், கட்டிடத்தின் உட்புறம் குளுமையாக இருக்கும்,” என விவரிக்கிறார் பவித்ரா. எனினும், உயரமான வளாகங்களை உருவாக்க மண் அல்லது கல் சாத்தியமில்லை என்று அவர் கூறுகிறார், எனவே மக்கள் கான்கிரீட் மற்றும் எஃகு போன்ற பொருட்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

தாவர பகுதிகள்

தாவரத்திற்க்கு உட்பட்ட பகுதிகள் 1.38 சதவிகித்திலிருந்து 1.83% என உயர்ந்திருந்தாலும், இங்த பகுதிகளில் நிலபரப்பு வெப்பம் அதிகரித்துள்ளது. 1991-ம் ஆண்டு 30.9 டிகிரி செல்சியஸ் என்றிருந்த வெப்பம் 2016-ம் ஆண்டு 37.15 டிகிரி செல்சியசாக அதிகரித்துள்ளது. காட்டுப்பள்ளி அருகே அணுமின் நிலையம் அமைக்க, 50 ஏக்கர் பசுமை காட்டின் அழிப்பே இதற்கு முக்கிய காரணம் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வரதா புயலின் தாக்கத்திற்கு பின் கேர் எர்த் டிரஸ்ட் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், நகரத்தின் பசுமை போர்வை 15% (2018) என்ற அளவில் இருப்பதாகவும், இது மத்திய சுற்றுச்சூழல் துறை வரையுறுத்துள்ள 33% வழிகாட்டுதலை விட வெகு குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளது.


Read more: Opinion: Chennai needs a law to save its green lungs


நீர்நிலைகள்

நீர் நிலைகள் பகுதி என கண்டறியப்பட்ட பகுதிகளிலும் வெப்பம் 1991-2016 காலகட்டத்தில் 25.77 சதவிகிதத்திலிருந்து 30.49 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. “சென்னையில் உள்ள பெரும்பாலான ஏரிகள் சுத்திகரிக்கப்படாத நீரைப் பெறுகின்றன, இது இந்த நீர்நிலைகளை மாசுபடுத்துகிறது. இது ஏரிகளின் வெப்பநிலையை அதிகரிக்கலாம்” என கூறுகிறார் கட்டிட பாதுகாப்பு கலை வல்லுனர் ஆர் சாய்கமலா.

ஏரிகள் மாசுப்படும் போது, நீரில் உள்ள ஊட்டச்சத்து உள்ளடக்கம் அதிகரித்து, தாவரங்கள் மற்றும் பாசிகள் கழிமுகங்களில் அதிக அளவில் வளரச் செய்கிறது. “இது சூரிய ஒளி ஊடுருவலை தடுக்கிறஹ்டு. இதனால், நீர்நிலைகளால் வெப்பத்தை திறம்பட உறிஞ்ச முடியாது, நகரத்தின் குளிரூட்டுலை தடுக்கிறது,: என விவரக்கிறார் ஐதல்.

சென்னையின் பெரும் சவாலாக நீர் மாசுபடுதல் உள்ளது. கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் தொடர் முயற்சி, கட்டுமான கழிவுகளால் எவ்வாறு தடுக்கப்படுகிறது என ஹிந்து நாளிதழில் வெளியான ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பிற பயன்பாட்டு நிலம்

பிற பயன்பாட்டிற்கான நிலத்தில், 1991 ஆம் அஆண்டு 32.45 டிகிரி அளவிலிருந்து 42.13 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. “பிற பயன்பாடு” என வகைபடுத்தப்பட்ட நிலங்கள், விவசாயம் மற்றும் பசுமை பயங்காள் அகற்றப்பட்டதால், நிலப்பரப்பு வெப்பம் அதிகரித்துள்ளது.

2016-ம் ஆண்டின் உயர் மற்றும் குறைந்த மேற்பரப்பு வெப்பநிலை கொண்ட இடங்களை இந்த ஆய்வறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. சென்னை சர்வதேச விமான நிலையம், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் அருகிலுள்ள வெளி நிலங்கள் மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் உயர் நிலபரப்பு வெப்பம் இருந்தது.

Chennai airport runway
சென்னை விமான நிலைய ரன்வே. படம்: வினோத் தம்பிதுரை./ CC BY-NC-SA 2.0

“விமான நிலையங்கள் அடர்ந்த பரப்பை கொண்டவை. குளிர் சாதனங்கள் வெப்பத்தை அதிகரிக்கின்றன. மேலும், ரன்வேக்கள் வெப்ப உணர்திறன் பொருட்களால் அமைக்கப்படுவதால், இந்த பகுதிகளில் அதிக வெப்பம் நிலவுகிறது. பசுமை இடங்கள் மற்றும் நீர் நிலைகள் இல்லாததும் வெப்பத்திற்கு காரணமாகிறது. வெட்ட வெளி இடங்களிலும் மரங்கள் இல்லாததும் காரணம்.” என்கிறார் பரத் ஐதல்.

மரங்கள் நிறைந்த கிண்டி தேசிய பூங்கா சுற்றிய பகுதியிலும், புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் அருகாமையிலும் வெப்பம் குறைவாக உள்ளது.

உயர் நில வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள்

  • உயர் வெப்பம், நேரடியாக உடல் நலத்தில் கேடு விளைவிக்கிறது. இருதய மற்றும் சுவாச நோய்கள் ஏற்பட வாய்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. வெப்பம் அதிகரித்து வரும் இடங்களை அடையாளம் கண்டு, அதன் படி நடவடிக்கை மேற்கொள்ளலாம்,” என்கிறார் ஐதல்.
  • விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பையும் இது பாதிக்கிறது. அதிக வெப்பநிலை சுற்றுச்சூழல் அமைப்புகளை சீர்குலைக்கும், இதனால் உயிரினங்கள் உயிர்வாழ்வது கடினம். திட்டமிடப்படாத நகர விரிவாக்கம் விவசாயத்தையும் தடுக்கிறது. “விவாசய நிலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது. வளமான மண் கொண்ட நிலங்களைக் காண்பது கடினம்,” என்கிறார் சாய்கமலா.
  • “சென்னை கடலோர நகரமாக இருப்பதால் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது. நிலபரப்பு வெப்பம் அதிகரிப்பு, கடல் மட்டமும் உயர்வதை பல ஆய்வுகள் நமக்கு காட்டுகின்றன. இது கடல் உயிரினங்களை பாதிப்பதோடு, மீன் வளத்துறையையும் பாதிக்கிறது.” என விவரக்கிறார் ஐதல்.
  • மழை பொழிவையும் இது பாதிக்கிறது. வளிமண்டல ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழக கூற்றுப்படி, அதிக வெப்பநிலை அதிக ஆவியாதலையும் மழைப்பொழிவையும் ஏற்படுத்தி, வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் என கூறுகிறது. ஆனால், பரத் இன்னொரு கூற்றையும் முன் வைக்கிறார், கிரீன்ஹவுஸ் வாயுக்கள் மற்றும் பிற மாசுபடுத்திகள் வெப்ப காற்றை வளிமண்டலத்தில் சென்று மேகங்களை உருவாவதை தடுக்கிறது. எனவே, இதன் விளைவாக மழை குறைவாகவும் இருக்கலாம்.

பருவ நிலை மாற்றத்தை தடுக்கும் தீர்வுகள்

பரத் ஐதல் சில தீர்வுகளை பகிர்கிறார்:

  • தெருவோரங்களில் மரங்கள் நடுதல் மற்றும் கட்டிட வாயில்களில் செடிக்களை நடலாம். இது நிலபரப்பு வெப்ப நிலையை குறைக்கும்.
  • பூங்காக்கள் மற்றும் பூர்வீக தாவரங்கள் கொண்டு மினி காடுகளை உருவாக்குதல். கோட்டூர்புரம், சோளிங்கநல்லூர், முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் ஏற்கனவே மியாவகி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • நீர் நிலைகள் கொண்ட நகர்ப்புற அமைப்பு உருவாக்கப்படவேண்டும். குளங்கள், நீரூற்றுகள், காற்று கோபுரங்கள் மற்றும் தெளிப்பான்கள் போன்றஅமைப்புகளை உருவாக்கலாம். இது நகரத்தின் அழகையும் மேம்படுத்துகிறது.
  • மேலும், நீர் நிலைகள் (குளங்காள்) பராமரிக்கப்பட வேண்டும்.
    “சதுப்பு நிலங்களில் பல முறையற்ற கட்டுமானம் உள்ளது. அதனால் இவை வெள்ளத்தின் போது பாதிக்கப்படும்.” என கூறும் சாய்கமலா மழை நீர் சாக்கடையில் கலப்பதை தடுக்க வேண்டும் என்கிறார். சென்னை பெருநகரப் பகுதியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வரைபடமாக்கப்படும் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியுட்டுள்ளது, இது காலத்தின் தேவையும் ஆகும்.
  • பசுமை கூரைகள் மற்றும் கட்டுமானத்திற்கு குளிர்ந்த பொருட்களைப் பயன்படுத்துவது உட்புற வெப்பநிலையை குளிர்விக்கும்.

வளர்ச்சிக் கணிப்புகள்

2025 ஆம் ஆண்டில், சென்னையின் பரப்பளவு 2375.73 sq km ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த் வளர்ச்சி சென்னையை இணைக்கும் வெளிப்புற சாலைகள் கொண்ட பகுதிகளில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை-பெங்களூரு தொழில்துறை நடைபாதை திட்டம் என்ற உள்கட்டமைப்பு திட்டத்தையும் மத்திய அரசு எடுத்துள்ளது, இது தென்கிழக்கு ஆசியாவோடு வர்த்தகம் மற்றும் தொழில்துறை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளர்ச்சி ஒரு புறம் அமையும் அதே வேளையில். அதிகாரிகளும் மக்களும் பருவ நிலை மாற்றத்தை கணக்கில் கொண்டு, அதற்கேற்றபடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நகர்ப்புற வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றாலும், அது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதிக்காததாக இருத்தல் வேண்டும். சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் நகரத்திற்கான மூன்றாவது மாஸ்டர் திட்டம் (2026) வகுக்கும் இந்த தருணத்தில், இத்தகைய பரிசீலனைகளுக்கு முக்கிய முன்னுரிமை அளிக்க வேண்டும்.

[Read the original article in English here.]

மேலும் படிக்கவும்

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Padmaja Jayaraman 83 Articles
Padmaja Jayaraman is a Reporter with the Chennai Chapter of Citizen Matters. While pursuing her MA in Journalism and Mass Communication at Kristu Jayanti College, Bengaluru, she worked as a freelance journalist for publications like The Hindu MetroPlus, Deccan Herald, Citizen Matters and Madras Musings. She also holds a B.Sc in Chemistry from Madras Christian College, Chennai. During her leisure, you can find her making memes and bingeing on documentaries.