பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்: சென்னையை ஒருங்கிணைந்த நகரமாக்கும் முயற்சி

பாலினம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் தொடக்க விழா

chennai gender lab
பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் திறப்பு விழா நகரம் முழுவதும் உள்ள பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. படம்: சென்னை மாநகராட்சி ட்விட்டர்

Translated by Sandhya Raju

முதல் முதலாக பாலின நிகர் மேம்பாடு மற்றும் அதற்கான கொள்கை ஆய்வு மையம் சென்னையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது. மாநகராட்சி, போக்குவரத்து மற்றும் அரசின் பிற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி, பாதுகாப்பான, ஒருங்கிணைந்த நகரமாக சென்னையை மாற்ற இந்த மையம் வழிவகுக்கும்.

சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, மா நகராட்சி ஆணையர், ககந்தீப் சிங் பேடி, காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், உலக வங்கி பிரதிநிதிகள், மாநகராட்சி மற்றும் போக்குவரத்து கழகங்களின் பல்வேறு துறை அதிகாரிகள், உறுப்பினர்கள் பல்வேறு இலாப நோக்கற்ற மற்றும் சிவில் சமூக அமைப்புகள் கலந்து கொண்டனர்.

சென்னை நகர கூட்டுத் திட்டம் மற்றும் நிர்பயா திட்டத்தின் ஒரு பகுதியாக பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. ரிப்பன் கட்டிடத்தில் இந்த ஆய்வு மையம் செயல்படும்.

பாலின கொள்கை மையத்தின் நோக்கம்

பாலின நிகர் மேம்பாடு மற்றும் திட்டமிடல் குறித்த பல்வேறு பகுதிகளில் இந்த ஆய்வு மையம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என திறப்பு நாளன்று கோடிட்டுக் காட்டப்பட்டன. பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது, பொது போக்குவரத்து, பொது இடங்களில் அனுமதி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். பாலின தொல்லை, பாலினம் சார்ந்த வன்முறை தடுப்பு பொது இடங்களில் பாதுகாப்பு என்பதற்கான வரைகூறுகள் ஆகியவற்றை மேம்படுத்தவது நோக்கமாகும்.

சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, போக்குவரத்து துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் அடங்கிய குழு இந்த மையத்தின் நடவடிக்கைகளுக்கு உதவும். இது தவிர, கல்வி, போக்குவரத்து, சமூக பணி, மன வளம், சட்டம் ஆகிய துறைகளின் வல்லுனர்கள் அடங்கிய தன்னார்வ ஆலோசனை மன்றம் ஒன்றையும் இந்த மையம் உருவாக்கும்.

gender lab event photo
முதல் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தை சென்னை மாநகராட்சியில் திறக்கப்பட்டது.
படம்: சென்னை மாநகராட்சி/ட்விட்டர்

வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் பாலின வேறுபாடுகளை களைய தலைமை குழுவிற்கு இந்த ஆய்வு மையம் துணை நிற்கும். பல்வேறு திட்டங்களைத் திட்டமிடவும் கண்காணிக்கவும் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், திட்டங்களை வெளியிடும் போது செயல்படுத்தும் பல்வேறு நிறுவனங்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதற்கும் இந்த மையம் உதவும்.

தற்போது மூன்று ஆண்டுகளுக்கு இந்த மையம் செயல்படும். முதல் ஆண்டில், சென்னை மாநகராட்சியின் மண்டல்ங்கள் 4 மற்றும் 5-ல் பொது இடங்களுக்கான திட்டம் செயல்படுத்தப்படும். சுரங்கப்பாதைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், பேருந்து நிலையங்கள், பாலங்கள் மற்றும் பொது கழிப்பறைகள் போன்ற குடிமை உள்கட்டமைப்புகளில் பெண்களுக்கான அணுகல் மற்றும் பாதுகாப்பின் சிக்கல்களை ஆராயப்பட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். திறன் மேம்பாடு மற்றும் தேவைகள் குறித்து பல்வேறு பங்குதாரர்களிடையே விழிப்புணர்வை பரப்புவதற்கும் நேரத்தை மையம் செலவிடும். இதன் தொடர்சியாக, மண்டலங்கள் 4 மற்றும் 5-ல் செயல்படுத்தப்பட்டவை பிற துறைகளுடன் பகிரப்படும்.


Also read: Will GCC’s Gender Lab project make Chennai safer for women and trans persons?


கொள்கையை தெரிவிக்கும் ஆய்வுகள்

கொள்கையை பரிந்துரைக்க பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும். திறப்பு விழாவின் ஒரு பகுதியாக இது குறித்து பகிரப்பட்டது.

தண்டையார்பேட்டையில் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் பாதுகாப்பு தணிக்கையின் கண்டுபிடிப்புகளை, பொது இடங்களை பாதுகாப்பானதாகவும் மேலும் ஏற்றதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட சேஃப்டிபின் (Safetipin) என்ற சமூக அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கல்பனா விஸ்வநாத் பகிர்ந்தார். 19.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மொத்தம் 1108 புள்ளிகளை இந்த தணிக்கை உள்ளடக்கியதாக அவர் தெரிவித்தார்.

தெரு விளக்குகள் எண்ணிக்கை, நடைபாதை, கண்காணிப்பு, 5-10 நிமிட நடையில் பொது போக்குவரத்து போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த ஆய்வில் மேற்கொள்ளப்பட்டன. தணிக்கை செய்யப்பட்ட இடங்களில் 9% பகுதி மோசமான வெளிச்சம் கொண்டதாகவும், 65% இடங்களில் நடைபாதை இல்லாதது அல்லது மோசமான நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. அனைத்து இடங்களிலும் பொது போக்குவரத்து வசதி இல்லை என்றும், 15% இடங்களில், 5-10 நிமடத்தில் நடை தொலைவில் பொது போக்குவரத்து இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட 35% இடங்களில் நடமாட்டமோ , கடைகளோ இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்லது.

மேலே கூறப்பட்டுள்ள அம்சங்களுடன் சேர்த்து பல்வேறு வகையிலும், பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களை பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் பரிந்துரைக்கும்.

பொது போக்குவரத்து குறித்து தனது விளக்கக்காட்சியில் தி அர்பன் கேடலிஸ்ட்ஸின் (The Urban Catalysts) நிறுவனர் சோனல் ஷாவின் எடுத்துரைத்தார். பொது போக்குவரத்து உபயோகிக்கும் பெண்கள், நடப்பவர்கள், எந்த நேரத்தில் போக்குவரத்தை உபயோகப்படுத்தினர் போன்ற விளக்கங்களை இவர் அளித்தார். ஒருங்கிணைந்த போக்க்வரத்து திட்டம் எவற்றை உள்ளடக்க வேண்டும் எனவும் அவரின் விளக்கத்தில் கூறப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் அது குறித்த அறிதல் குறித்தும் உள்ள பார்வை பணியாளர்களிடம் மாற வேண்டும் என பாலின நிகர் மேம்பாடு மையத்தின் இணை நிறுவனர் அக்ஷத் சிங்கல் வலியுறுத்தினார். தனி நபர் மற்றும் பணியாளர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், பொது இடங்களை பாதுகாப்பனதும், ஒருங்கிணைந்ததாதகவும் மாற்ற முடியும்.


Read more: Tips for women in Chennai to fight the stalking menace


திட்டமிடலில் பெண்கள் பங்கேற்பு முக்கியம்

பல்வேறு பங்குதாரர்களின் கூற்றுகளை முன்னெடுத்து செல்வதற்கான பாதையை தொடக்க விழாவின் இறுதி அமர்வாக எடுத்துக்கொள்ளப்பட்டது. பெண்களின் முக்கிய மூன்று விஷயங்கள் இந்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டது – பல்வேறு வழிதடங்களுக்கு இலகுவாக செல்லுதல், பொது இடங்களுக்கான அணுகல் மற்றும் பார்வையாளர் தலையீடு. இந்த மூன்று முக்கிய விஷயங்களின் சவால்கள், தீர்வுகள் குறித்து பங்குதாரர்கள் அலசினர்.

இந்த அலசலின் முடிவில் அனைத்து தரப்பிலிருந்தும் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் பரிமாறப்பட்டன.

இலகுவாக செல்லுதலுக்கு, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தல் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் மீள்குடியேற்ற காலனிகளில் வசிப்பவர்களை கருத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. பேருந்து இயக்கும் இடைவெளி நேரத்தை குறைத்தல், பொது மக்களுக்கு இது குறித்து தகவல் அளித்தல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் பல்வேறு நிகழ்வுகளை ஆதரிப்பதன் மூலம் பெண்களுக்கு மேலும் பாதுகாப்பான சூழலை உறுதி படுத்த முடியும் என பங்குதாரர்கள் குழு பரிந்துரைத்தது.

பார்வையாளர் தலையீடு குறித்து பேசுகையில், நெருக்கடியின் போது தலையீட்டை ஊக்குவிப்பதற்கான புதுமையான வழிகளைக் கண்டறிதல் மற்றும் தலையீட்டிற்கான குறிப்பிட்ட கட்டமைப்பை அமைத்தல் மற்றும் விழிப்புணர்வை பரப்புதல் ஆகியவை ஆலோசிக்கப்பட்டன. சாலை விபத்துகளின் போது கோல்டன் ஹவர் (golden hour) காலத்தில் தலையிட ஊக்குவிக்கப்படும் பார்வையாளர்களைப் போன்ற ஒரு கட்டமைப்பை குழு பரிந்துரைத்தது.

சென்னையில் உள்ள பெண்களை ஈடுபடுத்துவதோடு, அவர்காளின் பரிந்துரைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகத்திற்கு உங்கள் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை  chennaigenderlab@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

[Read the original article in English here.]

Also read

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Aruna Natarajan 183 Articles
Aruna is an Associate Editor at Citizen Matters. She has a BA in Economics and a PG Diploma in Journalism. She has also worked in a think-tank on waste management policy and with a non-profit in sport for development. She writes on civic issues, governance, waste, commute and urban policy. She tweets at @aruna_n29.