சென்னையில் இலவச சட்ட உதவி பெறுவது எப்படி?

சென்னையில் சட்ட உதவி

chennai legal aid cell
அடித்தட்டு மக்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. படம்: பத்மஜா ஜெயராமன்

Translated by Sandhya Raju

விளிம்பு நிலை மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்கள், சிக்கலான சட்ட அமைப்பில் சிக்கிக்கொள்ளும்  நிலையை வெகுவாக வெளிக்கொணர்ந்தது ஜெய்பீம் திரைப்படம். செங்கனி என்ற கதாபாத்திரத்திற்கு ஆதரவாக சந்துரு என்ற வழக்கறிஞர் பணியாற்றினார்.   

ஆனால், நிஜ வாழ்க்கையில்  இவர்களின் நிலை என்ன?  

அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் அல்லது மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் உதவி பெற ஒவ்வொரு நபருக்கும் அரசியலைப்புப் படி உரிமை உள்ளது. 

“இலவச சட்ட உதவி என்பது அரசு அளிக்கும் தொண்டு அல்ல. இது அனைத்து மக்களுக்கான  அடிப்படை உரிமை,” என்கிறார் சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞர் எஸ் ஜோதிலக்ஷ்மி, 2019-20 ல் இலவச சட்ட உதவி வழக்கறிஞராக இவர் நியமிக்கப்பட்டார். 

அரசு வழங்கும் சேவை குறித்து பலரருக்கு விழிப்புணர்வு இல்லை, என இந்தக் கட்டுரைக்காக நாம் சந்தித்த வழக்கறிஞர்கள் கூறினர். 

அதன் நோக்க பயனை அளிக்க முடியாமல், இந்த அமைப்பில் பல தடைகளும் உள்ளன. 

இலவச சட்ட உதவி கட்டமைப்பு

சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்காக, 1987 சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டம் கீழ்  தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA)  அமைக்கப்பட்டது. பத்து வருடங்கள் பின், தமிழ்நாடு மாநில சட்டப் சேவைகள் ஆணைய விதிகள், 1997-ம் ஆண்டு இயற்றப்பட்டது, இதில் தமிழ்நாடு மாநில சட்டப் சேவைகள் ஆணையம் (TNSLA) மற்றும் மாவட்ட சட்டப் சேவைகள் ஆணையம் (DLSA) ஆகியவை தாலுகா சட்டப் சேவைகள் குழுவுடன் நிறுவப்பட்டன. உயர் நீதிமன்ற சட்டப் சேவைகள் குழுவையும், மாநில ஆணையம் அமைத்தது. 

தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) படி, நீதி மன்ற கட்டணம், சட்ட சிக்கல்களுக்கான இலவசப் பிரதிநிதித்துவம், கட்டணமின்றி சட்ட நடவடிக்கைகள் தொடர்பான உத்தவரவுகள் மற்றும் ஆவண நகல்களைப் பெறுதல், உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய விருப்பம் தெரிவித்தல், அச்சிடுதல் மற்றும் மொழிபெயர்த்தல் ஆகியவை ஒவ்வொரு மட்டத்திலும் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்படும் சட்ட சேவைகள் ஆகும். இது தவிர, முகாம்கள் மூலம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆலோசனைகள் வழங்குதல், தனி நபர்களுக்கு சட்ட உரிமைகளை கற்பிப்பதன் மூலம் அவர்களை மேம்படுத்துதல் ஆகியவற்றையும் மாநில மற்றும் மாவட்ட அமைப்புகள் மேற்கொள்ளவேண்டும். 

தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) படி, கீழ் கண்டவர்கள் இலவச சட்ட உதவியை பெறலாம். 

  • பெண்கள்
  • மூன்றாம் பாலினர்
  • குழந்தைகள்
  • மூத்த குடிமக்கள்
  • பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர்
  • தொழிலளர்கள்
  • பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் (தொழில்முறை பாதிப்புகள் உட்பட)
  • ஊனமுற்றவர்கள்
  • கடத்தப்பட்டவர்கள்
  • ஆண்டு வருமானம் குறைவாக உள்ளவர்கள் – இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். 

“மேலே குறிப்பிட்டவர்களோடு கூடுதலாக, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு, இலவச சட்ட ஆலோசனை தமிழகத்தில் வழங்கப்படுகிறது. வருமான அடிப்படையின்றி, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும், பெண்களும், NALSA மூலம் இலவச சட்ட ஆலோசனை பெறலாம்” என கூறுகிறார் TNSLSA-ன் துணை செயலாளர். 

ஆர்வமுள்ள வழக்கறிஞர்கள் சட்ட உதவி ஆணையத்தில எவ்வாறு இணையலாம்?

சட்ட உதவி அமைப்பில் சேர ஆர்வமுள்ள வழக்கறிஞர்கள் விண்ணப்பங்களை அனுப்பிய பின் நேர்காணல் போன்ற பல கட்ட தேர்வு முறையை எதிர்கொள்ள வேண்டும். TNSLSA வின் ஒப்புதலுக்கு பின், மாவட்ட அல்லது தாலுகா சட்ட உதவி சேவைகளின் கீழ் வழக்கறிஞர்கள் இணைக்கப்படுவார்கள், எனDLSA-ன் சென்னை செயலாளர் கூறினார். இவர்கள் அளிக்கும் சேவைக்காக கௌரவ கட்டணம் வழங்கப்படுகிறது.

சட்ட உதவியில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் ‘ஏ’ மற்றும் ‘பி’ குழு என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள வழக்கறிஞர்கள் ‘ஏ’ குழுவில் இருப்பர். பத்து ஆண்டுகளுக்கு கீழ் அனுபவம் உள்ள வழக்கறிஞர்கள் ‘பி’ குழுவில் இருப்பர்” என பகிர்ந்தார் ஜோதிலட்சுமி.

அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப, சட்ட உதவி வழக்குகள் அவர்களுக்கு வழங்கப்படும். குழுவில் உள்ள உறுப்பினர்கள், தங்கள் புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், சந்தேகங்கங்களை தீர்த்துக் கொள்ளவும், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் குழு சந்திப்பு நடைபெற்று வருவதாக DLSA செயலாளர் தெரிவித்தார். 

“ஒரு ஆண்டு பதவிக்காலத்தில் சுமார் 5-6 வழக்குகள்” தனக்கு கிடைத்ததாக ஜோதி லக்ஷ்மி தெரிவித்தார்.

வழக்கறிஞர்களின் பதவிக்காலம் தற்போது 3 ஆண்டுகள் என  TNSLSA மற்றும்  DLSA உறுதி செய்தன.

பொது மக்கள் சட்ட உதவி பெறுவது எப்படி?

இலவச சட்ட உதவி பெற விரும்புவோர் சென்னையில் உள்ள TNSLSA அல்லது DLSA அலுவலகத்தை அணுகலாம். “எங்களை தொலைபேசி அல்லது தபால் மூலமோ அணுகலாம். எந்த மாவட்டத்திலிருந்து உதவி கோரப்பட்டுள்ளது என்பதை பரீசிலித்து அந்த சட்ட உதவி மையத்திற்கு அனுப்பி வைப்போம்” என TNSLSA-ன் இணை செயலாளர் தெரிவித்தார்.

“எழுத படிக்கத் தெரியாதவர்களுக்கு படிவம் மற்றும் பிற வேலைகளில் தன்னார்வலர்கள் உதவி புரிவர்,” என்றார் ஜோதிலக்ஷ்மி.

சென்னை உயர் நீதி மன்றத்தில் TNSLSA-ன் தலைமையகம் அமைந்துள்ளது. அதே வளாகத்தில், சென்னை மாவட்ட DLSA உள்ளது. 


Read more: Chennai’s garment workers forever exploited, as watchdog looks the other way


சட்ட உதவி பெற 

உதவி எண்: 044-25342441 (அனைத்து வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை)

கட்டணமற்ற தொடர்பு எண்: 1800 4252 441 (அனைத்து வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை)

கைபேசி எண்: 9445033363

மின்னஞ்சல்: tnslsa@gmail.com

வழக்கு எந்த கட்டத்தில் இருந்தாலும், இலவச சட்ட உதவி பெறலாம், என ஜோதிலக்ஷ்மி உறுதிபடுத்தினார். 

“நீதிமன்றம் செல்லாமல் ஆலோசனை மற்றும் மத்தியஸ்தம் மூலம் தகராறுகளை தீர்க்க முனைவோம்,” என DLSA செயலாளர் குறிப்பிட்டார். மாவட்ட மற்றும் மாநில சட்ட சேவையான லோக் அதாலத் பணியை இங்கு குறிப்பிட்டார். 

சென்னையில் சுமார் 20 இலவச சட்ட உதவி மையத்தை TNSLSA மற்றும் DLSA நிறுவி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உதவி பெறும் வகையில் துணை சிறைகளும் இதில் அடங்கும். ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மாற்று திறனாளி பராமரிப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்த உதவி மையங்கள் உள்ளன. குறைகளை தீர்க்கவும், ஆலோசனை வழங்கவும், வாரம் இரண்டு முறை, மைய வழக்கறிஞர்கள் இங்கு மக்களை பார்க்க வருவதாக சென்னை DLSA செயலாளர் தெரிவித்தார். 

NALSA வலைதளம் மூலமாகவும் சட்ட உதவிக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். 

legal aid application
வலைதள விண்ணப்ப படிவம்

சென்னை மையம்

2021-22 NALSA அறிக்கை படி, தமிழக உயர் நீதி மற்றும் மாவட்ட சட்ட சேவை கீழ் 4196 வழக்கறிஞர்கள் உள்ளனர். 

பெரும்பாலும் சிவில் வழக்குகளுக்காகவே மக்கள் தங்களை அணுகுவதாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர்கள் கூறினர். “சொத்து தகராறு, குடும்ப மற்றும் திருமண சர்ச்சைகள் குறித்து சட்ட உதவி கோரி வருகின்றனர். மகிழ்ச்சியற்ற திருமண பந்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ள விவாகரத்து கோரியும் பெண்கள் வருகிறார்கள்.” என மூத்த வழக்கறிஞர் தீனதயாளன் கூறினார். 

பிப்ரவரி 2022-ன் TNSLSA அறிக்கை படி, மாநிலத்தில் 21,678 வழக்குகள் சட்ட உதவி மையங்களில் நிலுவையில் உள்ளன. 

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவருக்கு ₹6 லட்சம் இழப்பீடு பெற்று கொடுத்தது உள்பட பல வழக்குகளில் தீர்வு கண்டுள்ளதை சென்னை DLSA நம்மிடம் பகிர்ந்தனர். சமீபத்தில், தன் குடும்பத்தால் கைவிடப்பட்ட முதியவருக்கு உதவி செய்து மீண்டும் அவர் குடும்பத்துடன் இணைய உதவி புரிந்துள்ளனர் சட்ட உதவி மைய அதிகாரிகள். 

தன் குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் சட்ட உதவி மையத்தை நாடினார். சட்ட உதவி வழக்கறிஞர் இவரின் வழக்கை எடுத்து குற்றவாளி அல்ல எனவும் தீர்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளது இந்த மையத்தின் சேவையை பறைசாற்றுவதாக உள்ளது.

சட்ட உதவியை அணுகவதில் உள்ள சவால்கள்

“சட்ட உதவி சேவை முழு வீச்சுடன் செயல்படாததற்கு பல காரணங்கள் உள்ளது. மக்களிடையே இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது இதில் முக்கியமானது,” என்கிறார் தமிழ்நாடு Dr.அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்திலிருந்து சமீபத்தில் பட்டம் பெற்ற அபர்னா ராஜு. 

மாவட்ட மற்றும் மாநில சட்ட சேவை அதிகார வரம்பில் உள்ள பல சட்ட உதவி மையங்கள் பல்வேறு காரணங்களால் தற்போது செயலற்று உள்ளன. 

பாலவாக்கத்தில் உள்ள விஷ்ராந்தி இல்லத்தில் அமைக்கப்பட்ட ஒரு சட்ட உதவி மைய செயல்பாடு  பற்றி கேட்ட போது, அது பற்றி அறிந்திருக்கவில்லை என அங்கு தங்கியுள்ளோர் கூறினர். இங்கு வரும் வழக்கறிஞர் குறித்து கூட தெரியாது என்றனர்.

மனநலம் காக்கும் பணியை ஆற்றி வரும் பான்யன் அமைப்பில் உள்ள சட்ட உதவி மையம், பெருந்தொற்று காலம் முதல் செயல்படவில்லை. கோவிட்-19 பெருந்தொற்று காலம் முன், வாரம் இரு முறை வழக்கறிஞர்கள் வந்து விழிப்புணர்வு மேற்கொள்வர் என பான்யன் அமைப்பில் பணிபுரிபவர்கள் தெரிவித்தனர். 

ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் கலைச்செல்வி கருணாலாயா சமூக பாதுகாப்பு மையத்தில் (KKSS), மூன்று ஆண்டுகள் முன்னர் வரை வழக்கறிஞர்கள் வந்து கொண்டிருந்தனர். 

“சட்ட உதவி மையம் பின்னர் வடபழனி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக” அம்பத்தூரில் KKSS மையத்தை நடத்தும் கே.ரஜினி தெரிவித்தார். “அம்பத்தூரில் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் இப்போது வடபழனி செல்ல வேண்டும்.மேலும், சட்ட உதவி பெற காவல் நிலையத்திற்கு செல்ல மக்கள் தயக்கப்படலாம்.”

மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது குறித்து நம்மிடம் ஒரு உதாரணத்தை பகிர்ந்தார் ஜோதிலக்ஷ்மி. “மாதம் ₹15000 சம்பாதிக்கும் அழகு நிலையம் நடத்துபவரை சந்தித்தேன். திருமண வாழ்வில் வன்முறை காரணமாக, சட்ட உதவி பெற பணம் சேமிக்க தொடங்கினார். நான் எடுத்துக்கூறும் வரை,  இலவச சட்ட உதவி குறித்து அவர் அறிந்திருக்கவில்லை” என்றார். 

“விழிப்புணர்வு தாண்டி, நம்பகத்தன்மையும் ஒரு முக்கிய காரணமாகும்.” என்றார், தில்லியிலுள்ள தேசிய சட்ட பல்கலைகழக பேராசிரியர் அனூப் சுரேந்திரனாத்.

“மாற்று திறனாளி ஒருவர் சட்ட உதவி மையத்தை நாடினார். ஆனால், அவருக்கு ஒதுக்கப்பட்ட வழக்கறிஞர் முறையாக வழக்கில் உதவாததால், அவர் என்னை நாடினார். கட்டணமின்றி தற்போது அவருக்கு உதவி புரிகிறேன்” என்றார் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கல்பனா. சட்ட உதவி மையத்தில் இணைய விருப்பமில்லாததால், கட்டணமின்றி சில வழக்குகளை கையாள்கிறேன் என்றார் அவர்.

DLSA அல்லது TNSLSA-ல் இணைந்து பணியாற்ற போதிய உந்துதல் இல்லை. “சமூக உந்துதல் உள்ள சிலர் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர். சிலர் அனுபவம் மற்றும் நம்பக்கத்தன்மை பெற மையத்தில் இணைகின்றனர்,” என்கிறார் கல்பனா. 

“மூத்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க இது உதவும்” என்றார் அபர்னா. 

குறைவான ஊதியம் மற்றும் அதை பெறுவதில் உள்ள தாமதம் மேலும் பல வழக்கறிஞர் இதில் இணைய தடையாக உள்ளது. 

“இந்த வழக்குகளை கண்காணிக்கவோ வழிகாட்டவோ யாரும் இல்லை” என்றனர் கல்பனா மற்றும் ஜோதிலஷ்மி.

கண்காணிப்பு மற்றும் வழிகாட்டி குழுவை DLSA அமைத்திருந்தாலும், இது வரை தன்னிடம் யாரும் வழக்கு குறித்து கேட்டதில்லை என ஜோதிலக்ஷ்மி கூறினார். இருப்பினும், தன் வழக்கு குறித்த ஆவணங்களை சமர்பித்து வழக்கு இறுதியில், கௌரவ ஊதியத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.


Read more: Hired under NULM, fired without notice: Conservancy workers in Chennai wait for justice


சட்ட உதவிக்கான அணுகலை மேம்படுத்துதல்

சட்ட உதவி மையங்களின் செயல்பாடு குறித்த வெளிப்படைத் தன்மை கூட்ட வேண்டும். விரிவான தகவலின்றி, மேம்படுத்தலுக்கான எந்த முயற்சியும் பலனளிக்காது.  

“சமூகத்திற்கு சேவையாற்ற, சட்டக் கல்லூரி மாணவர்களை சட்ட உதவி மையத்தில் இணைய உற்சாகப்படுத்தவேண்டும்.” என்கிறார் அபர்னா. முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, சட்ட உதவி மையத்தின் மூலம் பொது மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

சென்னையில் சட்ட உதவி மையத்தை மேலும் மேம்படுத்த, மக்களுக்கான நிறைய விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என்கிறார் ஜோதிலக்ஷ்மி. இதன் மூலம் சட்ட உதவியை நாடியுள்ள மக்களுக்கு உதவ முடியும்.

“ஒரு அமைப்பு திறமையாகப் பயன்படுத்தப்படும் போதே, அது தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியும்” என்கிறார் ஜோதிலக்ஷ்மி.

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Padmaja Jayaraman 86 Articles
Padmaja Jayaraman was a Reporter with the Chennai Chapter of Citizen Matters. While pursuing her MA in Journalism and Mass Communication at Kristu Jayanti College, Bengaluru, she worked as a freelance journalist for publications like The Hindu MetroPlus, Deccan Herald, Citizen Matters and Madras Musings. She also holds a B.Sc in Chemistry from Madras Christian College, Chennai. During her leisure, you can find her making memes and bingeing on documentaries.

1 Comment

  1. சட்ட ஆலோசனை எனக்கு பயனுள்ளதாக இருந்தது. படித்தேன். இந்த இடத்திற்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை. யாரிடமும் எதை சொல்ல பயமாக இருக்கிறது

Comments are closed.