நடுக்கடலில் அவசர உதவியின்றி தவிக்கும் மீனவர்கள்

மீனவ சமூகத்தினருக்கான சேவைகள்

fisherfolk by the sea in Chennai
ஒவ்வொரு முறை கடலுக்குள் செல்லும் போது ஆபத்து என்றாலும், அவசர கால உதவி சேவைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. படம்: ஷோபனா ராதாகிருஷ்னன்

Translated by Sandhya Raju

பிற மீனவர்களோடு, ஜனவரி 9 அன்று, சங்கரும் கடலுக்கு சென்றார். கடலில் போடப்பட்ட வலையை எடுக்கையில், கால் தவறி தண்ணீருக்குள் அவர் விழுந்தார். அவரை உடனடியாக மற்ற மீனவர்கள் மீட்டனர். ஆனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. கடலில் போட்ட வலையை எடுக்காமல், அவர்களால் படகை கரைக்கு திருப்ப முடியாது என்பதால், உடனடி சிகிச்சை அளிக்க வேண்டிய தருணத்தை கடந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்து அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது. மேற்சிகிச்சைக்காக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கர், ஐந்து நாட்கள் பின் உயிரிழந்தார். 

கடலுக்குள் தினந்தோறும் செல்லும் மீனவர்கள் சந்திக்கும் சாதாரண அவசர நிலை இது,” என்கிறார், தென்னிந்திய மீனவர்கள் நலச்சங்க தலைவர் கே. பாரதி.  சென்னையில் பெரும்பாலன மீனவர்கள் கண்ணாடியிழை மீன்பிடி படகுகளை பயன்படுத்துகின்றனர். இவர்கள் 12 கடல் மைல் (22 கி.மீ) சுற்றளவுக்குள் பயணிக்கின்றனர். 

“சூழ்நிலையை பொருத்து கரையை அடைய சுமார் 3 முதல் 5 மணி நேரம் ஆகும். பயண தூரத்தை விட, கடலில் வலையை வீச ஒன்றரை மணி நேரம் மேல் பிடிக்கும், திரும்ப வலையை இழுக்க இன்னும் பல மணி நேரம் ஆகும். இந்த சமயத்தில், விபத்து நேர்ந்தால், வலையை திரும்ப எடுக்காமல் படகை நகர்த்த முடியாது,” என விளக்கினார் பாரதி.

கடலில் சந்திக்கும் பல சவால்களில் இதுவும் ஒன்று. இது போன்ற சூழலில் சிக்கும் மீனவர்களுக்கு அரசு எந்த வித சேவையை இது வரை வழங்கவில்லை.

மீனவர்கள் சந்திக்கும் அவசர நிலைகள்

 15 வயது முதல் மீன்பிடிப்பதில் ஈடுபட்டு வரும் .59 வயது மீனவர் பாலயம், சில ஆண்டுகள் முன், தன் கட்டுமரத்தில் தனது இரண்டு நண்பர்களுடன் கடலுக்கு சென்றார். நொச்சிக்குப்பம் அருகே செல்லும் போது, எதிர்பாராமல் ஒருவர் கடலில்  விழ, கட்டுமரமும் கவிழ்ந்தது. 

“நாங்கள் மூவரும் கடலில் விழுந்து விட்டோம். இது போன்ற சூழலை இதற்கு முன் சந்தித்துள்ளதால், கம்பத்தில் ஒரு துணியை தொங்கவிட்டு, ஆபத்தில் உள்ளதை கரையில் உள்ளவர்களுக்கு உணர்த்தினோம். இதைப் பார்த்து, எங்களை மீட்டனர்,” எனக் கூறும் பாலயம், இது போன்ற சமத்தில் மீனவர்கள் தான் எங்களின் உதவிக்கு வருகின்றனர். 

“அனுபவமுள்ள ஒருத்தர் தனி ஒருவராக கட்டுமரத்தை திருப்பு விட முடியும், ஆனால் கண்ண்டாய்யிழை படகை ஐந்து பேர் ஆனாலும் சிரமப்பட்டு தான் திருப்ப முடியும்.  “கடினமான பொருள் என்பதால், இது கடுமையான காயங்களை ஏற்படுத்தக்கூடும்”  என்கிறார் பாலயம்.

அநேக சமயங்களில் அனுபவமிக்க மீனவர்கள் தனியாகவே கடலுக்குள் செல்கின்றனர். ஒரு சமயம், ஊடைகுப்பத்தை சேர்ந்த பாலு என்ற மீனவர் வழக்கம் போல் கடலுக்குள் சென்றார். “அவரது போதாத காலம், படகு கவிழ்ந்ததால் அவரால் தப்பிக்க முடியவில்லை,” என கூறும் பாலயம், அனுபவம் இருந்தாலும், கால மாற்றம் மற்றும் பிற காரணங்களால் வானிலை கணிக்க முடியாததாகிறது. 

உடல் நலம், இயற்கை சீற்ற தவிர, பிற அவசர நிலைகாளிலும் அவசர உதவி தேவைப்படும். “பல நேரங்களில் மீனவர்கள் விஷ பாம்புகள், ஜெல்லி மீன்கள் ஆகியவற்றை வலையில் பிடிக்க நேரிடும். ஜெல்லி மீன்கள் ஒளி ஊடுருவில் எங்கே உள்ளது என்பதை பார்க்க முடியாது. இதை தொட்டதும், வலி பொறுக்க முடியாது, சில சமயம், மாரடைப்பு கூட ஏற்படும்.” என்கிறார் பாரதி 


Read more: Women of Ennore are living testimony to the many costs of pollution


இவை, கடலுக்குள் 12 கடல் மைல் பயணம் செய்யும் மீனவர்கள் சந்திக்கும் சவால்கள். காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் செல்லும் மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிக்க இயந்திர படகுகளை உபயோகிப்பர். 

“குறைந்தது 10 முதல் 15 நாட்கள் இவர்கள் படகில் இருக்க வேண்டும். அவசிய முதலுதவி பொருட்களை இவர்கள் வைத்திருந்தாலும், மாரடைப்பு போன்ற அவசர நிலையில் உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில்,  இவர்களுக்கு அவசர உதவி கிடைப்பதில்லை.” என்கிறார் பாரதி. 

கடலில் இருக்கும் போது, தகவல் தொடர்புக்கான வயர்லெஸ் நெட்வொர்கை மீனவர்கள் பயன்படுத்துவர். “அவசர காலங்களில், அருகில் உள்ள படகுகளை தொடர்பு கொள்ள முயற்சிப்போம். ஆனால்,  பாதுகாப்பு காரணங்களுக்காக உயர் அதிர்வெண் வயர்லஸ் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகாள் உள்ளதால், மீன்வர் உயிர்களுக்கு ஆபத்தாக முடிகிறது,” என சுட்டிக்காட்டுகிறார் பாரதி. 

2020-ல் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். சென்னை காசிமேடில் இருந்து ஒன்பது மீன்வர்கள் கொண்ட படகு, நடுக்கடலில் தத்தளித்து, 52 நாட்கள் பின், மயன்மார் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. 

“அரசிடம் இவ்வளவு தொழில்நுட்பம் இருந்தும், 52 நாட்கள் மீனவர்கள் எங்கு உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை! தொழில நுட்பத்தை விட அதிக நுண்ணறிவு கொண்ட உள்ளூர் மீனவர்களின் உதவியை அரசு நாடியிருந்தால், தொலைந்த படகை விரைவில் கண்டுபிடித்திருக்கலாம்.” என்கிறார் பாரதி


Read more: Living with sewage: Fishing hamlets in Chennai’s Kottivakkam see no end to drainage woes


மீனவர்கள் அவர்கள் சமுதாயத்தினற்கு மட்டும் தோள் கொடுப்பதில்லாமல், கடலில் சிக்கித்தவிக்கும் பிறருக்கும் உதவுகின்றனர். 

2012 – ம் ஆண்டு தாக்கிய நீலம் புயலில் சிக்கிய “பிரதிபா காவேரி” என்ற எண்ணை கப்பலில் இருந்தவர்களை, உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றினர்” என நினைவு கூறுகிறார் ஊரூர் குப்பம் மீனவ கூட்டுறவு சங்க பொருளாளர் கே சரவணன். புயலில் தத்தளித்த கப்பலில் இருந்து லைப் ஜாக்கட் அணிந்து அதில் பயணம் செய்தவர்கள், கரைக்கு நீந்தி செல்ல கடலில் குதித்தனர். 

“உள்ளூர் மீனவர்கள் மேற்கொண்ட பல மீட்புப்பணிகளுக்கு கடலோர காவல் படை பெயர் எடுத்துக்கொள்கிறது. ஆனால் கடற்படை மற்றும் கடலோர காவல்படையை விட அதிக மீட்பு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டுள்ளனர்.” என்கிறார் சரவணன். 

அவசர நிலையில் சிக்கும் மீனவர்களின் குடும்பங்கள் சந்திக்கும் பாதிப்புகள்

Women in Nochikuppam selling fish on the Loop Road in Chennai
மீனவ சமுதாயத்தில் ஆண்கள் கடலுக்கு செல்ல, பெண்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். படம்: ஷோபனா ராதாகிருஷ்னன்

சில ஆண்டுகளுக்கு முன், அயோதிக்குப்பத்தை சேர்ந்த ரேவதியின்* கணவர் வழக்கம் போல் கடலுக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. அதிகாரிகளும் சரி, மீனவர்களும் இவரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு பெண் குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டார். 

“ஆண் பிள்ளை இருந்தால் மட்டுமே, மீன்பிடி தொழிலில் தாக்குப்பிடிக்க முடியும். என் கணவரை இழந்த பின், என் இரண்டு பெண் பிள்ளைகளுக்காக, அருகிலுள்ள மீன் சந்தையில் வார இறுதியில் மீன்களை சுத்தம் செய்யும் வேலையை செய்கிறேன், வார நாட்களில் பிற வேலைகளை செய்கிறேன்.” என்கிறார் ரேவதி.  

மீனவ கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த மீனவரகள், மீன்பிடி தொழிலின் போது உயிரிழக்க நேரிட்டால், அரசு இழப்பீடு தொகையை பெற முடியும். “இரண்டு லட்சமாக இருந்த இழஃப்பீடு தொகை தற்போதி 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள், இவர்களுக்கான காப்பீடு சந்தாவை பகிர்ந்து கொள்கின்றன,” என்றார் பாரதி.

ஆனால், மே 2022 அன்று RTI மூலம் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறையிடம் இருந்து பாரதி பெற்ற தரவின் படி, காப்பீடு தொகைக்கு விண்ணப்பித்து நூற்றுக்கணக்கானோர் காத்திருப்பதாக அறியப்பட்டுள்ளது.

RTI data on compensation of accident coverage for fishermen in Chennai
சென்னை மீனவர்கள் விபத்து காப்பீடு குறித்து பெற்ற RTI தரவு (ஏப்ரல்  2022) படி நூற்றுக்கணக்கானோர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட உதவி: கே பாரதி. 

அவசர நிலைகளை சமாளிக்க மீனவர்களுக்கு உள்ள உதவிகள்

1998-ம் ஆண்டு, தமிழக அரசுக்கு 5 அதிநவீன ரோந்து படகை மத்திய அரசு அளித்தது. இதில் நீலம் என்று பெயரிடப்பட்டுள்ள படகு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ளது. ஒவ்வொரு படகும் சுமார் ஒரு கோடி மதிப்பு கொண்டது. “இவை சரியாக பயன்படுத்தப்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும். முறையான பராமரிப்பின்றி, இவை துருப்பிடித்து போயுள்ளன.” என்கிறார் பாரதி. 

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு, 2019 படி, கடலோர மண்டல் மேலாண்மை திட்டங்களில் (CZMP)  மீன்பிடி மண்டலங்கள் மற்றும் மீன் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகாள் தெளிவாக குறிக்கப்பட வேண்டும். “மீன்பிடி மண்டலங்கள் தெளிவாக குறிப்பிடபட்டால் தான், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும். மேலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் இது உதவும்,” என்றார் சரவணன். 

இயற்கை பேரிடரின் போது, கடற்படையிம் கடலோர காவல்படையும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டாலும், மீனவர்களுக்கு பெரும்பாலும் இவர்கள் உதவுவதில்லை. 

மத்திய அரசின் அனுமதி வரும் வரை, சென்னையில் கடலோர காவல் படையிடம் உள்ள ஸ்பீட் படகுகள் உபயோகப்படுத்த முடியாது. “இந்த ஸ்பீட் படகுகள் கடல் ஆம்புலன்ஸ் சேவைக்காக பயன்படுத்தலாம், இதற்கு இரு அரசுகளும் ஒருங்கிணைந்த வேலை முறையை மேற்கொள்ள வேண்டும்.” என கூறுகிறார் பாரதி.  

அவசர நிலைக்கு, எவ்வாறு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை உள்ளதோ, அதே போல் கடலிலிஉம் இத்தைகைய சேவை அவசரமாக தேவைப்படுகிறது. கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் இது போன்ற சேவைகள் உள்ளன, கர்நாடகா மாநிலத்தில் செயல்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கடல் ஆம்புலன்ஸ், உதவி எண் போன்றவை அவசர சூழலில் மீனவர்களை பாதுகாக்க உதவுவதோடு, அவர்கள் உயிரழப்பையும் தடுக்க உதவும். 

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Shobana Radhakrishnan 110 Articles
Shobana Radhakrishnan is a Senior Reporter at Citizen Matters. Before moving to Chennai in 2022, she reported for the national daily, The New Indian Express (TNIE), from Madurai. During her stint at TNIE, she did detailed ground reports on the plight of migrant workers and the sorry-state of public libraries in addition to covering the renowned Jallikattu, Tamil Nadu Assembly Elections (2021) and Rural Local Body Polls (2019-2020). Shobana has a Masters degree in Mass Communication and Journalism from the Pondicherry Central University and a Bachelors in English Literature. She keenly follows the impact of development on vulnerable groups.