எலக்ட்ரிக் பைக் வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

மான்யம் மற்றும் மற்ற தகவல்கள்

e-bikes Chennai
குறைந்த வேக அளவில், 18 வயதுக்கு குறைவானவர்களும் எலக்ட்ரிக் பைக் உபயோகிக்கலாம். படம்: பத்மஜா ஜெயராமன்.

Translated by Sandhya Raju

“அதிகரித்து  வரும் பெட்ரோல் விலை, எலக்ட்ரிக் பைக்கை வாங்க தூண்டியது: என்கிறார் சென்னையில் வசிக்கும் வி ஆகாஷ். இவர் ஏதர் 450X எலக்ட்ரிக் பைக் உபயோக்கிறார். 

இதே காரணத்தை பகிரும் எஸ் கௌஷிக், ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா HX பைக்கை உபோயக்கிறார். “புதிதாக முயற்சி செய்ய வேண்டும் என நினைத்தேன்.மேலும் இதற்கான மானியம் இதன் விலையை கட்டுப்படியாக்கியது. கடந்த வருடம் நான் இந்த பைக்கை வாங்கிய போது ₹40,000 முதல் ₹45,000 வரை தள்ளுபடி கிடைத்தது.” என்றார்.

EV வண்டியை வாங்கும் பலர் பெட்ரோல் உயர்வே உந்துதலாக அமைந்ததாக கூறுகின்றனர். “பராமரிப்பு செலவு இல்லை. முறையாக பராமரித்தால் பெட்ரோல் வண்டி போல் அடிக்கடி செர்வீஸ் செய்ய வேண்டியதில்லை, எனக் கூறும் ஆகாஷ், இதில் உள்ல கூகிள் மேப் கூடுதல் பயனளிப்பதாக கூறுகிறார்.

எலக்ட்ரிக் பைக்கிற்கு மாற சேமிப்பு ஒரு பெரும் காரணமாக உள்ளதால், இதன் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்க, மானியங்களை வழங்க வெவ்வேறு அரசு அமைப்புகள் முடிவெடுத்துள்ளன. 

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கான செலவை ஈடுகட்ட பல மத்திய மற்றும் மாநில மானியங்கள் உள்ளன. 

  • FAME II  என்ற திட்டதின் கீழ், மத்திய அரசு 40% மானியம் வழங்குகிறது, 
  • இந்த வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் விலக்கு அளித்ததோடு மட்டுமல்லாமல், சாலை வரியில் 100% விலக்கும் அளித்துள்ளது தமிழக மின்துறை அமைச்சகம்

சென்னை கால நிலை செயல் திட்ட வரைவு, அதிக பேர் எலக்ட்ரிக் வாகனங்கள் உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என கூறியுள்ளது.  எலெட்ரிக் பைக் நிறுத்த சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் வசூலிப்பதில்லை. சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியத்துடன்  இணைந்து, சென்னையில் EV சார்ஜிங் நிலையங்கள் நிறுவுவதோடு, எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டு பிரச்சாரத்தையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. 

இது போல பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், எலக்ட்ரிக் வாகனம் வாங்கும் முன், சில அத்தியாவசியமான அம்சங்களை மக்கள் அறிந்திருக்க வேண்டும். 


Read more: Why don’t we see electric buses on Chennai roads?


கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்கள்

மத்திய மோட்டார் வாகன் விதிகளின் படி, ஓட்டுனர் உரிமம், காப்பீடு, வாகன பதிவு இல்லாதவர்கள், பதிவு செய்யப்படாத வாகனங்களை உபயோகிக்க வேண்டும். இவை ஒரு மணி நேரத்திற்கு  25 கி.மீ என்ற குறைந்த வேக அளவை கொண்ட 250 W மின்சக்தி வெளியீடு கொண்டவையாகும். 

ஹீரோ, ஓக்கினாவா போன்ற நிறுவனங்கள் இந்த வாகனத்தை சந்தைப்படுத்துகின்றன், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களுக்கான எலக்ட்ரிக் வாகனம்  ஏதர் நிறுவனத்திடம் இல்லை. 

பதிவு செய்யப்பட்ட வாகனம் அதிக வேகம் மற்றும் மின் வெளியீட்டு சக்தியை கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு 80 கி.மீ என்ற அதிக வேகம், 3.3 kW முதல் 6.3 kW மின் திறன் கொண்ட வாகனம் ஏதர் நிறுவனம் சந்தைப்படுத்துகிறது. நாம் உரையாடிய அனைவரும் பதிவு செய்யப்பட்ட மின் வாகனத்தை வைத்திருப்பவர்கள். 

பேட்டரி ஆயுள் மற்றும் சார்ஜிங்

எலக்ட்ரிக் வாகங்கள் பெரும்பாலும் லிதியம்-அயன் பேட்டரிகளை கொண்டவை என பயன்பாட்டாளர்களும், டீலர்களும் தெரிவிக்கின்றனர்.

“முன்பு, லெட்-ஆசிட் பேட்டரி கொண்டதாகும். தற்போது, மொபைல் போன்று லிதியம்-அயன் பேட்டரி உள்ளது.” என்கிறார் சஹாரா இவோல்ஸ் – மெட்ராஸ் ஈ வென்சர்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ரனாக். “முழு சார்ஜ் முடிய, எந்த வாகனம் என்பதை பொறுத்து, நான்கு முதல் ஆறு மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும்.” என மேலும் அவர் கூறினார். 

“சென்னையில் சில எலக்ட்ரிக் வாகனங்கள் நீக்கக்கூடிய பேட்டரியுடன் வராது. பேட்டரியை விட பைக் நீண்ட காலம் நீடிக்கும் என்ற பட்சத்தில் நீக்கக்கூடிய பேட்டரி முக்கியம், இல்லையெனில், மொத்தத்தையும் தூக்கி எறிய வேண்டும்,” என்கிறார், பென்லிங் அவுரா வாகனத்தை உபயோகிக்கும் ரோஹித் நாயர்.  

விரைவு சார்ஜிங் பற்றி கூறுகையில் சில மின் வாகனங்கள், விரைவாக சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரிகாளை கொண்டதாக இருக்கும். இவற்றை சார்ஜ் செய்ய குறைவான நேரமே ஆகும். “ஆனால் காலப்போக்கில் பேட்டரியின் தன்மையை இது குறைக்கும்” என்கிறார் ரானக் 

இரண்டு முதல் நான்கு யூனிட் மின்சாரம் பிடிக்கும்,” என்கின்றனர் EV  டீலர்கள். “மொபைல் போன் போன்று, இதன் கூட வரும் சார்ஜரை கொண்டு வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம்,” என்கிறார், ஆயிரம் விளக்கு பகுதியில் ஓக்கினாவா நிறுவனத்தின் டீலராக உள்ள நெக்ஸ்ஜென் எலக்ட்ரிக் பைக் உரிமையாளர் ஜெ சுரேஷ். 

“தானாக கட் செய்து கொள்ளும் அம்சம் கொண்டதாக இருந்தாலும், இரவு முழுவதும் சார்ஜ் செய்வது நல்லதல்ல. மின்னழுத்த ஏற்ற இறக்கம் இருந்தால், பேட்டரியின் ஆயுளை இது பாதிக்கும்,” என் எச்சரிக்கிறார் சுரேஷ். 

உபயோகத்தை பொறுத்து, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சார்ஜ் செய்வதாக ஆகாஷ் மற்றும் கௌஷிக் பகிர்கின்றனர். 


Read more: How to keep the electricity bill of your Chennai home in check


ரேஞ் மற்றும் முறைகள்

எலக்ட்ரிக் வாகனத்தின் மைலேஜ், ரேஞ் முறையில் அளக்கப்படுகிறது. பேட்டரியை ரீசார்ஜ் செய்யும் முன்பு எத்தனை தூரம் வாகனம் பயணித்து உள்ளது என்பதை ரேஞ் என  குறிப்பிடுகின்றனர்.

“100% சார்ஜ் உள்ள வாகனம், 80 கி.மீ வரை செல்லும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், 100 கி.மீ வரை செல்லும்,” என்கிறார் ஆகாஷ்.

“இரண்டு நபர்கள் செல்லும் போது கிடைக்கும் ரேஞ்சை விட, ஒருவர் மட்டும் செல்லும் போது, ரேஞ் அதிகமாக கிடைக்கும். பின்னால் செல்வரின் எடையால், ஆற்றல் நுகர்வு அதிகமாகும் என்பதால், குறைவான தூரம் மட்டுமே செல்லும்.” என விளக்குகிறார் ரோனக். 

பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள், “ஈகோ”, “ரைட்” மற்றும் “ஸ்போர்ட்ஸ்” என பல நிலையில் வருகிறது, தேவைப்படும் போது, வேகத்திற்கு ஏற்ப, நிலையை மாற்றிக் கொள்ளலாம். “ஈகொ” நிலையில், உச்ச வேகம் குறைவாக இருந்தாலும், ரேஞ் அதிகமாக இருக்கும். 

மூன்று நிலைகளையும் கொண்ட வாகனத்தை வைத்திருக்கும் ஆகாஷ் கூறுகையில் “ஈகோ நிலையை விட, ஸ்போர்ட்ஸ் நிலையில், பிக்-அப் அதிகமாக இருக்கும். 120 கி.மீ வரை ரேஞ் இருக்கும், இதே ஈகோ நிலையில் இயக்கும் போது, முழு சார்ஜில் 140 கி.மீ வரை செல்லலாம். 

mode and range
ஒரு முழு சார்ஜில், ஏதர் 450 பிளஸ் எலக்ட்ரிக் வாகனத்தை ஈகோ நிலையில், 85 கி.மீ வரை இயக்கலாம். ஆதாரம்: ஏதர் எனெர்ஜி

விலை மற்றும் மானியம்

“என்னுடைய வாகனம் ஒரு லட்சம் மேல் ஆகும், மானியத்திற்கு பின், ₹75000 செலுத்தினேன்,” என்கிறார் கௌஷிக். “மின் வாகனம் வாங்கும் போது, மானியம் பெறுவதற்கு ஆதார் விவரங்களை அளிக்க வேண்டும். ஒரு ஆதார் எண்ணுக்கு ஒரு முறை மட்டுமே மானியம் பெற முடியும்.”

ஆனால், எல்லா பிராண்ட் வாகனங்களுக்கும் மானியம் கிடையாது.  FAME-II  திட்டம் அல்லாத பிராண்டுகளும் தங்களிடம் உள்ளதாக ரானக் கூறினார். 

“உள்ளூரில் மின் வாகனம் உற்பத்தி உயரும் போது, மானியம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது” எனக் கூறும் ரானக், “மானியம் இல்லாமல், இதன் விலை பெட்ரோல் வாகன விலையை விட அதிகம்” என்கிறார்.

வாரன்டி

பெரும்பாலான மின்வாகன பிராண்ட்கள் பேட்டரிக்கு 3 வருட வாரன்டி அளிக்கிறது, எனக் கூறும் பயனாளர்கள், “சில பிராண்ட்கள் மோட்டர் மற்றும் கன்ட்ரோலருக்கும் 2-3 வருட வாரன்டி அளிக்கின்றன,” என்கிறார் ரோனக்.இதன் பின், உதிரி பாகங்காளுக்கு, ஓட்டுனரே செலவு செய்ய வேண்டும்.  

எலக்ட்ரிக் வாகனம் குறித்த கவலைகள்

தீப்பிடித்தல்

“சமீபத்திய மழையில், என் எலக்ட்ரிக் வாகனத்தை ஓட்டினேன். வழியில், சிறு தீப்பொறி வந்ததை உணர்ந்தேன், புகை வரத்தொடங்கியது. முன்னெச்சரிக்கையாக, வண்டியை தள்ளிக் கொண்டே வீடு வரை சென்றேன்,” என்றார் கௌஷிக். 

இந்த வாகனத்தில் உள்ள சிறிய பேட்டரி அதிக சக்தியை உட்கொண்டுள்ளதால், தீப்பிடிக்க ஒரு காரணம். விபத்தை தடுக்க, மத்திய வாகன அமைச்சகம், உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

பிற பயனாளர்கள், தீப்பிடித்தலை ஒரு சவாலாக கருதவில்லை. “இது அரிதாக நடக்கக் கூடியது. பெட்ரோல் வண்டிகளும் தீப்பிடிக்கின்றன. நாம் எவ்வாறு வண்டியை கையாள்கிறோம் என்பதை பொருத்தது.” என்கின்றனர். 

வண்டி பாதியில் நின்றால் என்ன செய்வது?

பலருக்கு இது பிரதான கவலையாக உள்ளது. பெட்ரோல் வண்டிகளை போல், வழியில் நின்றால், அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்புவது போல் அல்ல. பெட்ரோல் பங்க் 1-2 கி.மீ தொலைவில் இருப்பது போல், மின் வாகனத்திற்கு சார்ஜிங் நிலையங்கள் இருப்பதில்லை. 

ஆனால், BOLT – EV Charging Network என்ற செயலி மூலம் அருகிலுள்ள சார்ஜிங் நிலையயம் எங்குள்ளது என அறிந்து கொள்ளலாம். என் வாடிக்கையாளர்களை இந்த செயலியை உபயோகிக்குமாறு நான் கேட்டுக்கொள்வேன்” என்கிறார் சுரேஷ். 

bolt ev charging
அருகிலுள்ள சார்ஜிங் நிலையத்தை போல்ட் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். படம்: பத்மஜா ஜெயராமன். 

பழுது ஏற்பட்டால், சாலை உதவி பணியாளர்கள் மூலம் சர்வீஸ் சென்டருக்கு வாகனத்தை கொண்டு வருவதாக சுரேஷ் மற்றும் ரோனக் தெரிவிக்கின்றனர். 

“ஆனால் ஆட்டோமொபைல் மெக்கானிக்கள் மின் வாகன் பழுதை பார்க்க முடியாதது பெரிய குறை,” என்கிறார் கௌஷிக்.  

உள்ளூர் உற்பத்தியில்லாத உதிரி பாகங்கள் மற்றும் நீண்ட செர்வீஸ் காத்திருப்பு

“முன்பு, என் வாகனத்தை இரண்டு முறை செர்வீஸ் செய்ய வேண்டும். சர்வீஸ் முடிந்து வர இரண்டு மாதமாகும். உதிரி பாகங்கள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால், அது கிடைக்க தாமதாகும்.” என விவரிக்கிறார் கௌஷிக். 

ரோனக் மற்றும் சுரேஷ் வாகன விற்பனை மட்டுமன்றி சர்வீஸ் வசதியையும் தருகிறார்கள். “சிறிய பிரச்சனைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தந்து விடுகிறோம். பாகங்கள் உற்பத்தியாளர்காளிடம் இருந்து வர வேண்டுமென்றார், 10-15 நாட்கள் ஆகும்,” என்கிறார் சுரேஷ்.

“பேட்டரி உட்பட சில பாகங்கள், சீனாவில் உற்பத்தி ஆகின்றது,” என்கிறார் ஆகாஷ். “ஒவ்வொரு மூன்று வருடமும் பேட்டரியை மாற்ற வேண்டும், இது ₹70,000 வரை ஆகும்.”

“சரியான பராமரிப்பு இலையென்றால் நிச்சயம் பிரச்சனை வரும். உதாரணத்திற்கு, மழைக்காலத்தில் வாகனத்தை, தண்ணீர் தேங்கும் இடத்தில் வைக்கக் கூடாது என என் வாடிக்கையார்காளுக்கு அறிவுறுத்துவேன். மழை நீர் உள்ளே சென்றால், பாகங்கள் துரு பிடிக்கும்,” என்கிறார் சுரேஷ். 

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளூர் தட்ப வெப்ப சோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருந்தால், நம் நகரத்தின் வெப்ப நிலைக்கு, எளிதாக சூடாக வாய்ப்புள்ளது, என இந்த வாகனங்களை பயன்படுத்துவோர் கூறுகின்றனர். 

மின் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டுமானால், உள்ளூர் உற்பத்தி வேண்டும். இதன் விலையை குறைப்பதோடு, உள்ளூர் தட்ப வெப்பத்திற்கு சோதிக்க இது உதவும். காலப்போக்கில், பெட்ரோல் டீசல் வண்டிகளிலிருந்து மின் வாகனத்திற்கு மக்கள் மாற ஊக்குவிக்க முடியும் 

சென்னையில், மின் வாகன பயன்பாடு அதிகரித்து வந்தாலும், இதன் நன்மைகள் மற்றும் சவால்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அசம்பாவிதங்களை தவிர்க்க, பராமரிப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Padmaja Jayaraman 82 Articles
Padmaja Jayaraman is a Reporter with the Chennai Chapter of Citizen Matters. While pursuing her MA in Journalism and Mass Communication at Kristu Jayanti College, Bengaluru, she worked as a freelance journalist for publications like The Hindu MetroPlus, Deccan Herald, Citizen Matters and Madras Musings. She also holds a B.Sc in Chemistry from Madras Christian College, Chennai. During her leisure, you can find her making memes and bingeing on documentaries.