சென்னை நகரை தடையின்றி சுழல வைக்கும் தற்காலிக பணியாளர்கள்

ஒப்பந்த தொழிலாளர்கள் நிலை

Chennai metro water workers protest
குடி நீர் வாரியத்தின் தலைமையகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய காட்சி. படம்: ஷோபனா ராதாகிருஷ்னன்.

Translated by Sandhya Raju

“தமிழக அரசே தமிழக அரசே, சாக வேண்டுமா நாங்கள்? அப்போ தான் பார்ப்பாயா?” சென்னை குடி நீர் & கழிவு நீர் பெரு வாரியம் தலைமை அலுவலகத்தின் முன்பு தொடர்ந்து  10 நாட்கள் 1500 தற்காலிக தொழிலாளர்கள் எழுப்பிய கோஷம் இது. தனியார் ஒப்பந்தகாரர்களுக்கு ஒவுட்சோர்ஸ் முடிவை எதிர்த்தும் இவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் இவர்கள் போராட்டம் நடத்தினர். 

கடந்த சில ஆண்டுகளாக வேகமான வளர்ச்சியை சென்னை அடைந்தாலும், பல முக்கிய துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் அல்லது கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. முக்கியமான அத்தியாவசிய பணிகளான திடக்கழிவு மேலாண்மை, குடி நீர் வினியோகம், சுகாதாரம், மின்வாரியம் என பல துறைகளில் தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிகிறார்கள்.  

சென்னை குடி நீர் வாரிய தற்காலிக பணியார்களின் போராட்டம்

சரியான நேரத்தில் சாலையில் மண் அகற்றப்பட்டு, கழிவு நீர் அடைப்புகள் அகற்றப்பட்டு,குடி நீர் வினியோகம் கிடைக்கிறதா?  நம் வாழ்க்கையை எளிதாக்கும் தொழிலாளர்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

22 வருடங்களுக்கு முன் சென்னை குடி நீர் வாரியத்தில் தற்காலிக பணியாளராக சேர்ந்த கணேஷ்*, அதிகாலை 5 30 மணிக்கு தன்னுடைய நாளை தொடங்குகிறார். ஊரப்பாக்கத்தில் வசிக்கும் இவர் 30 கி.மீ பயணித்து ராயப்பேட்டையில் உள்ள தன் பணியிடத்திற்கு வருகிறார். 

“எங்களை களப்பணியாளர்கள் என அழைக்கின்றனர். அடைப்பு ஏற்பட்ட சாக்கடைகள், கழிவு நீர் மற்றும் குடி நீர் குழாய்களை சரி செய்கிறோம். எங்களில் சிலர் சாலையோரம் உள்ள மண்ணை சுத்தம் செய்வது, ஜெட் ரோடர் வண்டிகள், இயந்திரங்களை இயக்குதல், பம்பிங் நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோம்.” என்கிறார்.  பொது மக்களின் புகாரை பொறுத்து எங்கள் பணி அமைவதால், பணி நேரம் சீரானதாக இருக்காது. “புகார் வரும் போது அதை சரி செய்ய நாங்கள் செல்ல வேண்டும் என்பதால், நிலையான பணி நேரம் எங்களுக்கு இல்லை” என மேலும் அவர் பகிர்ந்தார். 

சில நேரங்களில் இரவு நேரத்தில் பணி புரிய நேரிட்டால், வீடு திரும்ப போக்குவரத்து இருக்காது. பலத்த மழை, வெள்ளம் ஆகிய சமயத்தில், அடைப்புகளை அகற்ற அலுவலகத்திலேயே தங்குவார்கள். 

அரசு பணி என்றாலும், இவர்களுக்கான ஊதியம் மிகவும் குறைவு. 19 வருடம் முன்பு மாத ஊதியம் 2800 க்கு தற்காலிக பணியாளராக சேர்ந்த எஸ் வெங்கடேஷ், 2021-ம் ஆண்டில் ₹6000 ஊதியமாக பெற்றார். குறைந்தப்ட்ச ஊதியம் நிர்யணிக்கப்பட்டதை அடுத்து தற்போது மாதம் ₹11,000 பெறுகிறார். 

தனியார் ஒப்பந்தகாரருக்கு மனித வள ஒப்பந்தம் அளிக்கப்பட்டதும், இவருக்கு ₹9000 மட்டுமே கிடைக்கும். 

“வார விடுமுறை இல்லை. மாதத்தில் நான்கு நாட்கள் விடுமுறை இருந்தாலும், அது கழிக்கப்பட்டு 26 நாட்களுக்கு மட்டுமே சம்பளம் கிடைக்கும். நிரந்தர பணியாளர்காளுக்கு உள்ள மருத்துவ காப்பீடு, அரசு விடுமுறை நாட்கள், சாதாரண விடுப்பு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு அல்லது வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு என எந்த பலனும் இல்லை.  ஒரு நாள் விடுப்பு எடுத்தால் சம்பளம் குறைக்கப்டும், ஆனால் கூடுதலாக வேலை செய்தால் அதற்கான ஊதியம் எங்களுக்கு கிடையாது.” என வெங்கடேஷ் தெரிவித்தார். 

10 வருடங்களாக குடி நீர் வாரியத்தில் பணிபுரியும் ஜானகிராமன் சில மாதங்களுக்கு முன் இயந்திரத்தை இயக்கும் போது விபத்தை சந்தித்தார். குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபரான இவர் படுத்த படுக்கையாக உள்ள நிலையில் இது வரை அவருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. 

தற்காலிக பணியாளர்கள் இனி ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஒப்பந்தக்காரர் கீழ் பணி புரிய வேண்டும் என்றும் அனைத்து குறைகளும் அவர்காளிடமே தெரிவிக்க வேண்டும் எனவும் வாரியம் கடந்த மாதம் அறிவித்தது. இதனையடுத்து, 10 நாட்கள் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர்.

“பணி நிரந்தரம் செய்யப்படும் என உறுதி முன்பு அளிக்கப்பட்து, அரசு எங்களின் பணியை அங்கீகரித்து, பணி பாதுகாப்பை உறுதி செய்யும் என நம்பினோம். இது வரை தனியார் ஒப்பந்தக்காரர் எங்களை சந்திக்கவில்லை, கோரிக்கைகளை முன்வைத்து கேள்வி எழுப்பினால், பணி இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.” என்கிறார் வெங்கடேஷ்.  

போராட்டத்தில் ஈடுபட்ட போது அரசு என்ன செய்தது? தினக்கூலி அடிப்படையில் புதிய பணியாளர்களை கொண்டு எங்கள் வேலைகளை செய்ய, அதிகாரிகள் நியமித்தனர். 


Read more: Hired under NULM, fired without notice: Conservancy workers in Chennai wait for justice


தற்காலிக பணியால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்

குறைவான ஊதியம் தவிர, வேலை இழப்பு இவர்களின் மிகப் பெரிய அச்சமாக உள்ளது. தற்காலிக தூய்மை பணியார்களின் நிலையே இதற்கு சாட்சி. 

2000-ம் ஆண்டு முதல் தூய்மை பணியை ஒப்பந்தகாரர்காளிடம் மா நக்ராட்சி அளித்துள்ளதாக கூறுகிறார் தூய்மை பணியாளரான டி. சுப்ரமணியம். ஆனால் அப்போது 15 மண்டலங்களில் வெறும் 3 (மண்டலம் 9,10, 11) மட்டுமே தனியாரிடம் விடப்பட்டது. தற்போது 11 மண்டலங்களின் திடக்கழிவு மேலாண்மையும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதில், பல தற்காலிக பணியாளர்காள் வேலை இழந்துள்ளனர். 

15 வருடங்களாக சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக ஜெ காமாட்சி (45) பணி புரிகிறார். திடக்கழிவு மேலாண்மை அர்பேசர் சமித்திடம் ஒப்படைக்கப்பட்ட போது, அவரின் வயதை காரணம் காட்டி வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.  திடக்காத்திர ஆண்கள் மட்டுமே வேலையில் தக்கவைக்கப்பட்டனர்.

“வயது காரணமல்ல, பல ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் நாங்கள் கேள்வி கேட்போம். இதுவே புதிய பணியாளர்கள் என்றால், அவர்களை மிரட்டியே வேலை வாங்க முடியும்” என கூறுகிறார்.  

கோவிட் பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரை பயணம் வைத்து பணி புரிந்த பல்லாயிர பணியாளர்களில் காமாட்சியும் ஒருவர். பெருந்தொற்று காலத்தில் பணி புரிந்ததற்கு எந்த வித ஊக்கத்தொகையோ கூடுதல் பணமோ அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. தற்போது, வீட்டு வேலை செய்பவராக பணி புரிகிறார். 

திடக்கழிவு மேலாண்மை தனியார் மயமாக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த அளவில் பணியாளர்கள் உள்ளதாக கூறுகிறார், எஸ் காசி, இவர் புதிய ஒப்பந்தக்காரர் கீழ் தற்போது பணி புரிகிறார். “100 பேர் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 40 பேரே உள்ளனர். கழிவுகளை பிரித்து அளிக்க வேண்டும் என கூறப்பட்டாலும், பல வீடுகளில் இது பின்பற்ற மட்டார்கள். இது எங்கள் வேலையை மேலும் கூட்டுகிறது.” என்கிறார். எந்த மண்டலங்களில் கூடுதல் பணியாளர்கள் உள்ளார்களோ, அங்கு வேலை பளு குறைவாக உள்ளது. 

தற்காலிக பணியாளர்கள் காலை 6 மணிக்கு பணிக்கு வருகிறார்கள். ஆனால், நிரந்தர பணியாளர்கள் போல் எங்களால் மாலை நேரத்திற்கு வீடு திரும்ப முடிவதில்லை. “பெரும்பாலும் கூடுதல் பணி சுமை எங்களுக்கு அளிக்கப்படுகிறது, ஆனால் அதற்கான ஊதியம் இல்லை. மேலும் முன்னர் எங்கள் வீட்டருகிலேயே பணி அளிக்கப்பட்டது, ஆனால் தற்போது வெகு தொலைவில் எங்களை அனுப்புகின்றனர், வீடு அருகே இருந்தாலாவது இரவு வீட்டில் தூங்க முடியும். மதிய உணவுக்கு வீட்டுக்கு செல்லமுடியவில்லை என்பதால், பயண செலவுக்கு மேல் உணவுக்கு ₹50 செலவழிக்க வேண்டும். எப்படி சமாளிக்க முஇட்யும் என கேள்வி எழுப்புகிறார்?” என கேட்கிறார். 

சக்தியற்ற மின்சார ஊழியர்கள் 

இதே நிலையை தான் மின்சார வாரியத்தின் தற்காலிக பணியாளர்களும் சந்திக்கின்றனர். கடந்த மார்ச் மாதம், வயரிங், கேபிள் இணைப்பு துறையில் பணிபுரியும் சிஐடியு சங்கத்தை சார்ந்த தற்காலிக பணியாளர்கள், தங்களது சேவைகளை முறைபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  2018-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியமாக நாளுக்கு ₹380 என்ற கோரிக்கையை அமல்படுத்த ஒத்துக்கொண்ட தமிழக அரசு இது வரை அதை நடைமுறை படுத்தவில்லை. 

தானே, வர்தா, கஜா புயல் போது பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்களுக்கு  நிரந்த பணி அளிக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டாலும், இது அமல்படுத்தப்படவில்லை. அரசானலும் சரி பொது மக்களனாலும் சரி, தேவை வரும் போது மட்டுமே எங்களை நினைக்கின்றனர், ஆனால் எங்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை.” என் கிறார் 15 வருடங்களாக மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஜெ கர்னன். 

பல நேரங்களில் மின்சார தாக்குதல் போன்ற அபாய சூழலில் பணிபுரியும் எங்களுக்கு மற்றும் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லை. “பொது மக்கள் தடங்கலற்ற மின்சாரம் பெற வேண்டும் என்பதற்காக எங்களின் உயிரை பயணம் வைத்து உழைக்கிறோம், எங்களுக்கு ஏதாவது ஆனால் எங்கள் குடும்பத்தை யார் பாதுகாப்பார்கள்?” என கேள்வி எழுப்புகிறார். 

40,000-த்திற்கும் மேலான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒப்பந்த அடிப்படையில் தொடர்ந்து பணியாளர்கள் நிரப்பப்படுகின்றனர், எனக் கூறும் வாரிய பணியாளர்கள், இதற்கு பதிலாக தற்போதுள்ள தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்கலாம் என்கின்றனர். 

மருத்துவ பணியாளர்களின் ஆதங்கம்

பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களின் (MPHW) மாநில பொதுச் செயலாளர் சி சரவணகுமார் கூறுகையில், 2012 ம் ஆண்டு, ஐந்து வகை பணிகளை MPHW-ந் ஒரே பணி கீழ் தமிழக அரசு கொண்டு வர அரசாணை பிறப்பித்தது.  தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், ஆண் செவிலிய உதவியாளர்கள் மற்றும் பெண் செவிலிய உதவியாளர்கள் இதில் அடங்குவர். 

2013-ம் ஆண்டு முதல், தகுதி மற்றும் சீனியாரட்டி அடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் 2700 MPHW மற்றும் அரசு மருத்துவமனைகளில் 450-க்கும் அதிகமான MPHW பணியில் உள்ளனர். ஐந்து வருட சேவைக்கு பின் பணி நிரந்தரம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், 10 வருடங்காள் பின்னர், தினக்கூலி பணியாளர்கள் போன்ற நிலையே இவர்களும் சந்திக்கின்றனர். 

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் முருகன் தன் தின வேலையை விவரிக்கிறார். “காலை 8 மணிக்கு வேலைக்கு வருவேன். முதலில் மருத்துவ உயர் அதிகாரியின் அறையை சுத்தம் செய்வேன், பின்னர் மருத்துவமனையின் தரையை சுத்தம் செய்ததும், மருட்துவ உபகரணங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வேன். வெளி நோயாளி வருகை தொடங்கியதும், டோக்கன் விநியோகிப்பேன். மதிய உணவு பின், மீண்டும் தரையை சுத்தம் செய்தல், மருத்துவக் கழிவுகளை சேகரித்தல், தேவைப்படும் போது செடி பராமரிப்பிலும் ஈடுபடுவேன். மருத்துவ அதிகாரி, செவிலியர், மருந்தாளர் ஆகியோரின் தனி வேலைகள் போக இந்த வேலைகளை செய்வேன். இது மட்டுமின்றி அவ்வப்போது, பிளாக் மருத்துவ அலுவலங்களுக்கும் செல்ல வேண்டும், இதற்கான பெட்ரோல் செலவு அளிக்க மாட்டார்கள்.” என தன் பணி நிலையை விளக்கினார். 

நோயாளியின் காயத்தையும் சுத்தம் செய்வதாக கூறினார். அதற்கான தகுதி இல்லையென்றாலும் மருத்துவர் மற்றும் செவிலியரின் ஆணையின் படி இதை செய்வதாகவும் கூறினார். 

இதற்கான ஊதியம் என்ன? ஒன்பது வருட அனுபவம் பெற்ற முருகன் மாதம் ₹15000 ஈட்டுகிறார். நிரந்தர பணியாளர்காளுக்கு அனைத்து சலுகையும் உள்ள நிலையில், விடுப்பு எடுத்தால் தங்களுக்கு சம்பளம் குறைக்கப்படுவதாகவும் கூறினார். 

“குறைவான சம்பளம் என்பதை விட,  எங்களை நடத்தும் விதம் மிகவும் வேதனை அளிப்பதாக கூறுகிறார். நிரந்தர பணியாளர்களாகட்டும், பொது மக்களாகட்டும், எங்களை மரியாதையாக நடத்துவதில்லை.” என மேலும் கூறுகிறார். 

MPHW சங்கமும் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதரா துறை அதற்கான நிதியை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாகவும், வந்ததும் அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது 

chennai mini clinic workers protest
மினி கிளினிக்குகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். படம்: ஷோபனா ராதாகிருஷ்ணன்

Read more: It’s not just the pay! Why Chennai’s resident doctors are stressed and unhappy


தற்காலிக பணியாளர்களாக மருத்துவர்கள்

முதல் தலைமுறை மருத்துவர்களின் அனுவபத்தின் படி மருத்துவர்களும் இந்த ஒப்பந்த அமைப்பிற்கு விதிவிலக்கல்ல. 

முதல் தலைமுறை மருத்துவரான மகிழனுக்கு*  மருத்துவராவது கனவு. 8 வருடங்களாக பல்வேறு மருத்துவ மனைகளில் வேலை பார்த்துள்ள அவர், டிசம்பர் 2018 மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார்.  

அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்ததால், தனியார் மருத்துவமனையில் கை நிறைய சம்பாதித்த வேலையை விட்டார். 

“அரசு வேலைக்காக வேலையை விட்டேன், அதற்குள் பெருந்தொற்று ஏற்பட்டது. இதனால் ஆட்சேர்ப்பு பணி முடங்கியது. 2020-ம் ஆண்டு, MRB வலைதளத்தில், தேர்வில் வெற்றி பெற்ற தகுதியான மருத்துவர்களை கோவிட் பணிக்காக அழைத்தனர். ஆனால், பின்னர் தேர்வில் வெற்றி பெறவில்லை என்றாலும் கோவிட் பணியில் இணையலாம் என கூறப்பட்டது. நிரந்தர பணிக்கான வாய்ப்பாக அமையும் என நான் கோவிட் பாணியில் இணைந்தேன். ஜூன் 2020 அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டேன்.” என்றார். 

கோவிட் கால அனுபவங்களை விவரிக்கையில் “நான் பணியில் சேர்ந்த நேரத்தில் தொற்று உச்சத்தில் இருந்தது. ஆட்கள் பற்றக்குறை இருந்தது. ஒரு நாளைக்கு 30 வெளி நோயோளிகளுக்கும், 40 உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தேன். கூடுதலாக பரிந்துரை நோயாளிகள் மற்றும் இறப்புகளையும் பார்க்க வேண்டும்.  தண்ணீர், சாப்பாடு இன்றி வேலை பார்த்தோம்.இதற்கிடையில், எனக்கும் என்னால் என் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டனர். என்னுடன் வேலை பார்த்த பலர் உயிரழந்தனர். 

ஆறு மாதங்காள் பின்னர், இவர்களின் ஒப்பந்தம் முடிந்து விட்டதாக அறிவித்து, எந்த முன் அறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். புதிய அரசு பதவியேற்றதும், ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். மீண்டும் கோவிட் தொற்று அதிகரிக்க தொடங்கியது. 

“இந்த முறையும் ஆட்கள் பற்றாக்குறை இருந்தது. அதிகாலை 2 மணியானாலும் சரி மாலை 4 மணியானாலும் சரி கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.” என மகிழன் மேலும் கூறினார்.

மகிழன் மற்றும் 3500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மார்ச் 2022, மீண்டும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதமாக, வேலையின்றி உள்ளார். 

“மருத்துவர்கள் பெரிதாக சம்பாதிக்கிறார்கள் என்றும் மருத்துவரானதும் வாழ்க்கைமுறை மாறும் எனவும் பலர் நினைக்கிறார்கள். என்னை போன்ற முதல் தலைமுறை மருத்துவர்களுக்கு இது பொருந்தாது. குடும்பம், குழந்தை, அதிகரிக்கும் கடன் நிலையில் தவிக்கிறேன். ஒப்பந்த வேலை சுரண்டல்” என தன் ஆதங்கத்தை வெளிபடுத்தும் மகிழன், 21 மாதங்கள் அரசு மருத்துவமனைகளில் வேலை பார்த்துள்ளார். 

மற்றொரு முதல் தலைமுறை மருத்துவரான அரவிந்த் 2019ம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்தவர். 2018-ம் ஆண்டு முதல் MRB தேர்வு நடைபெறாத நிலையில், நீண்ட காத்திருப்புக்கு பின் தனியார் மருத்துவமனியில் வேலை பார்த்துக் கொண்டே முது நிலை படிப்பிற்கான நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். கோவிட் பணியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து பணி இழந்தவர்களில் இவரும் ஒருவர். 

நிரந்தர பணி வழங்கப்படும் என ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. எந்து பணி பாதுகாப்பும் இல்லாத நிலையில் தங்களின் முழு உழைப்பையும் அளிக்கும் இவர்களின் உழப்பை சுரண்டுவதாகவே இந்த ஒப்பந்த பணி உள்ளது. 

பருவ மழை, பெருதொற்று மற்றும் இது போன்ற பிற சூழ்நிலைகளின் போது இவர்களின் களப்பணியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருந்தாலும், இவர்களின் கஷ்டங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைப்பதில்லை. 

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Shobana Radhakrishnan 121 Articles
Shobana Radhakrishnan is a Senior Reporter at Citizen Matters. Before moving to Chennai in 2022, she reported for the national daily, The New Indian Express (TNIE), from Madurai. During her stint at TNIE, she did detailed ground reports on the plight of migrant workers and the sorry-state of public libraries in addition to covering the renowned Jallikattu, Tamil Nadu Assembly Elections (2021) and Rural Local Body Polls (2019-2020). Shobana has a Masters degree in Mass Communication and Journalism from the Pondicherry Central University and a Bachelors in English Literature. She keenly follows the impact of development on vulnerable groups.