வெளிப்படைத்தன்மை, நடைமுறைப்படுத்தல் மற்றும் குடிமக்கள் ஈடுபாடு: 2022ல் வாழக்கூடிய சென்னை

சென்னைக்கான விருப்பப்பட்டியல்

Chennai birds eye view
மெரினா கடற்கரையின் கலங்கரை விளக்கத்திலிருந்து கழுகு பார்வையில் சென்னை நகரம். படம்: Wikimedia Commons/CC BY-SA 4.0

Translated by Sandhya Raju

கடந்த இரண்டு வருடங்களாக கோவிட்-19 தொற்று காரணமாக, அனைத்தும் முடங்கிப்போயின, ஆனால் இந்த புத்தாண்டில் குறைகளை களைந்து, நாம் அனைவரும் விரைவாக செயல்பட வேண்டும். 2022 ஆம் ஆண்டுக்கான விருப்பப் பட்டியல் இதோ:

நகரத்தின் தண்ணீர் மற்றும் நீர் நிலைகளின் மேலாண்மை

சில வருடங்கள் முன்பு, மழை நீர் சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டு, நன்றாகவும் அமல்படுத்தப்பட்டது. இதன் நல்விளைவை நாம் அனைவருமே அனுபவித்தோம். ஆனால், காலப்போக்கில் இது மாறி, தண்ணீர் தட்டுப்பாடு மீண்டும் தலைதூக்கியது. நீர் தட்டுப்பாட்டை தவிர்க்க மழை நீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் பரவலாக அமல்படுத்த வேண்டும்.

பல காலங்களாக நீர் நிலைக்கான திட்டங்கள் வரையப்பட்டாலும், ஆறுகள், குளங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றில் கழிவுகளும் பிளாஸ்டிக் குப்பைகளும் நிறைந்துள்ளன. இது போக, ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்டுள்ளன. இதனால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, கடும் வெள்ளத்திற்கும் வழி வகுக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, நமது இயற்கை வளங்களை பாதுகாத்து, கழிவுகளை அணுகும் முறையை மாற்ற வேண்டும்.


Read more: Zero-waste packaging: Help CAG build a list of shops that avoid plastic


மாசு மற்றும் கழிவுநீர் மேலாண்மை

நகரம் வளர வளர அதன் கழிவுகளும் அதிகரிக்கின்றன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இந்த அதிக சுமையை சமாளிக்க ஏதுவாக இல்லை, மேலும் நீண்ட காலத்திற்கு, STP கள் ஒரு நிலையான மாற்று இல்லை. கழிவு நீரை மறுசுழற்சி செய்ய அந்தந்த பகுதிகளில் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையங்கள் உள்ளன. ஏற்கனவே உள்ள அமைப்புகளை மறுசீரமைப்பதன் மூலமும் மற்றும் புதிய கட்டுமானங்கள் மூலமும் இவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

2019-ம் ஆண்டு பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இது அறிக்கையாக மட்டுமே உள்ளது வருந்தத்தக்கது. இந்த தடையை கடுமையாக முறையாக அமல் படுத்த வேண்டும் ; மேலும் இது நிலையான அமலாக்கமாக இருத்தல் வேண்டும். வேற்று பேக்கேஜிங் முறையை ஊக்குவித்து, இந்த முறை தழைக்க ஊக்குவிக்க வேண்டும். நமது பாரம்பரிய பேக்கேஜிங் முறைகளை மீண்டும் பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.

Plastic bags continue to be used widely by shopkeepers and consumers
மக்கள் தேவையான பைகளை எடுத்துச் செல்வது மூலம் பிளாஸ்டிக் உபோயகத்தை கட்டுப்படுத்த முடியும்.
படம்: லாஸ்யா சேகர்.

சட்டரீதியாக, கழிவுகளை மூலத்திலேயே நாம் பிரிக்க வேண்டும் ஆனால் யாரும் அவ்வாறு செய்வதில்லை. மூலப் பிரிப்பு, உரமாக்கல் (வீட்டு அல்லது சமூக மட்டத்தில்), மற்றும் மறுசுழற்சி ஆகியவை அன்றாட வழக்கமாக்க வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் மிகப்பெரிய (மீண்டும் நீடித்த) முயற்சியும் குடிமக்களின் மனநிலை மாற்றமும் தேவைப்படும்.

சாலை பாதுகாப்பு மற்றும் நிலையான போக்குவரத்து

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தங்கள் சாலை விதிகளை மீறுவதற்கான அபராதங்களை அதிகரித்துள்ளன. மேலும் சிறந்த இணக்கத்தை மேம்படுத்துவதற்கும் விபத்துக்கள் மற்றும் இறப்புகளைக் குறைப்பதற்கும் இது வழி வகுத்துள்ளது. ஆனால் இதனை அமல்படுத்துதல் தமிழகத்தில் இன்னும் தீவரப்படுத்தப்படவில்லை. சாலையில் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களைக் குறைப்பதற்கும், பூஜ்ஜிய இறப்புகள் (விஷன் ஜீரோ) நெருங்குவதற்கும் 2022 ஆம் ஆண்டு நாம் கடினமாக உழைக்க வேண்டும்.

நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை மிகவும் நிலையான, ஆரோக்கியமான மற்றும் சமமான போக்குவரத்து முறைகளாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆயினும், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களை நமது நகரங்களைத் திட்டமிடுபவர்களும் சாலைகளைப் பயன்படுத்துபவர்களும் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதுகிறார்கள்.

சற்றே பெரிய கார்பன் தடம் இருந்தாலும் பொதுப் போக்குவரத்து (பேருந்து, ரயில், ஷேர் ஆட்டோக்கள்), மற்றொரு நிலையான பயண முறையாகும். புறநகர் ரயில்கள், மெட்ரோ, பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் என சென்னையில் பொறாமைப்படக்கூடிய பொது போக்குவரத்து பயண இணைப்பு முறை உள்ளது, ஆனால் நாம் இவற்றை புறக்கணித்து வருகிறோம். முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பு, இயக்க அமைப்புகளின் ஒருங்கிணைப்பு, அதிக வரிகள் மற்றும் விலையுயர்ந்த பார்க்கிங் கட்டணங்கள் மூலம் தனியார் வாகனங்களை முடக்குதல் மற்றும் பொது போக்குவரத்தில் மேம்பட்ட பயனர் அனுபவம் ஆகியவை இந்த ஆண்டில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பகுதிகள் ஆகும்.


Read more: How can Chennai’s third master plan encourage sustainable transport?


மின்சார மேலாண்மை

தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) 2019-20 நிதியாண்டில் INR 1,01,173 கோடியை கூடுதல் கடன் சுமைக்கு ஆளானது. எரிசக்தி விநியோகத்தின் அதிக செலவு, அதிக தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்புகள் மற்றும் பில்லிங் மூலம் செலவை மீட்டெடுக்க இயலாமை ஆகியவை கடன் அதிகரிப்பதற்கான சில முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

தகவல் வெளிப்பாட்டின் பற்றாக்குறை, குறிப்பாக, நிதி நிலை மற்றும் தரவுகளை வெளியிடுவதில் தாமதம் ஆகியவை கவலை அளிக்ககூடியவற்றில் முக்கிய செயலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கட்டண ஆர்டர்களில் மொத்த வருவாய் தேவையை (ARR) தாக்கல் செய்வதன் மூலம் நிதி செயல்திறனைத் வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்றாகும். கடந்த மூன்று நிதியாண்டுகளில் ஏஆர்ஆர் தாக்கல் செய்யாத ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. ARR இன் வருடாந்திர தாக்கல் மற்றும் பங்குதாரர்களுக்கு தரவை அளிப்பது TANGEDCO இன் நிதி மாற்றத்திற்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். மேம்படுத்தப்பட்ட தகவல் வெளிப்படுத்தல் நுகர்வோர் பங்கேற்பை ஊக்குவிகப்பதோடு மின்சார நிர்வாகத்தையும் மேம்படுத்தும்.

அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் குடிமக்கள் ஈடுபாடு ஆகியவை நமது நகர செயல்பாட்டில் அருமையான தாக்கத்தை உருவாக்கும்.

[Read the original article in English here.]

Also read

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Sumana Narayanan 6 Articles
Sumana Narayanan leads the work on road safety at Citizen consumer & civic Action Group (CAG), a thirty-four-year-old non profit and non political organisation that works towards protecting citizens’ rights in consumer and environmental issues and promoting good governance processes including transparency, accountability and participatory decision-making.