பக்கிங்ஹாம் கால்வாய் அழகுபடுத்தல்: உண்மையான பிரச்சினைகளை தீர்க்குமா?

பக்கிங்ஹாம் கால்வாயை மீட்கும் வழிகள்

Buckingham canal chennai
லேண்டெக் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் வடிவமைத்த பக்கிங்ஹாம் கால்வாயில் முன்மொழியப்பட்டுள்ள குழந்தைகள் பூங்கா

Translated by Sandhya Raju

சென்னையின் சூழலியலில் முக்கிய பங்கு வகிக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பல ஆண்டுகளாக,அதிகாரிகளின் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது; பரவலான ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகள் மற்றும் கழிவுநீரை கொட்டுவது போன்ற நடவடிக்கைகாளால் அதன் ஆதார இருப்பை அச்சுறுத்தியுள்ளது. கடந்த காலங்களில், பல்வேறு அரசு துறைகள், கால்வாயை மீட்கும் திட்டத்தை பற்றி பேசி வந்தாலும், இது வரை எந்தவொரு மாற்றமும் இல்லை. ஆளும் திமுக அரசும், தங்களின் தேர்தல் அறிக்கையில், பக்கிங்ஹாம் கால்வாய் உள்பட அனைத்து நதிகளும் சுத்தப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஐடி எக்ஸ்பிரஸ்வேஅகழுபடுத்தப்படும் என்ற அறிவிப்பால், அதனோரம் அமைந்துள்ள கால்வாயும் புத்துயிர் பெறும் என மீண்டும் நம்பிக்கை எழுந்துள்ளது.

இப்போது கழிவுநீருக்கான ஒரு வழித்தடமாக உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை இப்படி சித்தரித்து பாருங்கள்: ஒரு மியாவாக்கி காடு, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, ஒரு சிற்பக் கூடம் மற்றும் ஒரு பாதசாரி பிளாசா. ஏட்டில் உள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியால் தொடங்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் அழகுபடுத்தும் திட்டம், விரைவில் கால்வாயின் குறுக்கே உள்ள ஐடி நடைபாதையை (ராஜீவ் காந்தி ஐடி எக்ஸ்பிரஸ்வே) மேம்பட்ட, நவீன பொழுதுபோக்கு இடங்களாக மாற்றும்.

தற்போதைய திட்டம்

லேண்ட்டெக் ஏஇபிசி பிரைவேட் லிமிடெட் வடிவமைத்துள்ள இந்த திட்டத்தின் செலவு சுமார் 20 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு நகரத்திறகான அமைப்பை இந்த எக்ஸ்பிரஸ்வே கொண்டதாக இல்லை என முதல் கட்ட தாள ஆய்வு காட்டுகிறது. இந்த பகுதியை சுற்றியுள்ள அடர்ந்த செடிகள், மற்றும் பராமரிப்பின்மை உண்மையில் சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக இதை மாற்றியுள்ளது. இந்த சவாலை போக்க, பொழுதுபோக்கு அம்சங்கள், பசுமை இடங்கள் என பல அம்சங்கள் இந்த திட்டத்தில் வடிமைக்கப்பட்டுள்ளது.

Miyawaki Forest along Buckingham Canal
கஸ்தூரிபாய் ரயில் தடம் முதல் திருவான்மியூர் ரயில் தடம் வரை 36000 மரக்கன்றுகள் நடப்பு செய்யப்பட்டு இந்த பகுதியை மியாவாக்கி காடாக சென்னை மாநகராட்சி மாற்றி வருகிறது. இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட பின்னர், நடைபாதைக்கும் மிதிவண்டிக்கும் என தனி டிராக் இருக்கும். படம்: ஆல்பி ஜான்/டிவிட்டர்

இந்த திட்டம் கீழ்கண்டவற்றை உள்ளடக்கும்:

  • நகர்ப்புற காடு மற்றும் நிலத்தடி நீர் மீட்பு மூலம் சுழலியல் மேம்படுத்தப்படும்.
  • பாதுகாப்பான பொது இடம் 
  • விளக்குள் நிறைந்த திறந்த வெளி பொது இடம்
  • பாதுகாப்பான நடைபாதை
  • நடைபாதை மேடை, சைக்கிள் டிராக், விளையாட்டு இடம், வெளிப்புற ஜிம் என பொது சுகாதாரத்தை மேம்பத்தும் நடவடிக்கைகள்.
  • திறந்த வெளி பிளாசா, நடவடிக்கை இடங்கள் என சமூக மேம்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகள்.

கால்வாயின் கிழக்கு பகுதியில், மியாவாக்கி காடு, சைக்கிள் டிராக், நடைபாதை, பார்க்கிங் வசதி, மேற்கு பகுதியில் ஆம்பிதியேட்டர், பாதசாரி பிளாசா மற்றும் குழந்தைகள் விளையாட்டு பகுதி ஆகியவை இருக்கும்.

Buckingham Canal beautification - Proposed urban plaza
லேண்டெக் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் வடிவமைத்த அர்பன் பிளாசாவின் ஒரு பகுதி

பக்கிங்ஹாம் கால்வாயின் உண்மையான பிரச்சனைகள்

பக்கிங்ஹாம் கால்வாய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட உப்பு நீர் வழிசெலுத்தல் கால்வாய் ஆகும், இது வட-தெற்கு திசையில் கோரமண்டல் கடற்கரைக்கு இணையாக செல்கிறது. நகரின் எல்லைக்குள், கொசஸ்தலையார், கூவம் மற்றும் அடையாறு நதிகளை இணைக்கும் நீர்வழி என்பதால் சென்னையின் உயிர்நாடியாக கருதப்படுகிறது.

Waste contamination of Buckingham Canal
கொடுங்கையூர் பகுதியில் பக்கிங்ஹாம் கால்வாய். படம்: மோகன் குமார் கருணாகரன்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், நகரங்களிடையே பொருட்களை கொண்டு செல்ல பக்கிங்ஹாம் கால்வாய் பயன்படுத்தப்பட்டது. பழைய புகைப்படங்களை பார்க்கும் போது, கட்டுமரம் செல்லும் காட்சியும், பசுமையும் அவ்வளவு ரம்மியமாக உள்ளது. ஆனால், காலப்போக்கில் நகர வளர்ச்சி, மாசு, கழிவு என அனைத்தும் இந்த கால்வாய் பகுதியை சேதமடைய செய்துவிட்டது. கால்வாயின் மேல் உயரச்செல்லும் எம்ஆர்டிஎஸ், மற்றும் பல ஆக்கிரமிப்புகள் அகலத்தை குறுக்கியதோடு அதன் கொள்திறனையும் கட்டுப்படுத்தியுள்ளது.


Read more: Can Buckingham Canal acquire new meaning for Chennaites?


தற்போதைய திட்டத்தின் கீழ் அழகுபடுத்தல் மேம்போக்காக மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது, ஆனால் மேலே குறிப்பிடபட்டுள்ள உண்மையான அடிப்படை பிரச்சினைகளை வேரூன்றி பார்க்கவில்லை.

“ஸ்மார்ட் சிட்டி முன்னெடுப்புகள் பாராட்டத்தக்கவை என்றாலும் தொலைநோக்கு பார்வையின்றி, வெறும் அழகுபடுத்தல் திட்டமாகவே மாறியுள்ளது. அடிப்படை பிரச்சினைகளை களையாமல் எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளும் பலனளிக்காது. பக்கிங்ஹாம் கால்வாய் பொருத்தவரை, தண்ணீர் ஓட்டமும் கழிவுகள் அல்லாமலும் இருத்தல் வேண்டும்,” என தனது தலையங்க கட்டுரையில் விவரித்துள்ளார் வி ஸ்ரீராம்

2018-ம் ஆண்டு. பக்கிங்ஹாம் கால்வாயை புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டு கால்வாய் மீது கண்கள் என்ற முயற்சியில், புறக்கணிக்கப்பட்ட நீர்வழிப்பாதையை மாற்றுவதற்கான ஒரு திறந்த யோசனைப் போட்டியைத் தொடங்கியது. பல்வேறு புதுமையான அணுகுமுறைகளை முன்மொழிந்த வெற்றி பெற்ற பதிவுகள் கால்வாஇ மட்டுமின்றி, ஒட்டுமொத்த காலநிலை நிலைத்தன்மையிலும் கவனம் செலுத்தும் வகையில் இருந்தன.

இந்த போட்டியில் வென்ற ஒரு குழுவான டீம் ஸ்பாஞ்ஜ், சுற்றுப்புற திட்டமிடல், பிராந்திய திட்டமிடல் மற்றும் நகரின் நீரியல் தேவைகளை ஒருங்கிணைத்து 4-படி நீர் மேலாண்மை அணுகுமுறையை முன்வைத்தது. “நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்தி, மழை நீர் சேகரித்து, நீர்நிலைகளை ரீசார்ஜ் செய்கிறது இந்த ஸ்பாஞ்ஜ் முறை.” என சிட்டிசன் மேட்டர்ஸ்-க்கு முன்பு தெரிவித்திருந்தார் டீம் ஸ்பாஞ்ஜ் குழுவின் உறுப்பினர் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பாளர், பிரவீன் ராஜ்.

இவர்கள் முன் வைத்த யோசனையில், கால்வாய் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள், உள்ளூர் அரசு, நிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்ததாக இருந்தது. சென்னையின் ஒட்டுமொத்த நீர்வள படுகையுடன் இணைக்கப்பட்டதாக இருந்தது.

ஐந்து உறுப்பினர்களை கொண்ட மும்பையை சேர்ந்த மற்றொரு வெற்றி அணியான ஸ்டூடியோபாட் குழுவும், மக்களை உள்ளடக்கிய யோசனையாக இருந்தது. மேலிருந்துகீழ் அல்லது கீழிருந்து மேல் அணுகுமுறை என இல்லாமல், “உள்ளூர் அமைப்புகள் மைய அமைப்புகளுடன் இணைந்து” வலுவான தீர்வுகளை அடைய செயல்படுமாறு ஒருங்கிணந்த அணுகுமுறையை முன்னிறுத்தியது.


Read more: Winning ideas to revive Buckingham Canal and make Chennai climate-proof


“சமூகத்தை பாதுகாவலராக வைத்திருப்பது தான் இங்கு முக்கிய யோசனை. பராமரிப்பில் சமூக பங்களிப்பு இருக்க வேண்டும். இதில் குடியிருப்பு வாசிகள், உள்ளூர் அரசு, தனியார் நிறுவனங்கள் பங்குதாரர்களாக இருப்பார்கள், ”என்று ஸ்டுடியோபாட் நகர வடிவமைப்பாளர் சதீஷ் சந்திரன் அப்போது நம்மிடம் கூறியிருந்தார்.

பக்கிங்ஹாம் கால்வாய் – மறுபரிசீலனை

மழைநீர் வடிகால்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளிலிருந்து வரும் நீர், கால்வாயில் அல்லது கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது. மனிதனால் உருவாக்கப்பட்டிருந்தாலும், நகரத்தின் மூன்று ஆறுகளை இணைப்பதால் நகரத்தின் சுற்றுச்சூழலை வடிவமைப்பதில் இது முக்கிய பங்கு வகித்தது. ஆனால், நகரமயமாக்கலால் கால்வாயின் நோக்கம் கடுமையாக மாறியுள்ளது.

தற்போதைய சூழலில், கால்வாயின் நோக்கம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கேள்வி எழுப்புகிறார். “போக்குவரத்திற்காக இந்த கால்வாய் கட்டப்பட்டது ஆனால் அது நிறைவேறவில்லை. பின்னர், கழிவுகளை கொண்டு செல்ல அரசு இதை மாற்றியது, அதுவும் நிறைவேறவில்லை. தற்போது, வெள்ளத்தை கட்டுபடுத்தும் உள்கட்டமைப்பாக கருதப்படுகிறது, இது எந்த அளவுக்கு உதவும் என தெரியவில்லை. உயர்ந்து வரும் கடல் அளவை பார்க்கும் போது, வரும் காலத்தில் கடல் நீர் நகரத்தை மூழ்கடிக்கலாம்.”

இந்த கருத்தை நகர்ப்புற வடிவமைப்பாளர் மற்றும் ஸ்பாஞ்ஜ் குழுவின் இணை நிறுவனர் பிரவீன் ராஜ் ஆமோதிக்கிறார். நகரத்தின் நீர் பற்றாக்குறை, வெள்ளம், உப்பு நீர் ஊடுருவல் மற்றும் சமூக-பொருளாதார சமத்துவமின்மையை சமாளிக்க ஒரு நீர்வளவியல் மற்றும் சமூக-சுற்றுச்சூழல் இணைப்பாக கால்வாயை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரவீன் மேலும் கூறுகிறார். நீண்ட நாளாக புறக்கணிக்கப்பட்ட கால்வாயை சென்னையின் சொத்தாக கருதியிருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்க முடியும்.

உலகம் முழுவதும், நீர் நிலைகளை சூழலியல் மற்றும் சமூக கலாச்சார சொத்தாக கருதி நகரங்கள் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் காண்கின்றன. இந்தியாவில், நகர கால்வாய்களை ஒரு சொத்தாக கருதாமல், வெறும் மழை நீர் மற்றும் கழிவுகளை கொண்டு செல்லும் கால்வாய்களாவே கருதுகிறோம்,” என மேலும் கூறுகிறார் பிரவீன்.


Read more: Can Buckingham Canal acquire new meaning for Chennaites?


இந்த அழகுபடுத்தல் நடவடிக்கை எந்த வித மாற்றத்தை கொண்டு வரும் என முன்கூட்டியே கூற முடியாது என்றாலும், கால்வாயை மீட்டெடுக்க பன்-நோக்கு பார்வை அவசியம் என நகர்ப்புற வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். ஹைட்ராலஜி, நிலையான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் என கால்வாயை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும்.

பல நீர் சம்பந்தப்பட்ட அபாயங்களை சென்னை எதிர்கொண்டு வரும் நிலையில், பருவ நிலை மாற்றம் இது இன்னும் மோசமடையச் செய்யும். கோடையில் தண்ணீர் பிரச்சனையும், மழைக்காலத்தில் வெள்ள அபாயமும் சென்னையில் சுழற்சி முறை என்றாகி விட்டது. இது போன்ற பருவ நிலை மாற்ற நிகழ்வில், சென்னையின் நீல-பச்சை அமைப்புகள் (இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்டவை) நீர் மற்றும் அதன் தொடர்புடைய அபாயங்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு ஒருங்கிணைந்த சமூக-கலாச்சார அமைப்பாக இதனை பார்ப்பது அவசியம் என வலியுறுத்தும் பிரவீன், வெளிப்புற தோற்றம் மட்டுமின்றி சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் என பல முனைகளில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கிய, நெகிழ்ச்சியான உள்கட்டமைப்பாக பார்க்க வேண்டும்.

“நிறுவன மற்றும் அடிமட்ட அளவிலான முயற்சிகள் மூலம் கால்வாயைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் சமூக மற்றும் ஜனநாயக பொறுப்பின் கூட்டு உணர்வு தேவை, ”என்கிறார் பிரவீன் ராஜ்.

[Read the original article in English here.]

மேலும் படிக்க:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.