Articles by Lakshmanan S

Lakshmanan S works in a multinational pharma company located in Chennai. He is interested in fitness activities such as cycling.

பண்டைய காலந்தொட்டு இன்று வரை மிதிவண்டிகள் மக்களால் அன்றாட போக்குவரத்திற்கும், உடல் பயிற்சிக்கும் பயன்படுத்தபடுகின்றது. இதனால் வரும் பல பயன்களை பின்வருமாறு பட்டியலிடலாம். மன ஆரோக்கியம் மேம்படுதல், பயணங்களில் பல புதிய மனிதர்களையும், புதிய இடங்களை சந்தித்தல், கவன குவிப்பு மேம்படுதல், நம் நுரையீரல் பலமடைதல், தேவையற்ற உடல் பருமன் அறவே நீக்கபடுதல், உடல் தசைகள் பலமடைதல், நோய் எதிர்ப்புத் திறன் கூடுதல் போன்ற பல. தலைக்கவசம், மிதிவண்டிக்கான பிரத்தயோக உடை அணிந்து பல ஆடவரும் பெண்டிரும் சாரை சாரையாக அதிகாலையில் விரைந்து செல்லும் காட்சியைக்காண சிலருக்குத்தான் நல்வாய்ப்பு கிட்டுகின்றது. நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்திடராங்கை தலைமையாகக் கொண்டு உலகமெங்கும் செயல்படும் பிவைசிஸ் எனப்படும் தன்னார்வல அமைப்பு “மிதிவண்டி மேயர்கள்” என்று சிலரை நியமனம் செய்திருக்கின்றது. 2030க்குள் உலகிலுள்ள மனிதர்களில் 50 சதவிகதமாவது அன்றாட போக்குவரத்திற்கு மிதிவண்டியை பயன்படுத்த வைப்பது அவர்களின் குறிக்கோள். தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை போன்ற நகரங்களில்…

Read more